அடோபி இமேச்ரெடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அடோப் இமேஜ்ரெடி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அடோபி இமேச்ரெடி
ImageReady 7 logo.jpg
ImageReady 7.jpg
விண்டோஸ் எக்ஸ்பியில் அடோப் இமேஜ்ரெடி சி. எசு. 2
உருவாக்குனர் அடோப் சிஸ்டம்ஸ்
பிந்தைய பதிப்பு சி. எசு. 2 (9.0) / 2005
இயக்குதளம் விண்டோசு, மாக் ஓ. எசு. எக்சு
வளர்ச்சி நிலை கைவிடப்பட்டது
வகை துகள் வரைபட உருவ வரைகலை திருத்தி
அனுமதி வணிகம்
இணையத்தளம் இல்லை

அடோபி இமேச்ரெடி (Adobe ImageReady) என்பது அடோப் சிஸ்டம்சினால் ஏறத்தாழப் பத்து ஆண்டுகளாக அடோப் போட்டோசாப்புடன் இணைத்து வழங்கப்பட்ட துகள் வரைபட உருவ வரைகலை திருத்தி மென்பொருள் ஆகும்.[1] இமேஜ்ரெடியானது சி++ என்ற நிகழ்ச்சிநிரலாக்க மொழியில் எழுதப்பட்டுள்ளது.[2] இம்மென்பொருள் விண்டோசு இயங்குதளத்திலும் மாக் ஓ. எசு. எக்சு இயங்குதளத்திலும் இயக்கக்கூடியதாக வெளியிடப்பட்டது.[3] பிறகு இந்த மென்பொருளைத் தயாரித்தல் அடோப் சிஸ்டம்சினால் கைவிடப்பட்டது.[4]

போட்டோசாப்பை விட இமேஜ்ரெடி குறைந்த வசதிகளையே கொண்டுள்ளது. ஆனாலும் வலை வரைகலையை விரைவாகத் தொகுப்பதற்கு இமேஜ்ரெடி உதவுகின்றது.

ஆரம்ப காலத்தில், போட்டோசாப் கருவிப் பெட்டியில் இமேஜ்ரெடிக்கான தொடுப்பு இருந்தது.[5] இத்தொடுப்பு, போட்டோசாப்பில் தொகுத்துக் கொண்டிருந்த அதே படிமத்தை இமேஜ்ரெடியிலும் தொகுப்பதற்கு உதவியது.

இமேஜ்ரெடியின் கருவிப் பெட்டியானது அடோப் போட்டோசாப்பின் கருவிப் பெட்டியை ஒத்தது.

வெளியீட்டு வரலாறு[தொகு]

அடோப் இமேஜ்ரெடி 1.0ஆனது தனிச் செயலியாகவே வெளியிடப்பட்டது. ஆனாலும் பின்னைய பதிப்புகள் போட்டோசாப்புடன் இணைத்து வழங்கப்பட்டன.

வெளியீடு பதிப்பு இல. திகதி இணைக்கப்பட்டது
முதலாவது பதிப்பு 1.0 1998 சூலை இல்லை (தனித் தயாரிப்பாக வெளியிடப்பட்டது.)
இரண்டாவது பதிப்பு 2 1999 சூலை போட்டோசாப் 5.5
மூன்றாவது பதிப்பு 3 2000 அக்டோபர் போட்டோசாப் 6.0
நான்காவது பதிப்பு 7 2002 பெப்ரவரி போட்டோசாப் 7.0
ஐந்தாவது பதிப்பு 8 (சி. எசு.) 2003 அக்டோபர் போட்டோசாப் 8.0 சி. எசு.
ஆறாவது பதிப்பு 9 (சி. எசு. 2) 2005 மே போட்டோசாப் 9.0 சி. எசு. 2

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=அடோபி_இமேச்ரெடி&oldid=1368598" இருந்து மீள்விக்கப்பட்டது