அமுக்கப்பட்ட இயற்கை எரிவளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வட அமெரிக்காவில் சி.என்.ஜியால் இயக்கப்படும் வண்டிகளில் காணப்படும் நீல நிறச் சாய்சதுர முத்திரை
சீனாவில் சி.என்.ஜி வண்டிகளில் காணப்படும் சாய்சதுர முத்திரை
ABQ RIDE-ஆல் ஆல்புகெர்க்கி (நியூ மெக்சிகோ)வில் சி.என்.ஜியால் இயக்கப்படும் பேருந்து

அமுக்கப்பட்ட இயற்கை எரிவளி (Compressed Natural Gas, CNG, சி.என்.ஜி) என்பது பெட்ரோல், டீசல், எல்.பி.ஜி போன்றவற்றிற்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும் புதைபடிவ எரிமங்களுள் ஒன்று. அப்பிற எரிபொருட்களைப் போன்றே அமுக்கப்பட்ட இயற்கை எரிவளியை எரிப்பதன் மூலமும் பசுங்குடில் வளிமங்கள் வெளியாகும் என்றாலும், ஒப்பீட்டளவில் அவை குறைவானவையே என்பதால் சூழல் மாசடைவதைக் குறைக்க உதவும் ஒன்றாகும். அதோடு, இவ்வளி காற்றை விட லேசானது என்பதால், கட்டுப்பாட்டை மீறி வெளியேறினால் விரைவாகக் கலைந்து விடும். பிற நீர்ம எரிபொருட்கள் அவ்வாறன்றி ஆபத்தான விளைவுகளுக்குக் காரணமாக அமையும் வாய்ப்பு இருக்கிறது. மறுசுழற்சிப் பொருட்களின் வழியே உருவாக்கப்படும் உயிரிவளி போன்றவற்றோடும் சி.என்.ஜி வளியைக் கலக்கலாம் என்பதால் சூழலில் இருக்கும் கார்பன் அளவினையும் குறைக்கலாம்.

முதன்மையாக [CH4] என்னும் மெத்தேனைக் கொண்ட இயற்கை எரிவளியை அமுக்குவதன் மூலம் சி.என்.ஜி தயாரிக்கப்பட்டுகிறது. இதன் மூலம் வளிமண்டல் அழுத்தத்தில் இருக்கும் கொள்ளளவில் ஒரு விழுக்காடு அளவிற்குக் குறைந்துவிடும். அமுக்கப்பட்ட இயற்கை எரிவளியைத் தேக்கி வைக்கவும் பரவலாக அனுப்பவும் 200-248 பார் அழுத்தம் கொண்ட கடினமான, உருளை அல்லது கோள வடிவக் கலன்களைப் பயன்படுத்துவர்.

பெட்ரோல் மூலம் ஓட்டப்படும் உள்ளெரிப்பு எந்திரம் கொண்ட வாகனங்களை மாற்றுவதன் மூலம் இரண்டு வகையான எரிபொருட்களையும், அதாவது, பெட்ரோல் மற்றும் அமுக்கிய இயற்கை எரிவளி, இரண்டையும் பயன்படுத்த இயலும். ஆசியா/பசிபிக் பகுதியில், குறிப்பாக பாக்கித்தான்[1], இலத்தீன் அமெரிக்கா, ஐரோப்பா, மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் அதிகரிக்கும் பெட்ரோல் விலையின் காரணமாக அமுக்கிய இயற்கை எரிவளியின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Mumtaz Alvi (2011-06-03). "Pakistan has highest number of CNG vehicles: survey" இம் மூலத்தில் இருந்து 2012-03-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120302192527/http://www.thenews.com.pk/TodaysPrintDetail.aspx?ID=6463&Cat=13. 
  2. "Natural Gas Vehicle Statistics: NGV Count - Ranked Numerically as at December 2009". International Association for Natural Gas Vehicles. Archived from the original on 2010-01-10. பார்க்கப்பட்ட நாள் 2010-04-27.