அம்மாவின் கைப்பேசி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்மாவின் கைப்பேசி
அம்மாவின் கைப்பேசி திரைப்படத்தின் முதல் பார்வை
இயக்கம்தங்கர் பச்சான்
கதைதங்கர் பச்சான்
இசைரோகித் குல்கர்னி
நடிப்புசாந்தனு பாக்கியராஜ்
இனியா
ஒளிப்பதிவுதங்கர் பச்சான்
படத்தொகுப்புகிஷோர்
கலையகம்தங்கர் திரைகளம்
மேக்ஸ்ப்ரோ என்டர்டெய்னர்ஸ்
வெளியீடுநவம்பர் 13, 2012 (2012-11-13)
நாடு இந்தியா
மொழிதமிழ்

அம்மாவின் கைப்பேசி (English :Mothers Mobile) தங்கர் பச்சான் இயக்கத்தில் கே. பாக்கியராஜின் மகனும் நடிகருமான சாந்தனு மற்றும் இனியா நடித்து நவம்பர் 13, 2012 அன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1]

விளக்கம்[தொகு]

தங்கர் பச்சான், தான் எழுதிய அம்மாவின் கைப்பேசி என்ற நாவலை திரைப்படத்திற்கு ஏற்றார் போல் அமைத்துள்ளார்.[2] மேலும் இத்திரைப்படத்தின் கதாநாயகனாக சாந்தனு நடிக்க, செல்வி எனும் கதாபாத்திரத்தில் இனியா நடிக்கிறார். இதில் முக்கிய கதாபாத்திரமான அம்மா வேடத்தில் நடித்துள்ளவர் காக்கும் கரங்கள் மற்றும் தனிப் பிறவி ஆகிய படத்தில் நடித்த ரேவதி என்ற பழம்பெரும் நடிகை.[3] இத் திரைப்படத்தின் கதைக்கு ஏற்ப ஒரு காட்சியில் சாந்தனுவை இனியா நெருங்கி உதட்டுடன் உதடு சேர்த்து முத்தம் கொடுப்பது போல் படமாக்கப்பட்டுள்ளது.[4][5]

நடிப்பு[தொகு]

ஒலிச்சுவடுகள்[தொகு]

அம்மாவின் கைப்பேசி
ஒலிப்பதிவு அம்மாவின் கைப்பேசி
ரோஹித் குல்கர்னி
வெளியீடுஅக்டோபர் 1 - 2012
ஒலிப்பதிவு2012
இசைப் பாணிதிரைப்பட இசையமைப்பு
மொழிதமிழ்
இசைத்தட்டு நிறுவனம்சரிகமா
இசைத் தயாரிப்பாளர்ரோஹித் குல்கர்னி

அம்மாவின் கைப்பேசி திரைப்படத்தின் இசை புதுமுக இசையமைப்பாளர் ரோஹித் குல்கர்னி மூலம் அமைக்கப்பட்டது. மேலும் சென்னை சத்தியம் சினிமாவில் அக்டோபர் 1 2012 ஆம் தேதி அன்று ஒலிதம் (Audio) வெளியிடப்பட்டது. மற்றும் பல புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர்களும் கலந்து கொண்டனர். அந் நிகழ்வில் ””என்ன செஞ்சிப் போற...” என்ற பாடலின் முன்னோட்டம் காட்டப்பட்டு நல்ல வரவேற்பு கிடைத்தது.[6]

பாடல் வரலாறு பட்டியல்

பாடல் பட்டியல்
# பாடல்வரிகள்பாடகர்கள் நீளம்
1. "என்ன செஞ்சிப் போர"  நா. முத்துக்குமார்ராஜீவ் சுந்தரேசன் 4:34
2. "அம்மா தான்"  Ekadesiஹரிசரன் 4:28
3. "நெஞ்சில் ஏனோ இன்று (பெண்)"  Ekadesiஹரிணி 5:30
4. "நெஞ்சில் ஏனோ இன்று (ஆண்)"  Ekadesiஹரிசரன் 5:32
5. "ராஜபாட்டை"  நா. முத்துக்குமார்புஸ்பவனம் குப்புசாமி, ராகினிஸ்ரீ 4:54
6. "தலை முதல் பாதம் வரை"   Instrument 4:12
7. "அம்மாவின் கைப்பேசி தீம்ஸ் 1"   Instrument 2:27
8. "அம்மாவின் கைப்பேசி தீம்ஸ் 2"   Instrument  
மொத்த நீளம்:
32:53

ஆதாரம்[தொகு]

  1. அம்மாவின் கைப்பேசி
  2. "தினமலர் முன்னோட்டம் » அம்மாவின் கைப்பேசி". பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 12, 2012.
  3. "அம்மாவின் கைப்பேசியில் எம்ஜிஆருடன் நடித்த நடிகை!". Archived from the original on செப்டம்பர் 10, 2012. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 12, 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Shanthnoo-Iniya get intimate in 'Ammavin Kaipesi'Google KOLLYWOOD GOSSIPS»". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 12 நவம்பர் 2012.
  5. "அம்மாவின் கைப்பேசியில் சாந்தனு இனியா முத்தக்காட்சி!". பார்க்கப்பட்ட நாள் 12 நவம்பர் 2012.
  6. "Ammavin Kaipesi audio launched". Archived from the original on 2012-10-05. பார்க்கப்பட்ட நாள் 12 நவம்பர் 2012.

வெளி இணைப்பு[தொகு]