அடினோசின் முப்பொஸ்ஃபேட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அடினோசின் முப்பொஸ்ஃபேட்
ImageFile
ImageFile
ImageFile
வேதியியல் குறிப்புகள்
CAS எண் 56-65-5
பப்கெம் 5957
DrugBank DB00171
KEGG C00002
ChEBI CHEBI:15422
Jmol-முப்பரிமாணப் படங்கள் Image 1
பண்புகள்
மூலக்கூறு வாய்பாடு }P}}
வாய்ப்பாட்டு எடை 507.18 g mol-1
அடர்த்தி 1.04 g/cm3 (disodium salt)
உருகுநிலை

187 °C, 460 K, 369 °F (disodium salt; decomposes)

காடித்தன்மை எண் (pKa) 6.5
வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள்
பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும்.
Infobox disclaimer and references

அடினோசின் முப்பொஸ்ஃபேட் ('Adenosine triphosphate' (ATP)) என்பது அனைத்து உயிரினங்களின் கலங்களிலும் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான துணை நொதியமாகும். இது உயிரினங்களில் சக்திக்கான அளவீடாக உள்ளது. கலத்துக்கிடையில் அனுசேபத்துக்காக சக்தியை இடம் மாற்றும் முக்கியமான மூலக்கூறாக அடினோசின் முப்பொஸ்ஃபேட் விளங்குகின்றது. ஒளித்தொகுப்பு, காற்றுள்ள சுவாசம் மற்றும் காற்றின்றிய சுவாசம் போன்ற உயிர்ச் செயன்முறைகள் இம்முறைகள் மூலம் கிடைக்கும் சக்தியை உயிரினங்கள் இம்மூலக்கூறில் சேமிக்கின்றன. அடினோசின் முப்பொஸ்ஃபேட்டில் மூன்று பொஸ்ஃபேட் கூட்டங்கள் உள்ளன. இம்மூலக்கூறு அடினோசின் இருபொஸ்ஃபேட் (ADP) மற்றும் அடினோசின் ஒற்றைபொஸ்ஃபேட் (AMP) ஆகியவற்றிலிருந்து உருவாக்கப்படுகின்றது. அடினோசின் முப்பொஸ்ஃபேட்டை சக்தி பிறப்பிக்க உயிரினங்கள் பயன்படுத்தும் போது அது மீண்டும் ADP, AMP ஆக மாற்றப்படுகின்றது. சாதாரணமாக மனித உடலில் 250 கிராம் ATP காணப்படும்.

பௌதிக மற்றும் இரசாயன இயல்புகள்[தொகு]

அடினோசின் (அடினைன் மற்றும் ரைபோஸ் வெல்லத்தால் ஆக்கப்பட்டது), மற்றும் மூன்று பொஸ்ஃபேட் கூட்டங்கள் (முப்பொஸ்ஃபேட்) ஆகியன அடினோசின் முப்பொஸ்ஃபேட்டை ஆக்குகின்றன. ATP ஒரு நிலைப்புத்தன்மை குறைவான சேர்வையாகும். அது இலகுவில் நீரில் அழிவடையக்கூடியது. எனினும் pH 6.8 மற்றும் 7.4க்கு இடையில் ஓரளவுக்கு நிலைப்புத் தன்மையுடன் காணப்படும். அடினோசின் முப்பொஸ்ஃபேட் நீரில் இலகுவாகக் கரையக்கூடியது. இது நீரேற்றப்படும் போது சக்தியை வெளியிடும். இச்சக்தியே உயிரினங்களின் செயற்பாட்டுக்குப் பயன்படுத்தப்படுகின்றது.

ATP + H2O → ADP + Pi   ΔG˚ = −30.5 kJ/mol (−7.3 kcal/mol)
ATP + H2O → AMP + PPi   ΔG˚ = −45.6 kJ/mol (−10.9 kcal/mol)

உயிரியல் தொகுப்பு[தொகு]

உயிரினமொன்றின் பல்வேறு அனுசேபச் செயற்பாடுகளின் போது வெளிவிடப்படும் சக்தியைத் தற்காலிகமாகச் சேமிக்க அடினோசின் முப்பொஸ்ஃபேட் பயன்படுகின்றது. பொதுவாக ஒரு கலத்தில் 1-10 மில்லி mol/dm3 செறிவில் இது காணப்படும். எளிய மாப்பொருட்களை அல்லது இலிப்பிட்டுக்களை ஒக்சியேற்றுவதிலிருந்து பெறப்படும் சக்தியைக் கொண்டு ATP ADPயிலிருந்து தயாரிக்கப்படும். இவ்வாறு ஒக்சியேற்றுவதற்கு முன்னர் சிக்கலான காபோவைதரேற்றுக்கள் மற்றும் சிக்கலான இலிப்பிட்டுக்கள் நீரேற்றுவதன் மூலம் எளிய வடிவத்துக்கு மாற்றப்படும். குளுக்கோசு மற்றும் ஃப்ரக்டோசு போன்ற எளிய வெல்லங்களாக சிக்கலான காபோவைதரேற்றுக்கள் மாற்றப்படுவதுடன்; கொழுப்பானது கொழுப்பமிலம் ஆகவும் கிளிசரோல் ஆகவும் மாற்றப்படும்.

ஒரு மூலக்கூறு குளுக்கோசை முழுமையாக நீராகவும், காபனீரொக்சைட்டாகவும் ஒக்சியேற்றுவதால் கிடைக்கப்பெறும் சக்தியைக் கொண்டு 30 ATP மூலக்கூறுகளைத் தொகுக்க முடியும்.