அன்னா மாணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அண்ணா மணி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அன்னா மாணி
பிறப்பு 23 ஆகத்து 1918
பிறப்பிடம் திருவிதாங்கூர், கேரளம்
இறப்பு ஆகஸ்ட் 16, 2001 (அகவை 82)
இறப்பிடம் திருவனந்தபுரம், கேரளம்
தேசியம் இந்தியா
துறை வானிலையியல், இயற்பியல்
பணி நிறுவனம் இந்திய வானிலை ஆராய்ச்சி துறை, புனே

அன்னா மாணி (23 ஆகத்து 1918 - 16 ஆகத்து 2001) ஒரு இந்திய இயற்பியலாளர் மற்றும் வானிலை ஆய்வாளர்.[1] அவர் இந்திய வானிலை ஆராய்ச்சி துறையின் துணை இயக்குநராக பணி புரிந்தார். அவர் வளிமண்டலவியல் கருவி மயமாக்கல் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை அளித்தார். அவர் சூரிய மற்றும் காற்று ஆற்றல் அளவீடுகள், ஓசோன் அளவீடுகள் ஆகியவற்றை ஆய்வு நடத்தி ஏராளமான ஆய்வேடுகளைப் வெளியிட்டார்.[2]

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

அன்னா மாணி பீருமேடு, திருவாங்கூரில் பிறந்தார்.[3] அவரது தந்தை ஒரு குடிசார் பொறியாளர். அவரது குடும்பத்தில் எட்டு குழந்தைகளில் இவர் ஏழாவது குழந்தை. அவரது குழந்தைப் பருவத்தில் பெருவேட்கையுடைய வாசகராக இருந்தார். அவர் வைக்கம் சத்தியாக்கிரகம் போது காந்தியின் நடவடிக்கைகள் மூலம் ஈர்க்கப்பட்டார். தேசிய இயக்கதின்பால் ஈர்க்கப்பட்டு, அவர் கதர் ஆடைகள் மட்டுமே அணிய முடிவு எடுத்தார். மருத்துவம் பயில வேண்டும் என்று ஆர்வம் கொண்ட போதிலும், இயற்பியல் மீது கொண்ட பற்றால் இயற்பியல் கற்க முற்பட்டார். 1939 ல், அவர் இயற்பியல் மற்றும் வேதியியலில் மாநிலக் கல்லூரி, சென்னையில் இருந்து இளநிலை அறிவியல் கௌரவ பட்டம் பெற்றார்.[3]

தொழில் வாழ்க்கை[தொகு]

மாநிலக் கல்லூரி, சென்னையில் படிப்பை முடித்த பிறகு, அவர் பேராசிரியர் ச. வெ. இராமன் கீழ், மாணிக்கம் மற்றும் வைர ஒளியியல் பண்புகள் ஆராய்ச்சியில் வேலை செய்தார். அவர் ஐந்து ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதிய போதிலும், இயற்பியலில் முதுகலை பட்டம் இல்லை என்பதால், முனைவர் பட்டம் அவருக்கு மறுக்கப்பட்டது. அவர் இயற்பியல் படிப்பைத் தொடர பிரிட்டன் சென்றார் என்றாலும், அவர் இம்பீரியல் காலேஜ் லண்டனில் வளிமண்டலவியல் கருவி மயமாக்கல் படிப்பை தேர்ந்தேடுத்தார்.[3] 1948 ல் இந்தியா திரும்பிய பிறகு, அவர் புனேவில் உள்ள வானிலை ஆராய்ச்சி துறையில் சேர்ந்தார். அவர் வளிமண்டலவியல் கருவியாக்கம் பற்றிய பல ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிட்டார். அவர் 1976 ஆம் ஆண்டில் இந்திய வானிலை ஆராய்ச்சி துறை துணை இயக்குனராக ஓய்வு பெற்றார். அவர் இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார். அவை - 1980 ல் 'The Handbook for Solar Radiation data for India மற்றும் 1981 ல். Solar Radiation over India. [2] அவர் 1987ல் KR ராமநாதன் பதக்கம் வென்றார்.[3]

1994 ல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, 16 ஆகத்து 2001ல் திருவனந்தபுரத்தில் காலமானார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Sur, Abha (14 October 2001). "The Life and Times of a Pioneer". The Hindu. http://hindu.com/2001/10/14/stories/1314078b.htm. பார்த்த நாள்: 31 ஆகத்து 2013. 
  2. 2.0 2.1 Sur, Abha (2007). Lilavati's daughters: The women scientists of India. Indian Academy of Science. பக். 23-25. http://www.ias.ac.in/womeninscience/liladaug.html. 
  3. 3.0 3.1 3.2 3.3 Gupta, Aravind. "Anna Mani". Platinum Jubilee Publishing of INSA. Indian National science academy. பார்த்த நாள் 31 ஆகத்து 2013.
"http://ta.wikipedia.org/w/index.php?title=அன்னா_மாணி&oldid=1669776" இருந்து மீள்விக்கப்பட்டது