அட்லாண்டிஸ் விண்ணோடம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| அட்லாண்டிஸ் Atlantis |
|
|---|---|
ஆகஸ்ட் 29, 2006 இல் அட்லாண்டிஸ் STS-115 விண்கலத்துடன் ஏவப்பட முன்னர். |
|
| OV Designation | OV-104 |
| நாடு | ஐக்கிய அமெரிக்கா |
| Contract award | ஜனவரி 29, 1979 |
| Named after | R/V Atlantis |
| முதல் பயணம் | STS-51-J அக்டோபர் 3, 1985 - அக்டோபர் 7, 1985 |
| கடைசிப் பயணம் | STS-117 ஜூன் 8, 2007 - ஜூன் 22, 2007 |
| திட்டங்களின் எண்ணிக்கை | 28 |
| பயணிகள் | 174 |
| விண்ணில் செலவழித்த நேரம் | 245.575 நாட்கள்[1] |
| சுற்றுகளின் எண்ணிக்கை | 3,873 |
| பயணித்த தூரம் | 152,534,078 கிமீ |
| அனுப்பிய செய்மதிகள் | 14 |
| மீர் dockings | 7 |
| அவிநி dockings | 8 |
| Status | நடப்புப் பயணத்தில் (STS-122) |
மீர் விண்வெளி நிலையத்துடன் அட்லாண்டிஸ் இணைப்பு
அட்லாண்டிஸ் விண்ணோடம் (Space Shuttle Atlantis), என்பது நாசாவின் நடப்பில் உள்ள மூன்று மீள்விண்கலங்களில் (Space Shuttle) ஒன்றாகும்[2]. (மற்றைய இரண்டும் டிஸ்கவரி, எண்டெவர் ஆகியவை ஆகும்.) அட்லாண்டிஸ் அநேகமாக 2010 வரையில் விண்வெளிப் பயணங்களில் ஈடுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது[3][4].
[தொகு] அட்லாண்டிசின் பயணங்கள்
அட்லாண்டிஸ் இதுவரையில் மேற்கொண்ட 28 பயணங்களில் 220.40-நாட்களை விண்ணில் கழித்திருக்கிறது. 3,468 சுற்றுக்களை (orbits) மேற்கொண்டு மொத்தம் 89,908,732 nautical miles (166,510,972 km) தூரம் பயணித்தது (செப்டம்பர் 2006 தரவுகள் படி).
| # | தேதி | பயணத் திட்டம் | குறிப்புகள் |
|---|---|---|---|
| 1 | 1985 அக்டோபர் 3 | STS-51-J | muthalaavathu payaNam; அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்தின் தேவைக்காக. |
| 2 | 1985 நவம்பர் 26 | STS-61-B | 3 தொலைத்தொடர்பு செய்மதிகளைக் கொண்டு சென்றது: MORELOS-B, AUSSAT-2 மற்றும் SATCOM KU-2. |
| 3 | 1988 டிசம்பர் 2 | STS-27 | அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்தின் தேவைக்காக. |
| 4 | 1989 மே 4 | STS-30 | மகெலன் தளவுளவியைக் கொண்டு சென்றது (probe). |
| 5 | 1989 அக்டோபர் 18 | STS-34 | கலிலியோ தளவுளவியைக் கொண்டு சென்றது. |
| 6 | 1990 பெப்ரவரி 28 | STS-36 | அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்தின் தேவைக்காக. |
| 7 | 1990 நவம்பர் 15 | STS-38 | அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்தின் தேவைக்காக. |
| 8 | 1991 ஏப்ரல் 5 | STS-37 | காம்ப்டன் காமா கதிர் விண்ணாய்வு நிலையத்தை (Observatory) கொண்டு சென்றது. |
| 9 | 1991 ஆகஸ்ட் 2 | STS-43 | TDRS-5 ஐக் கொண்டு சென்றது. |
| 10 | 1991 நவம்பர் 24 | STS-44 | அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்தின் தேவைக்காக. |
| 11 | 1992 மார்ச் 24 | STS-45 | அட்லாஸ்-1 ஆய்வுகூடத்தைக் கொண்டு சென்றது. |
| 12 | 1992 ஜூலை 31 | STS-46 | ESA European Retrievable Carrier, NASA Tethered Satellite System ஆகியவற்றைக் கொண்டு சென்றது. |
| 13 | 1994 நவம்பர் 3 | STS-66 | அட்லாஸ்-3 ஆய்வுகூடத்தைக் கொண்டு சென்றது. |
| 14 | 1995 ஜூன் 29 | STS-71 | மீர் விண்வெளி நிலையத்துடம் முதன் முறையாக இணைந்தது. |
| 15 | 1995 நவம்பர் 12 | STS-74 | மீர் நிலையத்துக்கு docking module ஐக் கொண்டு சென்றது. |
| 16 | 1996 மார்ச் 22 | STS-76 | மீர் உடன் இணைப்பு. Shannon Lucid என்ற விண்வெளிவீரரை கொண்டு சென்றது. |
| 17 | 1996 செப்டம்பர் 16 | STS-79 | மீர் உடன் இணைப்பு, Shannon Lucid மற்றும் John Blaha ஆகியோரைப் பரிமாறியது. |
| 18 | 1997 ஜனவரி 12 | STS-81 | மீர் உடன் இணைப்பு, John Blaha மற்றும் Jerry Linenger ஆகியோரைப் பரிமாறியது. |
| 19 | 1997 மே 15 | STS-84 | மீர் உடன் இணைப்பு, Jerry Linenger மற்றும் Michael Foale ஆகியோரைப் பரிமாறியது. |
| 20 | 1997 செப்டம்பர் 25 | STS-86 | மீர், Michael Foale மற்றும் David A. Wolf ஆகியோரைப் பரிமாறியது. |
| 21 | 2000 மே 19 | STS-101 | அவிநிக்கான இணைப்புத் திட்டம். |
| 22 | 2000 செப்டம்பர் 8 | STS-106 | அவிநிக்கான இணைப்புத் திட்டம். |
| 23 | 2001 பெப்ரவரி 7 | STS-98 | அவிநிக்கான டெஸ்டினி ஆய்வுகூடத்தைக் கொண்டு சென்று இணைத்தது. |
| 24 | 2001 ஜூலை 12 | STS-104 | அவிநிக்கான Quest Joint Airlock ஐக் கொண்டு சென்று இணைத்தது. |
| 25 | 2002 ஏப்ரல் 8 | STS-110 | அவிநிக்கான S0 truss segment ஐக் கொண்டு சென்று இணைத்தது. |
| 26 | 2002 அக்டோபர் 7 | STS-112 | அவிநிக்கான S1 truss segment ஐக் கொண்டு சென்று இணைத்தது. |
| 27 | 2006 செப்டம்பர் 9 | STS-115 | அவிநிக்கான P3, P4 truss segment களைக் கொண்டு சென்றது. |
| 28 | 2007 ஜூன் 8 | STS-117 | அவிநிக்கான S3, S4 truss segment களைக் கொண்டு சென்று இணைத்தது[5]. |
| 29 | 2008 பெப்ரவரி 7 | STS-122 | அவிநிக்கான கொலம்பஸ் ஆய்வுகூடத்தைக் கொண்டு சென்றது. |
[தொகு] மேற்கோள்கள்
- ↑ William Harwood for CBS News (2007). "Quick-Look Mission Facts and Figures". Spaceflightnow.com. பார்க்கப்பட்ட நாள் December 7, 2007.
- ↑ NASA (2007). "Space Shuttle Overview: Discovery (OV-103)". National Aeronautics and Space Administration. பார்க்கப்பட்ட நாள் November 6, 2007.
- ↑ Chris Bergin (2007). "Atlantis stay of execution reversed in new manifest" (English). NASA Spaceflight. பார்க்கப்பட்ட நாள் October 11, 2007.
- ↑ Chris Bergin (2007). "Manifest acceleration: Saving Atlantis to aid Ares timeline". NASASpaceflight.com. பார்க்கப்பட்ட நாள் November 6, 2007.
- ↑ William Harwood for CBS News (2007). "STS-117 Mission Coverage". Spaceflightnow.com. பார்க்கப்பட்ட நாள் December 7, 2007.
[தொகு] வெளி இணைப்புகள்
பொது விக்கிமீடியாவில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன: