அடவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பரதநாட்டியத்தில் அடவு என்பது ஆடலின் ஆதாரப்பகுதியைக் குறிக்கும். நாட்டியம் பயிலத் தொடங்கும் ஒருவருக்கு பயிற்சி போன்று இவ் அடவு விளங்குகின்றது. தமிழில் ஆடல் என்ற அடிப்படைச் சொல்லைக் கொண்டது அடவு. அடவு என்பதனை தெலுங்கில் அடுகு என்று அழைப்பர். அடுகு என்றால் பாதத்தின் ஓர் அடி என்பது இதன் பொருளாகும்.

அடவு என்னும் சொல் முன்னர் சமஸ்கிருதத்தில் கரணம் எனக் கூறப்பட்டது. இவ் இரண்டு சொற்களின் பொருள் ஒன்று தான். ஆனால் இன்று பாவனையில் உள்ள அடவுகள் வேறு கரணம் என்ற சொல்லில் வழங்கும் 108 கரணங்கள் வேறு.

அடவு என்னும் சொல் தமிழ்நாட்டில் மட்டும் அன்றி ஆந்திரா, கர்நாடகம், கேரளம் போன்ற தேசங்களிலும் இன்று வரை உபயோகிக்கப்படுகின்றது. ஒரு மொழியில் வாக்கியங்கள் எவ்வாறு முக்கியமானதாக விளங்குகின்றதோ அது போல நடனத்திற்கு அடவுகள் விளங்குகின்றன. அடவு என்பது நிலை (ஸ்தானம்), பாதபேதங்கள் (சாரி), முத்திரைகள் (ஹஸ்தங்கள்) என்ற மூன்று அம்சங்களையும் உள்ளடக்கியதாகும். பரதநாட்டியத்தில் பல பாணிகள் உள்ளமையால் ஒவ்வொரு பாணிகளிலும் வித்தியாசமான அடவுகள் உள்ளன. பல அடவுகள் ஒரே மாதியாக இருந்தாலும் அவை வேறு வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகின்றன.அத்துடன் எண்ணிக்கையிலும் மாறுபாடுடையவையாகவும் காணப்படுகின்றன. பரதநாட்டியத்தில் பல அடவுகள் உள்ளன.


அடவுகளின் பெயர்களும், அவற்றின் எண்ணிக்கைகளும், அவற்றிற்குரிய தாளங்களும். 1. தட்டடவு 8 ஆதி,சதுஸ்ரரூபகதாளம் 2. நாட்டடவு 8 ஆதிதாளம் 3. தாதெய்தெய்தஅடவு 4 ஆதிதாளம் 4. குதித்துமெட்டடவு 4 ஆதிதாளம் 5. தெய்யா தெய்யிஅடவு 4 ஆதிதாளம் 6. தத்தெய்தாம்அடவு 6 ஆதிதாளம் 7. மண்டியடவு 4 ச.ரூபகதாளம் 8. தத்தெய்தாஹாஅடவு 4 ச.ரூபகம்,ஆதிதாளம். 9. தித்தெய்ந்;த தாதெய்அடவு 3 ஆதிதாளம் 10.தெய்தெய்தத்தா அடவு 3 ஆதி,(ச.ரூபகதாளம்) 11.சறுக்கல்அடவு 1 ஆதிதாளம் 12.கர்த்தரிஅடவு 1 ஆதிதாளம் 13.உத்சங்கஅடவு 1 ஆதிதாளம் 14.தித்தித்தெய்அடவு 2 ஆதிதாளம் 15.தெய்தெய்திதிதெய் அடவு 1 ஆதிதாளம் 16.தாஹதஜெம்தரிதாஅடவு 1 ச.ரூபகதாளம் 17.ததிங்கிணதொம் 1 ச.ரூபகதாளம் 18.கிடதக்கதரிகிடதொம் 1 ச.ரூபகதாளம் 19.தட்டுமெட்டடவு(பஞ்சநடை) 5 20.மெய்யடடவு 1


உசாத்துணை [தொகு]

  • பரதக்கலை கோட்பாடு, டாக்டர் பத்மா சுப்ரமணியம்- 2005 டிசம்பர் [பதிப்பு 6]
  பரதநாட்டியம் செய்முறை தாள விளக்கம்- திருமதி சிறீதேவி கண்ணதாசன் B.FA(Dance)dip.in.Ed-2007
  பைங்கலை பரதக்கலை- சுபாஷிணி பத்மநாதன்-2006
  ஆசிரியர் கைநூல்[தரம்6-தரம்13]  -தேசிய கல்வி நிறுவகம் கொழும்பு- இலங்கை
"http://ta.wikipedia.org/w/index.php?title=அடவு&oldid=764750" இருந்து மீள்விக்கப்பட்டது