அருங்கலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அருங்கலம் [1][2][3] என்னும் இலக்கிய வழக்குச் சொல்லை நாம் அணிகலன் என்று வழங்கிவருகிறோம். 'கலம்' என்னும் சொல் பண்டபாத்திரங்கள் அனைத்தையும் உணர்த்தும் பொதுச்சொல். 'கலம் செய் கோ' [4] என்னும் தொடரில் 'கலம்' என்னும் சொல் குயவன் செய்யும் மண்பாண்டத்தை உணர்த்துவதைக் காணமுடிகிறது. இது சாதாரண பாண்டம் அல்லது பண்டம். அருங்கலம் என்பது அரிய பண்டம். இவை அணிகலன்கள்.[5] பொன்னும் மணியும் புனைந்து செய்யப்பட்டவை. அருங்கலம் செய்வோரைக் 'கலம் செய் கம்மியர்' [6] என்பர்.

இந்தத் தொடரைக்கொண்டு உருவாக்கப்பட்ட நூல் அருங்கலச் செப்பு

காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. பூவினுக்கு அருங்கலம் பொங்குதாமரை
    ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சு ஆடுதல்
    கோவினுக்கு அருங்கலம் கோட்டம் இல்லது
    நாவினுக்கு அருங்கலம் நமச்சிவாயமே (திருநாவுக்கரசர் தேவாரம் 4-ம் திருமுறை, நமச்சிவாயத் திருப்பதிகம்:(4:11:3)

  2. தீங்குரல்...கின் அரிக்குரல் தடாரியொடு
    ஆங்கு நின்ற எற்கண்டு
    சிறிதும் நில்லான் பெரிதுங் கூறான்
    அருங்கலம் வரவே அருளினன் வேண்டி
    ஐயென உரைத்தன்றி நல்கித் (புறநானூறு, பாடியவர்: மதுரை நக்கீரர்.பாடப்பட்டோன்: சோழநாட்டு பிடவூர்கிழார் மகன் பெருஞ்சாத்தன்.
    திணை: பாடாண். துறை: கடைநிலை.

  3. மான அருங்கலம் நீக்கி இரவென்னும்
    ஈன இளிவினால் வாழ்வேன்மன் (நாலடியார், 40; அறத்துப்பால் – துறவற இயல்–அறன் வலியுறுத்தல்)

  4. புறநானூறு 256
  5. தத்தம் கலங்களுள் கையுறை என்று இவற்கு ஒத்தவை ஆய்ந்து அணிந்தார். - கலித்தொகை 84
  6. மணிமேகலை - 25-124
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருங்கலம்&oldid=3449441" இலிருந்து மீள்விக்கப்பட்டது