அமீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அமைன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அமைனின் பொதுக் கட்டமைப்பு

அமீன் (amine) என்பது, ஒரு கரிமச் சேர்வையும், செயற்பாட்டுக் கூட்டமும் ஆகும். இது தனியிணை ஒன்றுடனான ஒரு அடிப்படை நைதரசன் அணுவைக் கொண்டது. அமீன்கள் அமோனியாவிலிருந்து பெறப்படுவதாகும். இங்கே நைதரசன் அணுவிலிருக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஐதரசன் அணுக்கள் அல்கைல் அல்லது ஏரைல் கூட்டங்களினால் மாற்றப்படுகின்றன. R-C(=O)NR2 என்னும் அமைப்பில் உள்ள ஒரு காபொக்சைலுக்கு அருகில் உள்ள நைதரசன் அணுவொன்றைக் கொண்ட சேர்வை அமைடு எனப்படுகின்றது. இது வேறு வேதியியல் இயல்புகளைக் கொண்டது. அமினோ அமிலங்கள், மும்மெத்தைல் அமைன், அனிலைன் என்பன முக்கியமான சில அமைன்கள் ஆகும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=அமீன்&oldid=1745016" இருந்து மீள்விக்கப்பட்டது