அப்பல்லோ 15

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அப்பல்லோ 15
Apollo 15
திட்டச் சின்னம்
திட்ட விபரம்[1]
திட்டப்பெயர்: அப்பல்லோ 15
Apollo 15
விண்கலப் பெயர்:CSM: Endeavour
LM: Falcon
கட்டளைக் கலம்:CM-112
எடை 12,831 pounds (5,820 kg)
சேவைக் கலம்:SM-112
எடை 54,063 pounds (24,523 kg)
நிலவுக் கலம்:LM-10
எடை 36,700 pounds (16,600 kg)
உந்துகலன்:சட்டர்ன் V SA-510
ஏவுதளம்:கென்னடி விண்வெளி மையம்
புளோரிடா, ஐக்கிய அமெரிக்கா
ஏவுதல்: {{{launch}}}
சந்திரனில் இறக்கம்:சூலை 30, 1971
22:16:29 UTC
ஹாட்லி-அப்பெனின்
26°7′55.99″N 3°38′1.90″E / 26.1322194°N 3.6338611°E / 26.1322194; 3.6338611 (Apollo 15 landing)
சந்திரனில் வாகனத்துக்கு வெளியேயிருந்த நேரம்:LM standup   00:33:07
First 06:32:42
Second 07:12:14
Third 04:49:50
சந்திரனில் இருந்த நேரம்:2 நா 18 ம 54 நி 53 செ
நிலவு மாதிரி நிறை:77 கிகி (170 இறா)
இறக்கம்: ஆகத்து 7, 1971
20:45:53 UTC
வடக்கு பசிபிக் பெருங்கடல்
26°7′N 158°8′W / 26.117°N 158.133°W / 26.117; -158.133 (Apollo 15 splashdown)
கால அளவு: {{{duration}}}
சந்திரனைச் சுற்றிய நேரம்:6 நா 01 ம 12 நி 41 செ
பயணக்குழுப் படம்
இடமிருந்து வலம்: ஸ்காட், வோர்டன், எர்வின்
இடமிருந்து வலம்: ஸ்காட், வோர்டன், எர்வின்

அப்பல்லோ 15 (Appollo 15) அமெரிக்க அப்பல்லோ விண்பயண திட்டத்தின் ஒன்பதாவது மனிதர் சென்ற திட்டமாகும். நிலவில் இறங்கும் வரிசையில் இது நான்காவது அப்பல்லோ திட்டமாகும். மேலும் வெற்றிகரமாக மனிதரை ஏற்றிச் சென்ற எட்டாவது திட்டமாகும். ஜெ திட்ட பயணவரிசையில் இது முதலாவதாகும். முந்தைய திட்டங்களைக் காட்டிலும் நிலவில் அதிக காலம் தங்கி அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்வது, ஜெ திட்ட பயணவரிசையின் குறிக்கோளாகும். மேலும், நிலவு உலவு வாகனம் பயன்படுத்தப்பட்ட முதல் திட்டம் இதுவேயாகும்.

1971]], சூலை 26 அன்று தொடங்கிய இத்திட்டம் [[ஆகத்து 7 அன்று முடிவுற்றது. இத்திட்டம் நிறைவுற்றபோது, நாசா 'இதுவே மனிதர் பயணித்த விண்திட்டங்களிலேயே பெருத்த வெற்றியை அளித்த திட்டமென' கூறியது.[2]

திட்ட ஆணையாளர் டேவிட் ஸ்காட் மற்றும் நிலவுக் கலன் விமானி ஜேம்ஸ் இர்வின் மூன்று நாட்கள் நிலவில் தங்கி ஆய்வுகள் செய்தனர். அதில் 18½ மணி நேரம் நிலவுக் கலனைவிட்டு வெளியிலிருந்து ஆய்வுகள் செய்தனர். இத்திட்டத்தில் முதன்முறையாக பயன்படுத்தப்பட்ட நிலவு உலவி வாகனத்தைக் கொண்டு நிலவிலிறங்கிய நிலவுக்கலனிலிருந்து வெகுதூரங்கள் சென்று ஆய்வுகள் செய்ய முடிந்தது. அப்பல்லோ 15 திட்டம் தான் முதன் முதலில் நிலவின் குறை-எதிரொளிப்பு பகுதியல்லாத பகுதியில் நிலவுக்கலன் இறங்க வைக்கப்பட்ட திட்டமாகும். மாற்றாக 'மழைகளின் கடல்' எனும் பொருளுடைய மேர் இம்பிரியம் எனும் பகுதியில் உள்ள ஹாட்லி ரில் எனுமிடத்தில் பாலசு புட்ரடினசு (சிதைவின் சதுப்பு நிலம்) என்றழைக்கப்பட்ட இடத்தில் இறங்கியது. பூமியில் ஆய்வுசெய்வதற்காக 77 கி.கி. நிலவுப் பொருட்கள் கொண்டுவரப்பட்டன. அதே நேரத்தில், கட்டளைக் கலன் விமானியான 'ஆல்பிரட் வார்டன்' கலனிலிருந்தபடியே நிலவைச் சுற்றிவந்து ஆய்வுகள் செய்தார். நிலவின் மேற்பரப்பு மற்றும் சூழலை ஆழ்ந்து ஆராய்வதற்காக கட்டளைக் கலனில் 'அறிவியல் உபகரண கலன்' கொண்டுசெல்லப்பட்டிருந்தது. அதில் இருந்த அகலப்பரப்பு நிழற்படக்கருவி, காமா கதிர் நிறமாலைமானி, நிலவியல் படக்கணிப்பு நிழற்படக்கருவி, லேசர் உயரமானி, பதிவு நிறமாலைமானி மற்றும் நிலவைச் சுற்றும் துணை-செயற்கைக்கோள் (அப்பல்லோ 15 திட்ட முடிவில் ஏவி இயக்கவைக்கப்பட்டது - அப்பல்லோ திட்டங்களிலேயே இத்தகைய செயற்கைக்கோள் ஏவப்பட்டது இதுவே முதல்முறை) ஆகியவற்றின் உதவியுடன் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இத்திட்டம் அதன் குறிக்கோள்களை பூர்த்தி செய்தாலும் விண்வெளி வீரர்கள் கொண்டுசென்ற அஞ்சல் தலைகளால் பெருத்த எதிர்மறையான விளம்பரத்தை மக்களிடையே சம்பாதித்தது. (பூமிக்கு திரும்பிய பின்னர் அஞ்சல் தலைகளை விற்கும் எண்ணத்தில் அவற்றை கொண்டுசென்றிருந்தனர் விண்வெளிவீரர்கள்.)

உசாத்துணைகள்[தொகு]

  1. Richard W. Orloff. "Apollo by the Numbers: A Statistical Reference (SP-4029)". நாசா. Archived from the original on 16 மார்ச் 2011. பார்க்கப்பட்ட நாள் 18 July 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Apollo 15: 1971 Year in Review, UPI.com"

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Apollo 15
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்பல்லோ_15&oldid=3704442" இலிருந்து மீள்விக்கப்பட்டது