அயனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அயன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நைத்திரேற்று அயனின் ஏற்றவழுத்தம். (NO3). தனியொழுக்கு கொண்ட சமவழுத்தத்தைக் காட்டும் முப்பரிமாண கட்டமைப்பு.

அயனி என்பது ஈழத்தில் அயன் (ion) என்று வழங்கப்படுகிறது.

ஏற்றம் பெற்ற அணு அல்லது அணுக்கூட்டம் அயனி எனப்படும்.அணுக்கள் இயற்கையில் தம் உறுதி நிலையைப் பேணுவதற்காக மேலோட்டிலுள்ள எதிர்மின்னிகளை இழந்தோ ஏற்றோ அயனாக்கம் அடைகின்றன. அயனிகளில் புரோத்தன்களின் எண்ணிக்கை இலத்திரன்களின் எண்ணிக்கைக்குச் சமனாகக் காணப்படுவதில்லை.

நேரயனி (கற்றயன்), எதிரயனி (அன்னயன்) என ஏற்றத்தின் தன்மையில் வேறுபிரிக்கலாம். வேறொரு வகையில் ஓரணுவயனி( en:monatomic ion ) பல்லணுவயனி( en:polyatomic ion) எனவும் பிரிக்கப்படும்.

அணுவொன்று ஏற்றம் பெறுதல்[தொகு]

எ.கா:

  • Na அணு. இதன் இறுதி வெளியான ஓடு ஒரு தனி எதிர்மின்னியைக் (எலக்ட்ரானை/இலத்திரனை) கொண்டது. இதன் மற்றைய உள்ளான இரு ஓடுகள் உள்ளிருந்து வெளியாக முறையே 2, 8 எதிர்மின்னியைக் (இலத்திரனை/எலக்ட்ரானை) கொண்டு நிரம்பியதாகக் காணப்படும். எனவே இலகுவாக ஈற்று ஓட்டு எதிர்மின்னியை (இலத்திரனை/எலக்ட்ரானை) இழந்து Na+ அயனியை ஆக்கும்.
Na → Na+ + e
  • Cl அணு. இதன் இறுதி ஓடு ஏழு எதிர்மின்னிகளைக் (இலத்திரன்களை/எலக்ட்ரான்களை) கொண்டது. ஏழு எதிர்மின்னிகளை (இலத்திரன்களை/எலக்ட்ரான்களை) இழந்து உறுதியடைவதை விட ஒரு எதிர்மின்னியை (இலத்திரனை/எலக்ட்ரானை) ஏற்று தனது இறுதி ஓட்டை நிரப்புவதால் உறுதியடைவது இலகு. எனவே ஓர் எதிர்மின்னியைப் (இலத்திரனை/எலக்ட்ரானை) பெறுவதன் மூலம் Cl- அயனியை ஆக்கும்.
Cl + eCl

பொதுவான அயனிகள்[தொகு]

பொதுவான நேரயனி
பொதுப் பெயர் குறியீடு வேறு பெயர்
எளிய நேரயனிகள்
அலுமினியம் Al3+
கால்சியம் Ca2+
தாமிரம்(II) Cu2+ குப்ரிக்
ஐட்ரசன் H+
இரும்பு(II) Fe2+ ஃபெர்ரஸ்
இரும்பு(III) Fe3+ ஃபெர்ரிக்
மெக்னீசியம் Mg2+
பாதரசம்(II) Hg2+ மெர்க்குரிக்
பொட்டாசியம் K+
வெள்ளி Ag+
சோடியம் Na+
பல்லணுக் கற்றயனி
அம்மோனியம் NH+4
ஹைட்ரோனியம் H3O+
பாதரசம்(I) Hg2+2 mercurous
பொதுவான எதிரயனி
பொதுப் பெயர் குறியீடு வேறு பெயர்
எளிய எதிரயனிகள்
குளோரைடு Cl
ஃப்ளூரைடு F
ஆக்சைடு O2−
ஆக்சோ எதிரயனிகள்
கார்பனேட் CO2−3
ஐட்ரசன் கார்பனேட் HCO3 இருகாபனேற்று
ஐட்ராக்சைடு OH
நைட்ரேட் NO3
பாஸ்பேட் PO3−4
சல்ஃபேட் SO2−4
கரிம அமிலங்களிலிருந்து கிடைக்கும் எதிரயனிகள்
அசிட்டேட் CH3COO எத்தனோயேட்
ஃபார்மேட் HCOO மெத்தனோயேட்
ஆக்சலேட் C2O2−4 ஈத்தேன்டையோயேட்
சயனைடு CN
"http://ta.wikipedia.org/w/index.php?title=அயனி&oldid=1755072" இருந்து மீள்விக்கப்பட்டது