அட்ரினோ கார்டிகோடிராபிக் ஹார்மோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அட்ரினோ கார்டிகோடிராபிக் ஹார்மோன், ACTH (Adrenocorticotropic hormone) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இது ஒரு புரத வளரூக்கி ஆகும். இந்த வளரூக்கி எதிர்த் தூண்டல் முறையில் செயல்பட்டு, அட்ரீனல் சுரப்பியின் கார்டெக்ஸ் (புறணி) சுரப்புக்களைக் கட்டுப்படுத்துகிறது. இதன் வேறு சில செயல்கள். தோலின் மெலனோசைட்டுகளைத் தூண்டி, தோல் நிறமிகள் தோன்றுவது, இன்சுலின் சுரப்பைத் தூண்டுவது மற்றும் அடிப்போஸ் இழையங்களிளிருந்து கொழுப்புகளை இடமாற்றுவது ஆகும்.

இவ் வளரூக்கி அதிகம் சுரக்குமாயின் அது குஷிங்க் நோய்க்கூட்டறிகுறி (cushing syndrome) எனும் நிலையை உருவாக்கும். மேலும் இவ் வளரூக்கி நுரையீரலில் ஏற்படும் சிறிய கலப் புற்றுநோயில் வேற்றிட வளரூக்கியாகவும் (ectopic hormone) சுரக்கப்படும்.

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்