அரிசி வாளி அறைகூவல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அரிசி வாளி சவால் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அரிசி வாளி அறைகூவல் (Rice Bucket challenge) என்பது விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான அறைகூவல் ஆகும். இதை இந்தியாவை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் ஐஸ் வாளி அறைகூவலுக்கு மாற்றாக தொடங்கினார்.[1]

நோக்கம்[தொகு]

இந்தியாவில் ஒரு வேளை உணவுக்கும் வழியில்லாத ஏழை மக்களின் பசி நோயைப் போக்கும் விதமாக ஐதராபாத்தைச் சேர்ந்த மஞ்சுலதா கலாநிதி என்பவர் 24 ஆகஸ்டு 2014 அன்று தொடங்கி வைத்தார். வழங்கும் சக்தி படைத்த யாராயினும், வசதி இல்லாத ஏழை ஒருவருக்கு, ஒரு வாளி அரிசி கொடுக்க வேண்டும் என்பதே இவ்வறைகூவலின் நோக்கம்.

இதன் வாயிலாக ஆயிரக்கணக்கான கொடையாளர்கள் இலட்சக்கணக்கான ஏழை மக்களின் பசியைப் போக்க உதவுகின்றனர் [2]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரிசி_வாளி_அறைகூவல்&oldid=3503467" இலிருந்து மீள்விக்கப்பட்டது