அரசியல் யாப்பு நீதிமன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அரசியல் யாப்பு நீதிமன்றம் (constitutional court) என்பது நாடொன்றின் அரசியலமைப்புக் குறித்த சட்டங்களை ஆராயும் ஓர் உச்ச நீதிமன்றம் ஆகும். நாடாளுமன்றங்களில் சமர்ப்பிக்கப்படும் சட்ட மூலங்கள் அரசியலமைப்புக்கு ஏற்றதா அல்லது முரணானதா என்பதை அரசியல் யாப்பு நீதிமன்றம் தீர்மானிக்கும்.

உலகின் பெரும்பாலான நாடுகள் தனியான அரசியல் யாப்பு நீதிமன்றம் ஒன்றைக் கொண்டிருப்பதில்லை, பதிலாக அந்நாட்டின் உச்ச நீதிமன்றமே அரசியலமைப்பு முரண்பாடுகளை விசாரணை செய்து தீர்ப்பளிக்கும். ஆஸ்திரியாவே முதன் முதலாக தனியானதொரு அரசியல் யாப்பு நீதிமன்றத்தை நிறுவியது. 1920 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்நீதிமன்றம் 1945 ஆம் ஆண்டில் கலைக்கப்பட்டது. இலங்கையில் 1972 - 1978 காலப்பகுதியில் தனியானதொரு அரசியல் யாப்பு நீதிமன்றம் நடைமுறையில் இருந்தது.

பட்டியல்[தொகு]

தனியானதொரு அரசியல் யாப்பு நீதிமன்றம் உள்ள நாடுகள்:

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]