அம்பிகாபதி (திரைப்படம், 1937)
| அம்பிகாபதி | |
|---|---|
| இயக்குனர் | எல்லிஸ் ஆர். டங்கன் |
| தயாரிப்பாளர் | எம். எஸ். தொட்டண்ணா செட்டியார் சேலம் சங்கர் பிலிம்ஸ் |
| நடிப்பு | எம். கே. தியாகராஜ பாகவதர் பி. வி. ரெங்காச்சாரி செருகளத்தூர் சாமா என். எஸ். கிருஷ்ணன் டி. எஸ். பாலைய்யா எம். ஆர். சந்தானலக்ஸ்மி டி. ஏ. மதுரம் எஸ். எஸ். ராஜமணி பி. ஆர். மங்களம் |
| இசையமைப்பு | பாபநாசம் சிவன் |
| வெளியீடு | திசம்பர் 11, 1937 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
அம்பிகாபதி 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எல்லிஸ் ஆர். டங்கன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர், பி. வி. ரெங்காச்சாரி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
ராஜா மகளை புலவரின் மகன் காதலிப்பதே கதை. இதை ரோமியோ ஜூலியட் வடிவில் படமாக்கினார் எல்லிஸ் டங்கன். இப்படம் கவித்துவமாக எடுக்கப்பட்டதால் பலத்த வரவேற்பு பெற்றது. தியாகராஜ பாகவதர், எம்.ஆர். சந்தானலட்சுமி நடித்தனர். இதில் சிறுகளத்தூர் சாமா, ரங்காச்சாரி தவிர கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் முக்கியமானவர். பாகவதரின் பாடல்களுக்காகவே இப்படம் ஒரு ஆண்டு காலம் ஓடியது. அது மட்டுமல்ல, ஆங்கிலப் படங்களுக்கு இணையான முத்தக் காட்சியும் இப்படத்தில் இடம்பெற்றிருந்தது. தமிழ் சினிமாவில் இடம்பெற்ற முதல் முத்தக் காட்சி இதுதான். இயக்கியது டங்கன் என்பதால்தான் தைரியமாக அந்த காட்சியை படமாக்க முடிந்தது.