அனுக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மினோரா

அனுக்கா (ஹனுக்கா, Hanukkah) அல்லது தீபத் திருநாள் (Festival of Lights) யூதர்களின் திருநாள் கொண்டாட்டங்களில் ஒன்று. எட்டு நாட்கள் நடைபெறும் இப்பண்டிகை, கி.மு 2ம் நூற்றாண்டில் யெரூசலத்தில் நடந்த மக்கேபியப் புரட்சியின் போது, யூதர்களின் புனிதக் கோவில் (இரண்டாவது புனிதக் கோவில்) மீண்டும் வழிபாட்டுக்கு திறந்துவிடப்பட்டதை நினைவு கூற கோண்டாடப்படுகிறது. எட்டு இரவுகளும் எட்டு பகல்களும் கொண்டாடப்படும் இப்பண்டிகை எபிரேய நாட்காட்டியின் கிசுலேவ் மாதத்தின் 25ம் நாள் துவங்குகிறது. கிரெகொரியின் நாட்காட்டியில் இது நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் வரும்.

இத்திருநாள் கொண்டாட்டத்தில் ஒன்பது கிளைகளை உடைய மினோரா அல்லது அனுக்கா எனப்படும் மெழுகுவர்த்தி தாங்கியில் மெழுகுவர்த்திகள் ஏற்றப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் ஒரு மெழுகுவர்த்தி கூடுதலாக ஏற்றப்பட்டு எட்டாவது நாள் எட்டு மெழுகுவர்த்திகள் ஏற்றப்படுகின்றன. அனைத்து நாட்களும் நடுவில் உள்ள ஷமாஷ் எனப்படும் சிறப்பு மெழுகுவர்த்தி கூடுதலாக ஏற்றப்படும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=அனுக்கா&oldid=958358" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்