அசின் விராத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விராத்து
Wirathu
சுய தரவுகள்
பிறப்புசூலை 10, 1968 (1968-07-10) (அகவை 55)
கியாவுக்சி, மண்டலை, பர்மா
சமயம்பௌத்தம்
தேசியம்பர்மியர்
பாடசாலைதேரவாத பௌத்தம்
Occupationபௌத்த மதகுரு
கோயில்மசோயின் விகாரை, மண்டலை

அசின் விராத்து (Ashin Wirathu, அஷின் விராத்து, பிறப்பு: 10 சூலை 1968) என்பவர் பர்மிய பௌத்த துறவியும், பர்மாவின் முஸ்லிம்களுக்கு எதிரான 969 இயக்கத்தின் ஆன்மிகத் தலைவரும் ஆவார். இவர் தனது உரைகளின் மூலம் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டுகிறார் எனக் குற்றம் சாட்டப்படுகிறார். ஆனாலும், தாம் ஒரு அமைதிவழி அறவுரையாளர் எனக் கூறி வரும்,[1] அதேவேளையில், முஸ்லிம்களை எதிரிகள் எனத் தனது உரைகளில் வெளிப்படையாகப் பேசி வருகிறார்.[2][3]

பின்புலம்[தொகு]

1968 இல் மண்டலையில் பிறந்த விராத்து தனது 14வது அகவையில் பள்ளிப் படிப்பை இடைநிறுத்தி, பௌத்த மதகுருவானார். 2001 ஆம் ஆண்டில், 969 இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.[4] 2003 ஆம் ஆண்டில் இவரின் உரைகளுக்காக, இவருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டில் ஏனைய அரசியல் கைதிகளுடன் சேர்த்து விடுவிக்கப்பட்டார்.[5] 2011 ஆம் ஆண்டில் பர்மிய அரசு பல அரசியல் சீர்திருத்தங்களை அறிவித்ததை அடுத்து, விராத்து தேரர் யூடியூப் உட்படப் பல சமூக வலைத்தளங்களில் பங்களித்தார்.[6]

இசுலாம் எதிர்ப்பு[தொகு]

2012 செப்டம்பரில், அரசுத்தலைவர் தெய்ன் செய்ன் அறிவித்த ரோகிங்கியா முஸ்லிம்களை மூன்றாம் நாடொன்றுக்கு அனுப்பும் சர்ச்சைக்குரிய திட்டத்தை ஆதரித்து மதகுருக்களின் ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றை நடத்தினார். ஒரு மாதத்தின் பின்னர் ராக்கைன் மாநிலத்தில் வன்முறைகள் வெடித்தன. 43 பேர் வரை கொல்லப்பட்டனர். பள்ளிவாசல்கள், கடைகள், வீடுகள் சேதமாக்கப்பட்டன.[7][8][9][10]

டைம் இதழ் தனது 2013 சூன் 20 இதழ் முகப்பில் "தீவிரவாத பிக்குவின் முகம்" எனத் தலைப்பிட்டு விராத்து பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தது.[11] முசுலிம்களைப் பற்றி விராத்து தேரர் குறிப்பிடுகையில், "நீ அன்பையும், பரிவையும் பெருமளவு கொண்டிருக்கலாம், ஆனால் ஒரு முட்டாள் நாய்க்கு அருகில் நீ தூங்க முடியாது," என்றார்.[1] பௌத்தர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் இடம்பெறும் திருமணங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் எனவும்,[12] முஸ்லிம்களின் வணிக நிறுவனங்களை ஒன்றியொதுக்கல் செய்ய வேண்டும் எனவும்,[6] கேட்டுள்ளார்.

பொது பல சேனாவுடன் கூட்டு[தொகு]

2014 செப்டம்பர் 29 இல் இலங்கையின் பொது பல சேனா என்ற பௌத்த கடும்போக்கு அமைப்பு கொழும்பில் நடத்திய மாநாட்டில் கலந்து கொண்ட அசின் விராத்து தேரர் தனது 969 இயக்கம் பொது பல சேனாவுடன் சேர்ந்து இயங்கும் எனத் தெரிவித்தார். முஸ்லிம்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் தமக்கு நுழையுரிமை அளித்தமைக்காக இலங்கை அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவிற்கு நன்றி தெரிவித்தார்.[13][14]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Thomas Fuller (June 20, 2013). "Extremism Rises Among Myanmar Buddhists". த நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/2013/06/21/world/asia/extremism-rises-among-myanmar-buddhists-wary-of-muslim-minority.html. 
  2. Sectarian divide in Myanmar driven by radical Buddhism பரணிடப்பட்டது 2013-07-13 at the வந்தவழி இயந்திரம் - ஹிந்துஸ்தான் டைம்ஸ்
  3. http://www.economist.com/news/asia/21582321-fuelled-dangerous-brew-faith-ethnicity-and-politics-tit-tat-conflict-escalating Buddhism v Islam in Asia: Fears of a new religious strife
  4. Alan Strathern (May 1, 2013). "Why are Buddhist monks attacking Muslims?". BBC. http://www.bbc.co.uk/news/magazine-22356306. 
  5. Kate Hodal (ஏப்ரல் 28, 2013). "Buddhist monk uses racism and rumours to spread hatred in Burma". Guardian. http://www.guardian.co.uk/world/2013/apr/18/buddhist-monk-spreads-hatred-burma. 
  6. 6.0 6.1 Gianluca Mezzofiore (March 26, 2013). "Fanatical Buddhist Monk Saydaw Wirathu Calling for Boycott of Myanmar Muslims". International Business Times. http://www.ibtimes.co.uk/articles/450375/20130326/saydaw-wirathu-myanmar-969-burma.htm. 
  7. Phyo Wai Lin, Jethro Mullen and Kocha Olarn (March 22, 2013). "Armed Buddhists, including monks, clash with Muslims in Myanmar". CNN. http://www.cnn.com/2013/03/22/world/asia/myanmar-clashes/index.html. 
  8. "Inteview with Myanmar's President". CNN. May 24, 2013. http://edition.cnn.com/TRANSCRIPTS/1305/24/ampr.01.html. 
  9. "The Rohingya Saga". Korean Press News. June 21, 2013 இம் மூலத்தில் இருந்து டிசம்பர் 24, 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181224213654/http://e.koreanpress.net/detail.php?number=1370&thread=22r02r01. 
  10. Horrifying Moment Burmese Buddhists Set Fire to Muslim Man in Riots Which Left 43 Dead | American Renaissance
  11. Hannah Beech (July 1, 2013). "The Face of Buddhist Terror". Time Magazine இம் மூலத்தில் இருந்து டிசம்பர் 24, 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181224213653/http://content.time.com/time/magazine/article/0,9171,2146000,00.html#ixzz2Wo5x4M7Q. 
  12. Shibani Mahtani (July 22, 2013). "Myanmar Plan to Curb Interfaith Marriage Gains Support". Wall Street Journal. http://online.wsj.com/article/SB10001424127887323829104578619462267929512.html. 
  13. "Ashin Wirathu Thera of Myanmar to work with BBS". டெய்லி மிரர். 28 செப்டம்பர் 2014. http://www.dailymirror.lk/news/53056-ashin-wirathu-thera-of-myanmar-to-work-with-bbs.html. 
  14. 'சிங்கள இந்துக்கள், சிங்கள முஸ்லிம்கள், சிங்கள கிறிஸ்தவர்கள்', பிபிசி தமிழோசை, செப்டம்பர் 29, 2014

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசின்_விராத்து&oldid=3259450" இலிருந்து மீள்விக்கப்பட்டது