அமர் சோனர் பங்களா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இரவீந்திரநாத் தாகூர், அமர் சோனர் பங்களா பாடலை இயற்றி இசையமைத்தவர் |
|||||
| நாட்டுப்பண் | |||||
|---|---|---|---|---|---|
| இயற்றியவர் | இரவீந்திரநாத் தாகூர், 1906 | ||||
| இசை | இரவீந்திரநாத் தாகூர், 1906 | ||||
| சேர்க்கப்பட்டது | 1972 | ||||
| மாதிரி இசை | |||||
|
|||||
அமர் சோனர் பங்களா (எனது தங்க வங்கமே) எனத் தொடங்கும் பாடலை 1906 ஆம் ஆண்டு வங்கப் புலவர் இரவீந்திரநாத்துத் தாகூர் எழுதினார். 1905 ஆம் ஆண்டு நடந்த வங்கப் பிரிவினைக்குப் பின் இப்பாடல் எழுதப்பட்டது. 1972 ஆம் ஆண்டு வங்கத்தேசம் பாகிசுதானிடம் இருந்து விடுதலை பெற்றது. அப்போது இப்பாடலின் முதல் பத்து வரிகளைத் தமது நாட்டுப்பண்ணாக வங்கத்தேசம் அறிவித்தது. சன கண மன எனத் தொடங்கும் தாகூரின் பாடல் இந்தியாவின் நாட்டுப்பண் என்பது குறிப்பிடத்தக்கது.