அரசதனியுரிமை
ஒரு குறிப்பிட்ட பண்டம் அல்லது சேவைகள் தொடர்பில் சந்தையானது போட்டி எதுவுமின்றி முழுவதுமாக அரச துறையால் கட்டுப்படுத்தப்படுமாயின்,அத்தகைய நிலமையினை பொருளியலில் அரசதனியுரிமை அல்லது அரசமுற்றுரிமை (government monopoly) எனப்படும்.இங்கு போட்டியானது சட்ட கட்டுப்பாடின் மூலம் நீக்கப்படும், இதன் காரணமாக சந்தையில் வேறு நிறுவனங்கள் காணப்படாது. இந் நிலையிலிருந்து government-granted monopoly வேறுபடும். இங்கும் பண்டம் அல்லது சேவைகள் தொடர்பில் தனியுரிமை காணப்படும் இத் தனியுரிமை அரசினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தனியார் நிறுவனத்திற்கு சட்டக் கட்டுப்பாடுகளுடன் அரசால் வழங்கப்படும். இலங்கையில் சிகரட் உற்பத்தி அரச தனியுரிமையானது. இது அரசாங்கத்தின் எந்த ஒரு மட்டத்தினாலும் (தேசிய,மாகாண,மாவட்ட.) நடாத்தப்படலாம்,
உதாரணங்கள் [தொகு]
பல நாடுகளில் காணப்படும் அஞ்சல் சேவைகள், சமூகநல சேவைகள், தொடர் வண்டி சேவைகள் போன்றவைகள் அரச தனியுரிமையின் உதாரணங்களாகும்.
இக் காலகட்டத்திலே சந்தையில் அரச தனியுரிமை இல்லாது அழிக்கப்படுவதும் தனியார்மயமாக்கல் துரிதப்படுத்தப்படும் போக்கும் காணப்படுகின்றது