அத்லெடிகோ மாட்ரிட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அத்லெடிகோ டி மாட்ரிட்
அத்லெடிகோ மாட்ரிட் இலச்சினை.png
இணையதளம் Club home page
Home colours
Away colours
Third colours

Current season

அத்லெடிகோ மாட்ரிட் (Atlético Madrid , எளிமையாக Atlético -அத்லெடிகோ ) என்பது எசுப்பானியாவின் லா லீகா கூட்டிணைவில் பங்குபெறும் கால்பந்துக் கழகமாகும்.[1] இதன் அமைவிடம் மாட்ரிட், ஸ்பெயின் ஆகும். அத்லெடிகோ மாட்ரிட் 9 முறை லா லீகா-வினை வென்றுள்ளது; 1996-ல் வென்ற இரட்டையும் இதில் அடங்கும். கோபா டெல் ரேவினை (அரசரின் கோப்பை) 10 முறை வென்றுள்ளனர். மேலும் 1 எசுப்பானிய உன்னதக் கோப்பையும் 3 ஈவா துயர்த்தே கோப்பையும் வென்றுள்ளனர். ஐரோப்பாவில், 1962-ல் யூஈஎஃப்ஏ கோப்பை வெற்றியாளர்கள் கோப்பையை வென்றுள்ளனர்; 1974-ஆம் ஆண்டு ஐரோப்பியக் கோப்பையில் இரண்டாம் இடம் பெற்றனர்.[2] மேலும், யூரோப்பா கூட்டிணைவை 2010 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளில் வென்றுள்ளனர்; யூஈஎஃப்ஏ உன்னதக் கோப்பையை 2010 மற்றும் 2012-ஆம் ஆண்டுகளில் கைப்பற்றியிருக்கின்றனர்.

தற்போது 54,960 பார்வையாளர்கள் கொள்ளளவு கொண்ட விசென்டே கால்தெரான் மைதானத்தில் (Vicente Calderón)[3] தன்னிடப் போட்டிகளை ஆடி வரும் இவர்கள், 2015-ஆம் ஆண்டில் 70,000 பார்வையாளர்கள் கொள்ளளவு உடைய லா பெய்னேட்டா மைதானத்துக்கு (Estadio La Peineta) இடம்பெயர இருக்கின்றனர்.

எசுப்பானியாவில் அதிக ஆதரவாளர்கள் கொண்ட கால்பந்துக் கழகங்களில் ரியல் மாட்ரிட் மற்றும் பார்சிலோனா-வுக்கு அடுத்து அத்லெடிகோ மூன்றாமிடம் பெறுகின்றனர். மேலும் உலகிலேயே பெரும் விளையாட்டுக் கழகங்களில் ஒன்றாகவும் உள்ளது; 65,000 பேர் பருவ நுழைவுச்சீட்டு கொண்ட ஆதரவாளர்கள் உள்ளனர்.

இவர்கள் இருக்கும் அதே நகரத்தில் இருக்கும் காரணத்தினால் இவர்களுக்கும் ரியல் மாட்ரிட் அணிக்கும் இடையே பெருத்த போட்டி காலாகாலமாக இருந்து வந்திருக்கிறது.[4]

மேலும் பார்க்க[தொகு]

குறிப்புதவிகள்[தொகு]

  1. ":: Tienda Club Atlético de Madrid::" (Spanish). Atlético Madrid. மூல முகவரியிலிருந்து 13 December 2010 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 20 November 2010.
  2. "1973/74: Müller ends Bayern wait". UEFA. மூல முகவரியிலிருந்து 11 October 2010 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 7 November 2010.
  3. "Estadio Vicente Calderón". The Stadium Guide. மூல முகவரியிலிருந்து 22 November 2010 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 20 November 2010.
  4. "Real Madrid vs Atlético Madrid Derby: Great Local Football Derbies". Eurorivals. பார்த்த நாள் 20 November 2010.
"http://ta.wikipedia.org/w/index.php?title=அத்லெடிகோ_மாட்ரிட்&oldid=1620752" இருந்து மீள்விக்கப்பட்டது