அபினவ் பிந்த்ரா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அபினவ் பிந்த்ரா | |
| பிறப்பு | செப்டம்பர் 28, 1982 தேராதூன், இந்தியா |
|---|---|
| தங்குமிடம் | சண்டிகர், இந்தியா |
| பணி | துப்பாக்கி சுடுதல் வீரர் தொழிலதிபர் |
| உயரம் | 173cm / 5'8" |
| எடை | 65 kg |
அபினவ் பிந்த்ரா (பிறப்பு செப்டம்பர் 28, 1982) ஒரு இந்தியத் தொழிலதிபரும் ஒலிம்பிக் விளையாட்டு வீரரும் ஆவார். இவரின் வணிக நிறுவனம், அபினவ் ஃபியூச்சரிஸ்டிக்ஸ், கணினி விளையாட்டுகளுக்காக பொருட்களை விற்பனை செய்கிறது. விளையாட்டு உலகில் குறி பார்த்துச் சுடுதல் செய்கிறார்.
2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் தங்கப் பதக்கத்தை பெற்றார். இவர் ஒலிம்பிக் வரலாற்றில் தனி நபர் போட்டிகளில் தங்கப் பதக்கத்தை பெற்றவர்களில் முதலாம் இந்தியர் ஆவார்.
[தொகு] வெளி இணைப்புக்கள்
அபினவ் பிந்த்ராவின் வணிக நிறுவனம்