அனைத்து இறைக் கொள்கை
அனைத்து இறைக் கொள்கை (Pantheism) என்பது இயற்கையை உள்ளடக்கிய பிரபஞ்சமும் கடவுளும் சமம் ஆகும் என்னும் கருத்துக் கோப்பு ஆகும். [2] அனைத்து இறைக் கொள்கையாளர்கள் ஆளுறவான கடவுள் உண்டு என்றோ, மனித குணநலன்களைக் கொண்ட கடவுள் உண்டு என்றோ ஏற்பதில்லை.[3]
பொருளடக்கம் |
சொல் பிறப்பு[தொகு]
அனைத்து இறைக் கொள்கை என்னும் கூற்று Pantheism என்பதன் மொழிபெயர்ப்பு. அச்சொல்லின் மூலமாக அமைவது கிரேக்க மொழியில் இரு சொற்கள். அதாவது கிரேக்கத்தில் pan என்றால் "அனைத்து" ("எல்லாம்") என்பது பொருள்; theos என்னும் சொல் "கடவுள்" என்னும் பொருள் கொண்டது.
இவ்வாறு, பிரபஞ்சத்தின் பரிணாம வளர்ச்சியே கடவுள் என்னும் கருத்துப் போக்கு உருவானது.[4] அனைத்து இறைக் கொள்கையின் பல வடிவங்களும் ஏற்கும் கருத்துகள்: பிரபஞ்சம் ஒருங்கிணைந்த ஒருமை கொண்டது; பிரபஞ்சம் வணக்கத்துக்கும் மரியாதைக்கும் உரியது; பிரபஞ்சமும் இயற்கையும் புனிதத்தன்மை கொண்டவை.
கடவுளை ஏற்கின்ற/ஏற்காத அனைத்து இறைக் கொள்கைகள்[தொகு]
அனைத்து இறைக் கொள்கை இரு பெரும் வகைகளாக உள்ளது. அவை:
- கடவுளை ஏற்கும் அனைத்து இறைக் கொள்கை
- கடவுளை மறுக்கும் அனைத்து இறைக் கொள்கை
என்பனவாம்.[5]
"கடவுள் மட்டுமே இருக்கின்றார்" என்னும் முற்கொள்கையோடு ஆய்வைத் தொடங்குவோர், அக்கடவுள் காலத்தைக் கடந்தவர், அனைத்தையும் உள்ளடக்குபவர் என்று இருப்பதால், உலகு என்னும் தோற்றமும், காலமும் அக்கடவுளின் வெளித்தோற்றம் அல்லது உருமாற்றம் மட்டுமே என்னும் முடிவுக்கு வருகின்றனர். அம்முடிவின்படி, இருப்பதெல்லாம் கடவுள், இயற்கை என்பது கடவுளின் பகுதி.
மற்ற பிரிவினர், கடவுளை இயற்கையின் பகுதியாகக் காண்கின்றனர். அவர்கள் கருத்துப்படி, "இருப்பது அனைத்தும் பிரபஞ்சமே/இயற்கையே". இயற்கையின் அனைத்துக் கூறுகளும் ஒன்றோடொன்று இணைந்து ஒருங்கே உள்ளன. கடவுளும் இயற்கையின் கூறுதான். என்னும் முடிவுக்கு வருகின்றனர்.[6]
இந்து சமயத்தின் அனைத்து இறைக் கொள்கை[தொகு]
இந்து சமயத்தில் நிலவுகின்ற கடவுள் கொள்கையை வரையறுப்பது எளிதல்ல என்றாலும், அது அனைத்து இறைக் கொள்கையின் அடிப்படைகளைக் கொண்டுள்ள மிகப் புராதன சமயமாக உள்ளது. பிரம்மம் ஒன்றே உளதாம் பொருள். அதன் கூறுகள், தோற்றங்கள் பிரபஞ்சமாக, உயிர்களாக வெளிப்படுகின்றன. இக்கருத்து இந்து சமய அடிப்படையான வேத நூல்களிலும் உபநிடதங்களிலும் உள்ளன.[7]
தத்துவமசி, அகம் பிரம்மாஸ்மி போன்ற மகாவாக்கியங்கள் இந்து சமய அனைத்து இறைக் கொள்கைக்கு அடித்தளமாகக் கருதப்படுகின்றன.
இந்து சமயத்தில் "ஆளுறவு கடவுள் கொள்கை"யும் உண்டு. எனவே, மனிதர் கடவுளின் முன்னிலையில் பக்தி உணர்வோடு பணிந்து வணங்குகின்றனர். ஆயினும் ஆளுறவுக் கடவுளும் ஆன்மாவும் பிரபஞ்சமும் பரபிரம்மத்தின் வெளிப்பாடே என்னும் கருத்தும் உளதால் அனைத்து இறைக் கொள்கை இந்து மதத்தின் ஆழ்ந்த அடிப்படையாக உள்ளது என்பர் அறிஞர்.[8]
ஆதாரங்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 Harrison, Paul. "Pantheist Art". PAN Magazine. World Pantheist Movement. பார்த்த நாள் 5 June 2012. ஃபிபனாச்சி எண்கள், பொன் விகிதம் என்பவற்றைச் சுட்டுகின்ற சங்கு வடிவம் மட்டும் பயன்படுத்துவதும் உண்டு.
- ↑ The New Oxford Dictionary Of English. Oxford: Clarendon Press. 1998. pp. 1341. ISBN 0-19-861263-X.
- ↑ Levine, Michael, "Pantheism", The Stanford Encyclopedia of Philosophy (Summer 2012 Edition), Edward N. Zalta (ed.)
- ↑ Owen, H. P. Concepts of Deity. London: Macmillan, 1971.
- ↑ Plumptre, C.E., "General Sketch of the History of Pantheism", Samuel Deacon & Co., 1878, pp. 3-4
- ↑ http://www.pantheism.net/manifest.htm
- ↑ General Sketch of the History of Pantheism, p. 29.
- ↑ இந்து சமயத்தில் அனைத்து இறைக் கொள்கை
வெளி இணைப்புகள்[தொகு]
| விக்சனரியில் அனைத்து இறைக் கொள்கை என்னும் சொல்லைப் பார்க்கவும். |
- Beliefs, History and Practice of Pantheism (pantheism.net)
- Stanford Encyclopedia of Philosophy entry (plato.stanford.edu)
- Pantheism திறந்த ஆவணத் திட்டத்தில்
- The Pantheist Index, pantheist-index.net
- An Introduction to Pantheism (wku.edu)
"Pantheism". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம். - The World Pantheist Movement (pantheism.net)
- Pantheism and Judaism (chabad.org)