அந்துவன் கீரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காவட்டனார் என்னும் புலவர் பாடியுள்ள இரண்டு பாடல்களில் ஒன்று புறநானூறு 359 எண்ணுள்ள பாடல். [1] இந்தப் பாடலின் அடியில் அந்துவன் கீரனைப் பாடியது என்னும் குறிப்பு உள்ளது. பாடலில் இவன் பெயர் இல்லை. பாடல் பெருங்காஞ்சி என்னும் துறையைச் சேர்ந்தது.

பல நாடுகளை வென்று ஆண்ட அரசர்களும் இறுதியில் தம் உடலை நரியும் பேயும் தின்ன இடுகாடு சென்றடைந்தனர். உனக்கும் ஒருநாள் இது வரும். எனவே ஆண்டு சென்ற பின்னரும் உன் பெயர் விளங்கும் செயல்களை இப்போதே செய் - என்று புலவர் அந்துவன் கீரனுக்கு அறிவுறுத்துகிறார்.

பழியை விரும்பாதே.
புகழை விரும்பு
ஆசைப்பட்டதைப் பேசாதே
நல்லதையே பேசு
இரவலர் விரும்பாவிட்டாலும் அவர்களுக்குத் தேருடன் கூடிய பரிசுகளை வழங்கு

ஆகியவை புலவர் அந்துவன் கீரனுக்குக் கூறிய அறிவுரை.

இவற்றையும் ஒப்பிட்டுக்கொள்க[தொகு]

மேற்கோள் குறிப்பு[தொகு]

  1. பாறுபடப் பறைந்த பல் மாறு மருங்கின்,
    வேறு படு குரல வெவ் வாய்க் கூகையொடு,
    பிணம் தின் குறு நரி நிணம் திகழ் பல்ல,
    பேஎய் மகளிர் பிணம் தழூஉப் பற்றி,
    விளர் ஊன் தின்ற வெம் புலால் மெய்யர், 5
    களரி மருங்கின் கால் பெயர்த்து ஆடி,
    ஈம விளக்கின் வெருவரப் பேரும்
    காடு முன்னினரே, நாடு கொண்டோரும்;
    நினக்கும் வருதல் வைகல் அற்றே;
    வசையும் நிற்கும்; இசையும் நிற்கும்; 10
    அதனால், வசை நீக்கி இசை வேண்டியும்,
    நசை வேண்டாது நன்று மொழிந்தும்,
    நிலவுக் கோட்டுப் பல களிற்றொடு,
    பொலம் படைய மா மயங்கிட,
    இழை கிளர் நெடுந் தேர் இரவலர்க்கு அருகாது, 15
    'கொள்' என விடுவை ஆயின், வெள்ளென,
    ஆண்டு நீ பெயர்ந்த பின்னும்,
    ஈண்டு நீடு விளங்கும், நீ எய்திய புகழே.(புறநா1னூறு 359)

"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்துவன்_கீரன்&oldid=1920196" இலிருந்து மீள்விக்கப்பட்டது