அபிசேக் நாயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அபிசேக் நாயர்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அபிசேக் நாயர்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைஇடதுகை மிதவேகப் பந்துவீச்சு
பங்குசகலதுறை
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 178)சூலை 3 2009 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி ஒநாபசெப்டம்பர் 30 2009 எ. மேற்கிந்தியத் தீவுகள்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒபது முதது ப அது இ20
ஆட்டங்கள் 3 26 50 28
ஓட்டங்கள் 0 1,380 927 399
மட்டையாட்ட சராசரி 40.58 25.75 23.47
100கள்/50கள் 0/0 3/7 1/3 0/0
அதியுயர் ஓட்டம் 0* 152 102 45*
வீசிய பந்துகள் 18 3,628 1,439 126
வீழ்த்தல்கள் 0 56 38 6
பந்துவீச்சு சராசரி 28.62 32.84 28.33
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 2 1 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a 0 n/a n/a
சிறந்த பந்துவீச்சு 0/17 6/45 6/28 3/13
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 10/– 9/– 9/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், நவம்பர் 28 2009

அபிசேக் நாயர் (Abhishek Nayar , பிறப்பு: அக்டோபர் 8 1983), ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர்). மும்பாயைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1999 இல் இந்தியாஅணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணியினைப் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

ஒருநாள் போட்டிகள்[தொகு]

2009 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப் பயணம்செய்து விளையாடியது. சூலை 3. இல் மேற்கிந்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்[1]. ஆனால் இந்தப் போட்டியில் களம் இறங்குவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.இதில் இந்திய அணி 6 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[2]

2009 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணி மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் வாகையாளர் கோப்பைத் தொடரில் விளையாடியது. இதில் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார்.[1] செப்டம்பர் 30. இல் மேற்கிந்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் விளையாடினார்.இந்தப் போட்டியில் 7 பந்துகளைச் சந்தித்த இவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் ஓட்டங்கள் எதுவும் எடுக்கவில்லை. இந்தப்போட்டியில் இந்திய அணி 7 இலக்குகள்வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[3]

முதல்தரத் துடுப்பாட்டம்[தொகு]

தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகள்[தொகு]

2005 ஆம் ஆண்டில் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பையில் இவர் மும்பை அணி சார்பாக விளையாடினார். டிசம்பர் 25 இல் மும்பையில் நடைபெற்ற தமிழ்நாடு மாநிலத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[1] இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 67 பந்துகளில் 21 ஓட்டங்களை எடுத்து நரேசின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் பந்துவீச்சில் 11 ஓவர்கள் வீசி 46 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார்.இதில் 2 இலக்குகளைக் கைப்பற்றினார். பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 16 ஓவர்கள் பந்து வீசி 2 ஓவர்களை மெய்டனாக வீசி 53 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். இதில் 3 இலக்குகளையும் கைப்பற்றினார். மும்பை அணி 9 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[4]

2017 ஆம் ஆண்டில் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பையில் இவர் மும்பை அணி சார்பாக விளையாடினார். நவம்பர் 17 இல் நடைபெற்ற ஆந்திர மாநிலத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் விளையாடினார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 147 பந்துகளில் 35 ஓட்டங்களை எடுத்து சசிகாந்தின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் பந்துவீச்சில் 16 ஓவர்கள் வீசி 43 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார்.இதில் 1 இலக்குகளைக் கைப்பற்றினார். இதில் 2 ஓவர்களை மெய்டனாக வீசினார். பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 5 ஓவர்கள் பந்து வீசி 2 ஓவர்களை மெய்டனாக வீசி 4 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். இந்தப் போட்டி சமனில் முடிந்தது.[5]

பெப்ரவரி மாதத்தில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் இந்திய அ அணி சார்பாக விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். ஆனால் துவக்கத்தில் அறிவிக்கப்பட்ட இந்திய அ அணியில் இவர் இடம்பெறவில்லை. 2013 ஆம் ஆண்டில் தியோதர் கோப்பையில் இவர் வீசிய ஒரே ஓவரில் 10 அகலப்பந்துகள் மற்றும் ஒரு நோபால் போன்றவை உட்பட 17 பந்துகள் வீசினார். இதர்கு முன் 2004 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் முகம்மது சமி ஒரே ஓவரில் 17 பந்துகள் வீசினார். இந்தப் போட்டியில் 7 ஓவர்கள் வீசி 49 ஓட்டங்களை விட்டுகொடுத்து 2 இலக்குகளை நாயர் கைப்பற்றினார்.

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Abhishek Nayar", Cricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-28
  2. "3rd ODI, India tour of West Indies at Gros Islet, Jul 3 2009 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-28
  3. "12th Match, Group A (D/N), ICC Champions Trophy at Johannesburg, Sep 30 2009 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-28
  4. "Ranji Trophy at Mumbai, Dec 25-28 2005 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-28
  5. "Group C, Ranji Trophy at Ongole, Nov 17-20 2017 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-28

வெளியிணைப்புகள்[தொகு]

கிரிக்கின்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: அபிசேக் நாயர்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அபிசேக்_நாயர்&oldid=3830154" இலிருந்து மீள்விக்கப்பட்டது