அசுரக் கிளி
| style="background:#transparent; text-align:center; border: 1px solid red;;"| |
|---|
| style="background:#transparent; text-align:center; border: 1px solid red;;" | உயிரியல் வகைப்பாடு |
|
|
அசுரக் கிளி[ஆதாரம் தேவை] அல்லது கசாப்புக் காரன் என்பது ஒரு பறவையினம்..[ஆதாரம் தேவை] இதன் ஆங்கிலப் பெயர் ஷ்ரைக் அல்லது புச்சர் பேர்ட் (Shrike or Butcher bird) என்பதாகும். இது தனக்குக் கிடைக்கும் ஆகாரத்தை, அதாவது வெட்டுக்கிளி, ஓணான்,சுண்டெலி, சிறு பறவைகள் இவற்றை, வேலமரம் போன்ற ஒரு மரத்தின் நீண்ட முட்களில் குத்தி வைத்துக் கொள்ளும். பின்னர் பசி எடுக்கும்போது நிதானமாக தான் சேகரித்து வைத்த மாமிசத்தை உட்கொள்ளும். வேறு ஏதேனும் ஒரு பறவயோ, விலங்கோ அந்த மரத்தினை நெருங்கினால் அவற்றைத் துரத்தித் துரத்தி விரட்டி அடிக்கும்.
இந்தியாவில் சுமார் ஐந்தாறு வகையான கசாப்புக் காரக் குருவிகள் உள்ளன. அவற்றில் தமிழ் நாட்டில் பே பேக்ட் ஷ்ரைக் என்பதையும், க்ரே ஷ்ரைக் என்பதையும் (Bay backed shrike and Grey shrike) நாட்டுப் புறங்களிலும், தரிசுக் காடுகளிலும் காணலாம். இந்த வகை குருவிகள் முட்கள் உள்ள மரங்களின் அருகில் இருக்கும்.