அருந்ததியர்
அருந்ததியர் அல்லது சக்கிலியர் இலங்கை மற்றும் தமிழ் நாட்டில் வசித்து வரும் மிகவும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்கள் குழுவாகும். இவர்கள் தலித்து என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் ஆந்திராவிலிருந்து தெலுங்கு மொழி பேசும் மக்களுடன் தமிழ் நாட்டிற்கு குடிபெயர்ந்ததாக கருதப்படுகிறது.[1]
பொருளடக்கம் |
சக்கிலியர் மற்றும் அருந்ததியர் பெயர்க் காரணம் [தொகு]
தமிழக வேளிர் பிரிவினருள் அதியர் என்ற பிரிவினரும் உண்டு. இவர்கள் தகடூர் பகுதியை (இன்றைய தருமபுரி) ஆட்சி செய்தனர். இப்பகுதி வடுக நாடு என்றழைக்கப்பட்டது. இந்த அதியர் வழியில் வந்தவர்கள்தான் அருந்ததியர். அதியர் என்ற பெயர்தான் மருவி அருந்ததியர் என்ற பெயரானது. அதியர் குலத்து சிறந்த மன்னனை மா+அதியர் = மாதியர் என்றழைத்தனர். மாதியர் என்பது அருந்ததியருக்கு கொடுக்கப்பட்ட மற்றொரு பெயராகும்.[2]
விஸ்வநாத நாயக்கர் (1529-1564 ஆட்சியாண்டு) காலகட்டத்தில் பெரும் எண்ணிக்கையில் தெலுங்கர்கள் மதுரைப் பகுதியில் வந்து குடியேறினர். இவர்களுடன் அருந்ததியர்களும் வந்திருக்கலாம்.குறிப்பும் கிடைக்கிறது.[3]
இவர்களின் முக்கியத் தொழிலான துப்புரவுப்பணியாளர்கள் காரணமாக, தலித்துக்களின் உடைகளைக் கழுவும் சாதியினரோடு சேர்த்து மிகவும் தாழ்த்தப்பட்ட சாதிப்பிரிவில் அடக்கப்படுகின்றனர். வரலாற்றின் ஒரு காலப்பகுதியில், இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் ஒரு மக்கள் குழுவினர் பலவந்தமாகவும், சமயக் கட்டுப்பாடுகள் மூலமாகவும் இத்தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனடிப்படையில் இந்தியா முழுவதும் அருந்ததியருக்கு(சக்கிலியர்) இணையான சாதிகளைக் காணலாம். வட இந்தியாவின் சண்டாலா, பாங்கி போன்றவை உதாரணங்களாகும்.
இவர்களின் முக்கிய தொழில் துப்புரவுப்பணியாளர்கள் அகற்றல் என்றபடியால் தலித்துகள் உட்பட ஏனைய சாதியினர் இவர்களுடன் சேர்வதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். இவர்கள் துப்புரவுப்பணி தொழிலுக்கு மேலதிகமாக மேற்கு மற்றும் வட தமிழ்நாட்டில் விவசாயத் தொழிலாளிகளாகவும் ஈடுபடு்த்தப்படுகின்றனர். இவர்கள் இவர்களுக்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் வசிப்பது வழக்கமாகும்.
அருந்ததியர் மக்களின் தொழில் அன்று கிணற்றுப் பாசனத்தைக் கொண்டிருந்த விவசாயத்திற்குத் தேவையான பரியை மூட்டித் தருவது, போர்முனைகளுக்குத் தேவையான தோல்கருவிகளைத் தயாரிப்பது, விவசாயப் பணிகளில் ஈடுபடுவது, செருப்பு தைப்பது என பெரும்பாலும் தோல்பணியாளர்களாகவே அறியப்பட்ட இம்மக்கள், மின்சாரம்- பம்புசெட்- பிளாஸ்டிக்- ரப்பர்- என்று உருவான மாற்றங்களால் தங்களது பாரம்பரியத் தோல் தொழிலை இழந்து துப்புரவுப் பணியாளர்களாக சீரழிக்கப்பட்டுள்ளார்கள்.
சக்கிலியர், அருந்ததியர்கள் இவர்கள் 2009 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசு வழங்கிய 3 சதவீகித உள் ஒதுக்கிட்டின் படி அரசு கல்வி நிறுவனங்களிலும் மற்றும் வேலை வாய்ப்பிலும் இடம் கிடைக்கப்பட்டாலும்,தனியார் கல்வி நிறுவனங்களில் இவர்கள் கட்டணம் செலுத்தி படிக்க முடியா சூழ்நிலையில் உள்ளனர். ஒரு சிலர் தனியார் நிறுவனங்களில் சேர்ந்தாலும் அவர்களின் குடும்பம் கடன் சுமையில் சிக்கி மிகவும் அவதிபடுகின்றனர். தனியார் நிறுவனங்கள் இவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதில் தயக்கம் கட்டி மறுக்க படுகின்றனர். இதன் காரணமாக பட்ட படிப்பு முடித்தவர்கள் கூட தொழிலாளிகளாகவே இருக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
அரசியல் பங்களிப்புகள் [தொகு]
- வி.பி.துரைச்சாமி - தமிழ்நாடு சட்டப் பேரவைத் துணைத் தலைவர்.
அருந்ததிய சங்க அமைப்புகள் [தொகு]
- தமிழ்நாடு சாக்கிய அருந்ததியர் சங்கம்
- ஆதித்தமிழர் பேரவை
- அருந்ததியர் சங்கம்,
- அருந்ததியர் மகஜனசபை,
- தமிழ்நாடு அருந்ததியர் ஊழியர் சங்கம்,
- சமத்துவ சமாஜம்,
- டாக்டர் அம்பேத்கர் அருந்ததியர் சங்கம்,
- தமிழ்நாடு அனைத்து அருந்ததியர் சங்கக் கூட்டமைப்பு,
- மும்பை அருந்ததியர் சங்கம்,
- அருந்ததியர் கலை இலக்கியக் கழகம்,
- அருந்தமிழர் விடுதலை இயக்கம்.
- ஆதித்தமிழர் விடுதலை முண்ணனி
- புரட்சி புலிகள்
உசாத்துணை [தொகு]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ அருந்ததியரின் அவலம்
- ↑ Author: Marku அருந்ததியர்: வாழும் வரலாறு,
- ↑ Author: Marku அருந்ததியர்: வாழும் வரலாறு,
வெளியிணைப்புகள் [தொகு]
- முத்துக்கமலம் இணைய இதழில் வெளியான அருந்ததியர் இனமும் துப்புரவுப் பணியும் கட்டுரை
- மலம் அள்ளுதல் அருந்ததியரின் குலத்தொழிலா? கோ.ரகுபதி கட்டுரை
- அருந்ததியர் சமூக இயக்கமும் விடுதலைக்கான குரலும் கட்டுரை
- அருந்ததியர் அவலமும் தூங்கா நகரின் துயரமும் செய்தி
- Untouchability in Karacheri
- Tamil language article on night soil removal
- Life in the margins
- Place names in Sri lanka - Chakkili Kulam
- Place names in India - Sakkili Durg
- DNA studies comparing Sakkiliar with others within India