அகாமனிசியப் பேரரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அக்கீமனிட் பேரரசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
هخامنشیان
அகாமனிசியப் பேரரசு
பேரரசு
Blank.png
 
Blank.png
 
Blank.png
 
Blank.png
கிமு 550 – கிமு 330 Blank.png
 
Blank.png
 
Blank.png
அகாமனிசியர் அமைவிடம்
அகாமனிசியப் பேரரசின் உயர்நிலையில் அதன் அளவு
தலைநகரம் எக்பாட்டானா, பாசர்கடீ, பெர்சேபோலிஸ், சூசா
மொழி(கள்) பழைய பாரசீகம், ஈலமைட்டு மொழி, அக்காடியன்
அரசு முடியாட்சி
அரசர்
 - கிமு 559 –கிமு 529 பேரரசன் சைரஸ் II
 - கிமு 336 –கிமு 330 டேரியஸ் III
பண்டைக்காலம் பண்டைய வரலாறு
 - நிறுவிய ஆண்டு கிமு 550
 - பெர்செபோலிசில் கட்டுமானம் தொடங்கியது கிமு 515
 - எகிப்து கம்பிசஸ் II ஆல் கைப்பற்றப்படல் கிமு 525
 - கிரேக்க-பாரசீகப் போர்கள் கிமு 499–449
 - வெற்றிகரமான எகிப்தியக் கலகம் எகிப்தின் விடுதலைக்கு வித்திட்டது. 404 BC
 - கைப்பற்றப்பட்டது கிமு 330
 - பக்திரியாவின் சத்ரப் பேசஸ் தாரியுஸ் III ஐக் கொன்றுவிட்டுத் தானே அரசன் ஆர்டக்சேர்க்செஸ் V ஆக முடிசூட்டிக் கொண்டான். கிமு 330

அகாமனிசியப் பேரரசு அல்லது அக்கீமெனிட் பேரரசு (பழைய பாரசீக மொழி: Haxâmanishiya, ஹகாமனிசியப் பேரரசு, ஆங்கிலம்: Achaemenid Empire அகமனீதுப் பேரரசு, கிமு 550-330), அகன்ற ஈரானின் குறிப்பிடத்தக்க பகுதியை ஆண்ட முதல் பாரசீகப் பேரரசு ஆகும். இதன் பலம் உயர்நிலையில் இருந்தபோது இது 7.5 மில்லியன் சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பைத் தன்னுள் அடக்கியிருந்தது. நிலப்பரப்பின் அடிப்படையில் செந்நெறிக்காலப் பேரரசுகளில் மிகப் பெரியது இதுவேயாகும்.

இப்பேரரசு பேரரசன் சிரியசினால் நிறுவப்பட்டது. இது, ஆப்கனிஸ்தான், பாகிஸ்தான் ஆகியவற்றின் பகுதிகள், நடு ஆசியா, சின்ன ஆசியா ஆகியவற்றின் பகுதிகள், பெரும்பாலான கருங்கடல் கரையோரப் பகுதிகள், ஈராக், வடக்கு சவூதி அரேபியா, ஜோர்தான், இஸ்ரேல், லெபனான், சிரியா, எகிப்தின் குறிப்பிடத்தக்க குடியேற்றப் பகுதிகள், லிபியா ஆகியவற்றை உள்ளடக்கி மூன்று கண்டங்களில் பரந்திருந்தது. மேற்கத்திய வரலாற்றில் இப் பேரரசு, கிரேக்க-பாரசீகப் போர்களில் கிரேக்க நகர அரசுகளின் எதிரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பேரரசின் அளவும், அது நீண்டகாலம் நிலைத்திருந்ததும்; மொழி, சமயம், கட்டிடக்கலை, மெய்யியல், சட்டம், நாடுகளின் அரசுகள் ஆகியவற்றின் மீது பாரசீகச் செல்வாக்கு இன்றுவரை நிலைத்திருப்பதற்கான காரணமாகியது.

வரலாறு [தொகு]

மீடெஸ் அரசின் ஒரு சிற்றரசாகத் தொடங்கிய இவ்வரசு பின்னர் மீடெசைக் கைப்பற்றி எகிப்து சின்ன ஆசியா ஆகியவற்றையும் உள்ளடக்கி விரிவாகியது. செர்க்செசின் கீழ் பண்டைய கிரீசையும் கைப்பற்றுமளவுக்கு நெருங்கியது. கிமு 330 ஆம் ஆண்டின் அக்கீமெனிட் பேரரசு பேரரசன் அலெக்சாந்தரால் தோற்கடிக்கப்படது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=அகாமனிசியப்_பேரரசு&oldid=1426393" இருந்து மீள்விக்கப்பட்டது