அதிதி கோவத்திரிகர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அதிதி கோவத்திரிகர் | |
|---|---|
| பிறப்பு | மே 21, 1976 பன்வேல், மகாராட்டிரம் |
| தொழில் | நடிகர் |
| நடிப்புக் காலம் | 2001-இன்று வரை |
| துணைவர் | டாக்டர் முஃபஸ்ஸல் லக்டாவாலா (1999-2009) |
அதிதி கோவத்திரிகர் (மராத்தி: आदिती गोवित्रीकर) (பிறப்பு: மே 21, 1976), அல்லது சாரா முஃபஸ்ஸல் லக்டாவாலா, பிரபல இந்திய மோடலும் ஹிந்தி மற்றும் தெலுங்குத் திரைப்பட நடிகையும் ஆவார். இவர் 2001ஆம் ஆண்டு மிஸஸ் வர்ல்ட்டு பட்டத்தை ஜெயித்தார்.
பிறப்பு [தொகு]
அதிதி பன்வேல், மகாராட்டிரத்தின் ஒரு மராத்தி மொழி பேசும் பிராமண குடும்பத்தில் மே 21, 1976 அன்று பிறந்தார். இவர் மும்பையின் கிராண்ட் மருத்துவ கல்லூரியில் படித்தார்.
வாழ்க்கைக் குறிப்புகள் [தொகு]
1999 ஆண்டில் அதிதி தன்னுடைய காதலர் டாக்டர் முஃபஸ்ஸல் லக்டாவாலாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின் இவர் தன்னுடைய கணவரின் இஸ்லாமிய மதத்துக்கு மாறி விட்டார். கடந்த 2009 ஆண்டில் 10 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு இருவரும் பிரிந்தனர்.