அமெரிக்கப் பேரேரிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
விண் வெளியில் இருந்து எடுத்த ஐம் பேரேரிகளின் படம்

அமெரிக்கப் பேரேரிகள் என்பன வட அமெரிக்காவில் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கும் கனடாவுக்கும் இடையே உள்ள வடகிழக்கு எல்லையில் அமைந்துள்ள ஐந்து மிகப்பெரிய நன்னீர் ஏரிகளைக் குறிக்கும். நில உலகில் உள்ள நன்னீர் ஏரிகள் யாவற்றினும் பரப்பளவால் மிகப்பெரிய ஏரிக் கூட்டம் இவையே. செயற்கைத் துணைக்கோள் (செயற்கைமதி) வழி பெற்ற ஒளிப்படத்தில் இவ்வேரிகளின் அமைப்பைப் பார்க்கலாம். 10,000 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த உறைபனி காலத்தின் இறுதியில் பனி படலங்கள் உருகிய நீர் நிரப்பப்பட்டு உருவானது.இந்த ஏரிகள் அதன் பகுதி வர்த்தகத்தில் ஒரு முக்கிய ஆதாரமாக உள்ளது.1909ன் எல்லை-நீர் ஒப்பந்தப்படி இதன் எல்லை நெடுகிலும் வலுவூட்டல்கள் அல்லது போர் கப்பல்கள் ஆக்கிரமிப்புக்கள் இருக்காது என ஒத்துக்கொள்ளப்பட்டது.

ஏரிகள்[தொகு]

அந்த 5 ஏரிகளின் பெயர் எர்ஐ,ஹியூரோன்ஸ்,மிச்சிகன்,ஒண்டாரியோ மற்றும் சுப்பீரியர் ஆகும். இந்த ஏரிகளின் நடுவே சுமார் 35,000 தீவுகள் அமைதுள்ளன. இவற்றுள் ஹியூரான் ஏரியில் உள்ள மானிட்டோலின் தீவு உலகில் உள்ள உட்பகுதித் தீவுகளிள் யாவற்றினும் மிகப்பெரியதாகும்.

உலகில் உள்ள நன்னீரில் சுமார் 20% இந்த ஐம்பெரும் ஏரிகளில் உள்ளது (22,812  சதுர கிலோ மீட்டர்). அதாவது 22.81 குவாட்ரில்லியன் லீட்டர் நீர் ஆகும். இவ் வேரிகளில் உள்ள நீரை அமெரிக்காவில் தொடர்ச்சியாய் உள்ள 48 மாநிலங்களில் ஊற்றினால் 2.9 மிட்டர் உயரம் (9.5 அடி உயரம்) நீர் நிற்கும் என்று கூறலாம். ஐந்து ஏரிகளின் மொத்தப் பரப்பு 244,100 சதுர கிலோ மீட்டர் ஆகும். இப் பரப்பளவானது அமெரிக்காவின் நியூயார்க், நியூஜெர்சி, கனெக்டிகட், ரோடே ஐலண்ட், மாசாச்சுசெட், வெர்மாண்ட் மற்றும் நியூ ஹாம்ஷயர் ஆகிய மாநிலங்களின் மொத்தப் பரப்பை விட அதிகமாகும்.மேலும் இது ஐக்கிய நாடுகளின் மொத்த பரப்பளவை விட அதிகம்.

எர்ஐ ஏரி ஹியூரான் ஏரி மிச்சிகன் ஏரி ஒன்ட்டாரியோ ஏரி பெரிய ஏரி
பரப்பளவு 9,910 சதுர மைல் (25 கிமீ2) 23,000 சதுர மைல் (60 கிமீ2) 22,300 சதுர மைல் (58 கிமீ2) 7,340 சதுர மைல் (19 கிமீ2) 31,700 சதுர மைல் (82 கிமீ2)
கொள்ளளவு 116 cu mi (480 km3) 850 cu mi (3 km3) 1,180 cu mi (4 km3) 393 cu mi (1 km3) 2,900 cu mi (12 km3)
உயரம் 571 அடி (174 மீ) 577 அடி (176 மீ) 577 அடி (176 மீ) 246 அடி (75 மீ) 600.0 அடி (182.9 மீ)
சராசரி ஆழம் 62 அடி (19 மீ) 195 அடி (59 மீ) 279 அடி (85 மீ) 283 அடி (86 மீ) 483 அடி (147 மீ)
அதிகபட்ச ஆழம்[1] 210 அடி (64 மீ) 748 அடி (228 மீ) 925 அடி (282 மீ) 804 அடி (245 மீ) 1,335 அடி (407 மீ)

புவியியல்[தொகு]

பேரேரிகள் பகுதியில் இந்த ஐந்து பெரிய ஏரிகள் மட்டுமின்றி ஆயிரக்கணக்கான சிறு ஏரிகளும் உள்ளன. இந்த ஐந்து பெரிய ஏரிகளும் தனித்தனிப் பகுதிகளில் இருந்தாலும் இவை நீர்வழிகளால் இணைந்திருக்கின்றன. சுப்பீரியர் ஏரியில் இருந்து நீர் உரான் மற்றும் மிச்சிகன் ஏரிக்கும் தெற்கில் ஏரீ ஏரிக்கும் பின்னர் கடைசியாக வடக்கில் ஒண்ட்டாரியோ ஏரிக்கும் செல்கிறது. இந்த ஐந்து ஏரிகளுள் மிச்சிகன் ஏரி மட்டுமே ஐக்கிய அமெரிக்காவுக்குள் முழுவதுமாக உள்ளது. மற்ற நான்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் பொதுவான எல்லைகளாக உள்ளன.

Map of the Great Lakes/St. Lawrence Watershed

ஆறுகள்[தொகு]

  • சிக்காகோ ஆறும் கலுமெட் ஆறும் இப்பேரேரிகளின் நீர்வழிகளை மிசிசிப்பி பள்ளத்தாக்கு நீர்வழிகளுடன் இணைக்கின்றன. இது மனிதனால் உருவாக்கப்பட்ட கால்வாய்களின் மூலமாக செய்யப்பட்டுள்ளது.
  • சுப்பீரியர் ஏரியையும் உரான் ஏரியையும் செயிண்ட். மேரிஸ் ஆறு இணைக்கிறது.
  • உரான் ஏரியையும் செயிண்ட். கிளேர் ஏரியையும் செயிண்ட். கிளேர் ஆறு இணைக்கிறது.
  • டெட்ராயிட்டு ஆறு செயிண்ட் கிளேர் ஏரியையும் ஏரீ என்னும் ஏரியையும் இணைக்கிறது.
  • நயாகரா ஆறு ஏரீ ஏரியையும் ஒண்ட்டாரியோ ஏரியையும் இணைக்கிறது.
  • செயிண்ட் லாரன்சு குடாவினையும் ஒண்ட்டாரியோ ஏரியையும் செயிண்ட் லாரன்சு ஏரி இணைக்கிறது

பெயர் காரணம்[தொகு]

எர்ஐ ஏரி[தொகு]

எர்ஐ பழங்குடி, இரோகோயியன் வார்த்தை எர்ஐகோனின் ஒரு சுருக்கப்பட்ட வடிவம் ஆகும்.

ஹியூரோன்ஸ் ஏரி[தொகு]

வெய்ன்டாட் அல்லது ஹியூரோன்ஸ் என்பது இப்பகுதியில் வசிப்பவர்களுக்கு ஒரு பிரஞ்சு கண்டுபிடிப்பாளர்கள் வைத்த பெயர்

மிச்சிகன் ஏரி[தொகு]

ஓஜிபவா வார்த்தையான மிக்சிகாமியிலிருந்து (பெரிய நீர் அல்லது பெரிய ஏரி) இருந்து வந்தது.

ஒண்டாரியோ ஏரி[தொகு]

பளபளப்பான கடல் என பொருட்படும் வையான்டட் வார்த்தையான ஆண்டடரியோல் இருந்து வந்தது

சுப்பீரியர் ஏரி[தொகு]

பிரஞ்சு கால அரசுக்கான ஆங்கில மொழிபெயர்ப்பான சுப்பீரியர் ஆகும்.

நில பண்பியல்[தொகு]

பேரேரிகளின் வயது இன்னும் நிச்சயமாக உறுதியாக இல்லை.7,000 முதல் 32,000 ஆண்டுகள் வரை இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது.தண்ணீர், 14,000 ஆண்டுகளுக்கு முன்பு பனி விலகும்போது நிரம்பத் தொடங்கியது. பொதுவாக ஏரி எர்ஐ 7,000 ஆண்டுகளுக்கு முன்பும், சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு ஒண்டாரியோ ஏரியும் அது அதன் தற்போதைய நிலையை அடைந்தது.மற்றும் 3,000 ஆண்டுகளுக்கு முன்பு ஹியூரோன்ஸ், மிச்சிகன், மற்றும் சுப்பீரியர் ஏரிகள் உருவானது.

சூழியல்[தொகு]

வரலாற்று ரீதியாக,பேரேரிகள் பல்வேறு வன சுற்றுப்புறப்ப்றத்தால் சூழப்பட்டுள்ளது.தற்போது நகரமயமாக்கல், மற்றும் விவசாய பயன்பாட்டுக்கு எற்றார் போல் அதன் நிலை மாறிவிட்டது. 21 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், சுப்பீரியர் ஏரியின் கரைகளில் 91% காட்டுப்பகுதியாக இருந்தது.ஹியூரோன்ஸ் ஏரி 68%, ஒண்டாரியோ ஏரி 49%, மிச்சிகன் ஏரியில் 41%, மற்றும் எர்ஐ ஏரி 21% என நகரமயமாக்கலால் மிக சுருங்கிவருகின்ட்றது.இந்த காடுகளில் குறைந்தது 13 வன உயிரினங்கள் ஐரோப்பியர்கள் வருகைக்கு பின் இருந்து அழிந்து விட்டது அல்லது ஆபத்தான நிலையில் உள்ளது என்று ஆவணங்கள் தெரிவிக்கின்றது. இதற்கிடையில், கவர்ச்சியான மற்றும் ஆக்கிரமிக்கும் உயிரினங்களை அறியப்பட்டுள்ளன.

மாசுபடுதல்[தொகு]

மாசுபடுதலால் இங்குள்ள நீர்வாழ் உணவு சங்கிலிகள், மீன் மக்கள், மற்றும் மனித உடல் பாதிக்கப்பட்டுள்ளது. பேரேரிகளின் சூழலியல் மேலாண்மை மேம்பாடு 1960 மற்றும் 1970 களில் தொடங்கியது. 1960 களில், கிளவ்லேண்ட், ஓஹியோவில் கைஹோஹா நதி மீது எண்ணெய்,இரசாயனங்கள், மற்றும் குப்பை கலவையை கொண்ட ஒரு எரியக்கூடிய பழுப்பு படலம் கலந்தது. 1972 ல் அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சன் முதல் அமெரிக்க சுத்தமான நீர் சட்டம் கையெழுத்திடப்பட்டது.இச்சட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாக கனடா மற்றும் அமெரிக்கா இணைந்து 1980ல் இரு தேசிய கிரேட் லேக்ஸ் நீர் தர ஒப்பந்தம் மூலம் தொழில்துறை மற்றும் நகராட்சி மாசு வெளியேற்றத்தை பெருமளவு குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

பொருளாதாரம்[தொகு]

நீர்வழிப் போக்குவரத்து[தொகு]

இப்பேரேரிகள் பெருமளவிலான சரக்குப் போக்குவரத்திற்குப் பயன்படும் முக்கிய நீர்வழிகளாக உள்ளன. பேரேரிகள் நீர்வழி என்பது இந்த ஏரிகள் அனைத்தையும் இணைக்கிறது. சிறிய அளவிலான செயிண்ட் லாரன்சு கடல்வழியானது இவ் ஏரிகளை அட்லாண்டிக் பெருங்கடலுடன் இணைக்கிறது.

2002-ஆம் அண்டில் 162 மில்லியன் டன் சரக்கானது இந்த ஏரிகளின் வழியே கொண்டு செல்லப்பட்டது. இரும்புத்தாது, உணவு தானியங்கள், பொட்டாஷ் ஆகியனவே அதிகளவு கொண்டசெல்லப்பட்ட பொருட்களாகும். சிறிதளவு நீர்மங்களும் பெட்டகங்களும் கொண்டு செல்லப்படுகின்றன.

குடிநீர்[தொகு]

இவ் ஏரிகள் ஏரியை ஒட்டியுள்ள பகுதிகளில் வாழும் கோடிக்கணக்கான மக்களின் குடிநீர்த் தேவையை தீர்க்கின்றன. இந்நீர் ஏரிகளை ஒட்டியுள்ள மாநில அரசுகள் மற்றும் நகராட்சிகள் பொதுவாக ஏற்றுக்கொண்டுள்ள தீர்மானங்களின் படி பகிர்ந்துகொள்ளப்படுகிறது.

சுற்றுலா[தொகு]

இந்த ஏரிகள் குறிப்பிடத்தக்க சுற்றுலாத்தலமாகவும் விளங்குகின்றன. படகோட்டுதல், சொகுசுக் கப்பல் பயணம் முதலியன முக்கியமானவை. பேரேரிகள் மிதிவண்டிச் சுற்றுலா என்பது ஐந்து ஏரிகளையும் இணைக்கும் அழகிய காட்சிகள் நிறைந்த சாலைகளின் வழியாகச் செல்வதாகும்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=அமெரிக்கப்_பேரேரிகள்&oldid=1477120" இருந்து மீள்விக்கப்பட்டது