அக்கிரைடீ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| அக்கிரைடீ | ||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||
|
||||||||||
| பேரினம் | ||||||||||
|
பல; கட்டுரையில் பார்க்கவும் |
அக்கிரைடீ (Achiridae) என்பது அமெரிக்காக்களின் கடல்களிலும், நன்னீரிலும் வாழும் தட்டைமீன்களைக் கொண்ட குடும்பம் ஆகும். இக் குடும்பத்தில் 9 பேரினங்களைச் சேர்ந்த 28 இனங்கள் உள்ளன. இவை சொலிடீக்களுக்கு நெருங்கிய உறவுடையவை. ஆனாலும் ஆக்கிரைடீக்கள் பல தனித்துவமான இயல்புகளைக் கொண்டவை.
கண்கள் வலது பக்கத்தில் காணப்படுகின்றன. கண்ணிருக்கும் பக்கத்தில் உள்ள கீழுதட்டுப் பகுதி தசைப் பிடிப்பான வளையத்தைக் கொண்டுள்ளது. முதுகுத் துடுப்பும், குதத் துடுப்பும் வழமையாக வால் துடுப்பிலிருந்து வேறாகக் காணப்படும். முன் துடுப்பு (மார்புச் செட்டை) சிறிதாக இருக்கும் அல்லது இல்லாமலே இருக்கக்கூடும்.
[தொகு] அக்கிரைடீ குடும்பம்
- பேரினம் அக்கிரோப்சிசு
- பேரினம் அக்கிரசு
- பேரினம் அப்பியோனிக்தைசு
- பேரினம் கட்டத்தைரைடியம்
- பேரினம் ஜிம்னாக்கிரசு
- பேரினம் ஹைப்போகிளினேமசு
- பேரினம் நிக்டசு
- பேரினம் சோலியோனாசசு
- பேரினம் டிரைநெக்டசு