அகமுடையார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அகமுடையார்
Aandiyappathevar.jpg Valivalamdesikar.jpg ]]Manikanayakar.jpg Pachaiyappamudaliar.jpg Naadimuthupillai.jpg Narayanasamiagampadiyar.jpg Maruthu1.jpg MarudhuStamp.jpg
மொத்த மக்கள்தொகை

1.5 கோடி[சான்று தேவை]

குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், கர்நாடகா, ஆந்திரா, இலங்கை, மலேசியா, பர்மா, சிங்கப்பூர்
மொழி(கள்)
தமிழ்
சமயங்கள்
இந்து, கிறிஸ்துவம்,

அகம் + உடையார் = அகமுடையார்

அகமுடையார் என்றால் அகத்திற்கு தேவையான அறிவும் - வீரமும் இயல்பாக உடையவர் என்று பொருள் கூறலாம்.பொதுவாக அகமுடையார் என்பதன் பொருள் நில உடைமையாளர், நம்பிக்கைக்குரியவர், பரந்த சிந்தனையாளர் என்று பலவாறாக பொருளில் இலக்கியங்கள் ஊடாக அறிந்துகொள்ள முடிகிறது.மேலும் அகம்படியர் என்பதற்கு அரசாங்க சேவகர் (சேர்வை)என்றே பொருள் உண்டு. தமிழகத்தை பொறுத்தவரையில் முக்குலத்தோர் சமுதாயத்தில் ஒன்றாகவே அகமுடையார் குலம் இனம் காணப்படுகிறது. அகமுடையார் குலத்தில் சேர்வை , தேவர்,உடையார்,பிள்ளை, முதலியார் உள்ளிட்ட இந்தப் பட்டங்களே பெரும்பான்மையான காணமுடிகிறது.

அகமுடையார்களில் "தேவர்" பட்டம் என்பது தமிழகத்தின் பெரும்பான்மை மாவட்டங்களில் வழங்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தின் நாகப்பட்டினம் - திருவாரூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வாழும் அகமுடையார்களுக்கு தேவர் பட்டமே. தஞ்சை டெல்டா பகுதிகளில் தேவர் பட்டம் கொண்டுள்ள அகமுடையார் இனத்தினர், ”பதினெட்டு கோட்டை பற்று அகமுடையார்” என்ற குலபிரிவை சார்ந்த்துள்ளனர். இதை தவிர்த்து, ”சித்தர் மரபு அகமுடையார்” மற்றும் ”தஞ்சை ராஜ வம்சத்து அகமுடையார்” என்ற பிரிவும் இன்றளவும் வேதாரண்யம் - முத்துப்பேட்டை போன்ற தஞ்சை கடலோர பகுதிகளில் வாழும் அகமுடையார் இன மக்களுக்கு உண்டு.

அகமுடையார்களில் பொதுவாக "பிள்ளை" பட்டம் என்பது அரண்மனைக் கணக்காயர்களையே குறிக்கிறது. ”கள்ளர்,மறவர்,கணக்காயர், அகமுடையார் மெல்ல மெல்லவே வெள்ளாளர் ஆனாரே” என்ற பாடல் வாயிலாக, போர்த்தொழிற்கு அடுத்த கட்ட நகர்வான வேளாண்மை தொழிலில் ஈடுபட ஆரம்பித்து, அதிலேயே நில நீட்சிகளோடு வாழ்ந்தவர்களின் வழித்தோன்றல்கள் அகம் உடையார் என்ற பட்டத்தோடு அறியப்பட்டனர்.

அகமுடையார்களில் "முதலியார்" என்ற பட்டம் உடையவர்கள் வட தமிழகத்தில் பெரும்பான்மையாக செருமி வாழ்கின்றனர்.அகமுடைய முதலியார் என்பது போர்ப்படை தளபதிகளையே குறிக்கின்றது. முதலி என்பது ஒரு படையை தலைமைத்தாங்குகின்ற முதன்மையான தளபதி என்று பொருள் தருகிறது. வடதமிழகத்தில் வாழும் அகமுடையார்கள் அனைவருக்கும் பட்டம் என்பது முதலியார்,உடையார்,பிள்ளை என்று இருந்த போதிலும், அவர்கள் தங்களை அகமுடையார்களாகவே அடையாளப்படுத்தி கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அகமுடையார் குல பிரிவுகள்[தொகு]

 1. ராஜகுலம்
 2. புண்ணியரசு நாடு
 3. கோட்டைப்பற்று (பதினெட்டு கோட்டைப்பற்று)
 4. இரும்புத்தலை
 5. ஐவளிநாடு
 6. நாட்டுமங்களம்
 7. ராஜபோஜ
 8. ராஜவாசல்
 9. கலியன்
 10. சானி
 11. மலைநாடு
 12. பதினொரு நாடு
 13. துளுவன்

அகமுடையார் குல பட்டங்கள்[தொகு]

 1. அகமுடைய தேவர்
 2. அகமுடைய சேர்வை
 3. அகமுடைய பிள்ளை
 4. அகமுடைய முதலியார்
 5. அகமுடைய உடையார்
 6. அகமுடைய தேசிகர்
 7. அகமுடைய அதிகாரி
 8. அகமுடைய மணியக்காரர்
 9. துளுவ வேளாளர்
 10. அகமுடைய பல்லவராயர்

இதை தவிர்த்த ஏனைய பட்டங்கள்

 1. வானவர்
 2. பொறையர்
 3. வேளிர்
 4. பழுவேட்டரையர்
 5. வில்லவர்
 6. உதயர்
 7. சேரன்
 8. மலையன்
 9. மலையான்
 10. வானவன்
 11. வானவராயன்
 12. வல்லவராயன்
 13. பனந்த்தாரன்
 14. பொறையான்
 15. மலையமான்
 16. தலைவன்
 17. படையாட்சி
 18. மனியக்காரான்
 19. பூமியன்
 20. கோளன்
 21. வர்மா
 22. நாகன்
 23. பாண்டியன்
 24. கொங்கன்
 25. அம்பலம்
 26. நாட்டான்மை

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கோயம்புத்தூர்,திண்டுக்கல், திருப்பூர், விருதுநகர், திருநெல்வேலி, மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் தேவர் என்ற பட்ட பெயருடனும், இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் சேர்வை என்ற பட்டத்தோடும், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம்,கடலூர், சென்னை, பெரம்பலூர், சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் முதலியார், துளுவ வேளாளர், உடையார் என்ற பட்டங்களோடும் அகமுடையார் இனத்தினர் அறியபடுகின்றனர்.

மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திர,கேரளா உள்ளிட்ட தென்னிந்தியா முழுவதும் பலவேறு பட்டப்பெயர்களுடன் வசித்து வருகின்றனர். இதைதவிர்த்து, இலங்கை, மலேசியா, பர்மா, சிங்கப்பூர் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பெரும்பாலான அகமுடையார் குலத்தினர் பல தலைமுறைகளாக பூர்வீகமாக வசித்து வருகின்றனர். தமிழகத்தின் அனைத்து பகுதியிகளிலும் அகமுடையார் இனத்தினர் பரந்து விரிந்து வாழ்ந்து வருகின்றனர்.தென் தமிழகத்தில் அகமுடையார்களை முக்குலத்தோர் பிரிவுகளில் ஒன்றாகவும் கருதி வருகின்றனர்.

வட தமிழகத்தை பொருத்தவரையிலும் அகமுடையார் இனத்தினர் தனித்தே அடையாளப்பட்டு வருகின்றனர்.பெரும்பாலும் அகமுடையார் இனத்தினரின் பட்டங்களையும், பட்ட பெயர்களையும் வைத்து பலவாறு தமிழகம் முழுவதும் சிதறிக் கிடக்கின்றனர்.தென் தமிழகத்தில் அகமுடையார்களை சேர்வை என்றும் மேலும் முதலியார்,பிள்ளை என்ற பட்டங்களுடன் வட தமிழகத்திலும், தேவர்,பிள்ளை,அதிகாரி,உடையார்,நாயக்கர், தேசிகர் போன்ற பல பட்ட பெயர்களுடன் மத்திய தமிழகத்திலும் அறியபடுகின்றனர்.

அகமுடைய தேவர்:

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கோயம்புத்தூர், திண்டுக்கல், திருப்பூர், விருதுநகர், திருநெல்வேலி, மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் தேவர் என்ற பட்டப் பெயரை தாங்கி அகமுடையார் இனத்தினர் அறியபடுகின்றனர்.

அகமுடைய சேர்வை:

இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் சேர்வை என்ற பட்ட பெயரை தாங்கி அகமுடையார் இனத்தினர் அறியபடுகின்றனர்.

அகமுடைய முதலியார,துளுவவேள்ளார் ,உடையார் மற்றும் பிள்ளை

காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சென்னை, பெரம்பலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் முதலியார் என்ற பட்ட பெயரை தாங்கி அகமுடையார் இனத்தினர் அறியபடுகின்றனர்.

அரசியல் பங்களிப்பாளர்கள்[தொகு]

 • A.வைரவன் சேர்வை அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் (1957-1962)-பட்டுக்கோட்டை (கரம்பக்காடு)
 • V.வைரவ தேவர் அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் - பட்டுக்கோட்டை (குண்டமரைக்காடு)
 • வை.நாடிமுத்து பிள்ளை (முன்னாள் MP,DT Board chairman,and MLA) உறுப்பினர்) - பட்டுக்கோட்டை
 • கருப்பு முருகானந்தம் (பா.ஜ.க மாநில பொது செயலாளர்)
 • ப.உ.சண்முகம் (முன்னாள் அமைச்சர்) - திருவண்ணாமலை
 • க.ராஜாராம் (முன்னாள் அமைச்சர் & சபாநாயகர்) - பனைமரத்துபட்டி,சேலம்
 • டி.ராமசாமி (முன்னாள் அமைச்சர்) - ராமநாதபுரம்
 • தா.கிருட்டிணன் (முன்னாள் அமைச்சர்) - மதுரை
 • பொன்.முத்துராமலிங்கம் (முன்னாள் அமைச்சர்) - மதுரை
 • முனைவர் கோ.சமரசம் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) - காவேரிப்பட்டினம்,வேலூர்(மா)
 • ஆர்.ஜீவரத்தினம் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) - அரக்கோணம்,வேலூர்(மா)
 • ஜெயமோகன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) - திருப்பத்தூர்,வேலூர்(மா)
 • பாண்டுரங்கன் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) - கலசபாக்கம்,திருவண்ணாமலை(மா)
 • ஆர்.சண்முகம் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) - திருத்தணி
 • பி. என். வல்லரசு ( முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ) - உசிலம்பட்டி
 • வி.எம்.தேவராஜ் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) - வேலூர்
 • வி.மாரிமுத்து (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) - நாகப்பட்டினம்
 • பி.வி.ராஜேந்திரன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) - வேதாரண்யம்
 • வி.என்.சுவாமிநாதன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) - பட்டுக்கோட்டை
 • பவானி ராஜேந்திரன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) - இராமநாதபுரம்
 • கோ.சி.மணி (முன்னாள் கூட்டுறவு துறை அமைச்சர்) - ஆடுதுறை,கும்பகோணம்
 • டி.ஆர். பாலு (முன்னாள் மத்திய அமைச்சர் & நாடாளமன்ற உறுப்பினர்) - வடசேரி, தஞ்சாவூர்
 • ஏ.சி. சண்முகம் புதிய நீதிக்கட்சி, ஆரண், திருவண்ணாமலை (எம்.ஜி.ஆர் பல்கலைகழகம், சென்னை)
 • பொன்முடி (உயர்கல்வித்துறை அமைச்சர்) - விழுப்புரம்
 • ஆர்.ரெங்கராஜன் (சட்டமன்ற உறுப்பினர்) - பட்டுகோட்டை
 • ஒ.எஸ்.மணியன் (நாடாளுமன்ற உறுப்பினர்) - வேதாரண்யம்
 • அக்ரி கிருஷ்ணமூர்த்தி (உணவுத்துறை அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்) - கலசபாக்கம்
 • ஞானசேகரன் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) - வேலூர்
 • முனைவர் வி.எஸ்.விஜய் (சுகாதாரத் துறை அமைச்சர் _ வேலூர்)
 • லதா அதியமான் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) - திருமங்கலம்,மதுரை
 • குணசேகரன் (சட்டமன்ற உறுப்பினர்) - சிவகங்கை
 • டி.கே.எஸ். இளங்கோவன் (நாடாளுமன்ற உறுப்பினர்) - சென்னை
 • என்.வி.காமராஜ் (சட்டமன்ற உறுப்பினர்) - வேதாரண்யம்
 • டி.ஆர்.பி.ராஜா (சட்டமன்ற உறுப்பினர்) - மன்னார்குடி
 • முத்துகுமரன் (சட்டமன்ற உறுப்பினர்) - புதுக்கோட்டை
 • ஜெ.சுதா லட்சுமிகாந்தன் (சட்டமன்ற உறுப்பினர்) - போளூர்
 • பா.மோகன் (சட்டமன்ற உறுப்பினர்) - சங்கராபுரம்
 • இரா.குமரகுரு (சட்டமன்ற உறுப்பினர்) - உளுந்தூர்பேட்டை
 • மா.மீனாட்சிசுந்தரம் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) - வேதாரண்யம்
 • எம். எஸ். மாணிக்கம் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) - வேதாரண்யம்
 • கோ.கார்த்திக்கரிகாலத்தேவர் (நிறுவனர் தலைவர்) மூவேந்தர் மக்கள் கட்சி - சென்னை
 • எம்.சி.ஏ. ரத்தினசாமி சேர்வை (முன்னாள் ச.ம.உ) திருமங்கலம் - மதுரை
 • எம்.சி.எஸ். அதியமான் ((முன்னாள் ச.ம.உ) திருமங்கலம் - மதுரை

போராளிகள்[தொகு]

 • மருதுபாண்டியர் (வெள்ளை மருது, சின்ன மருது)
 • வட்டாக்குடி இரணியன்
 • சாம்பவான் ஓடைச் சிவராமன்
 • ஆலாலம்பட்டு சுந்தரம்
 • மணலி கந்தசாமி
 • கருப்ப சேர்வை (தீரன் சின்னமலையின் உற்ற தோழன் மற்றும் படைத்தளபதி)

மொழி[தொகு]

 • வள்ளல் பச்சையப்பா முதலியார்
 • கரந்தை த.வே.உமாமகேஸ்வரன் பிள்ளை
 • சி.இலக்குவனார்
 • காவேரிபாக்கம் நவச்சிவாய முதலியார்
 • ஆரணி குப்புசாமி முதலியார்

ஆன்மீகம்[தொகு]

 • நந்தி தேவர்
 • சுந்தரானந்தர்
 • பாம்பன் சுவாமிகள்

இலக்கியம்[தொகு]

 • பேராசிரியர் சி. இலக்குவனார்
 • கவிஞர் புலமை பித்தன்
 • கவிஞர் முத்துலிங்கம்
 • குருவிக்கரம்பை சண்முகம்
 • பட்டுக்கோட்டை குமரவேலு
 • தேனி. பொன்.கணேஷ் (ஆன்மிக எழுத்தாளர்)
 • மு.வரதராசனார்
 • வீரபத்ர முதலியார் (விருத்தப்பாவியல் இயற்றியவர்)
 • முனைவர் தனராசன் (கரு வேப்பஞ்சேரி நாராயணசாமி மகன்)
 • முனைவர் இரமேஷ் சாமியப்பா ( ஸ்ரீமான் நாடிமுத்துபிள்ளை மைத்துனர் மகன்)
 • முனைவர் சு.இராசாராம், காரைக்குடி

நாடகம்[தொகு]

 • சங்கிலியா பிள்ளை

புதுக்கவிதை[தொகு]

 • கவிஞர் மீரா, சிவகங்கை.

திரைப்படத் துறை[தொகு]

 • பி.யு.சின்னப்பா பாகவதர் (நடிகர்)
 • எஸ்.எஸ்.இராஜேந்திரன் (நடிகர்)
 • சாண்டோ சின்னப்பா தேவர் (நடிகர்,தயாரிப்பாளர்)
 • எஸ்.எஸ்.சந்திரன் (நடிகர்)
 • சங்கிலி முருகன் (நடிகர்,தயாரிப்பாளர்)
 • கோவி.மணிசேகரன் (இயக்குனர்,திரைக்கதையாசிரியர்)
 • எம்.எஸ்.பாஸ்கர் (நடிகர்)
 • பரோட்டா சூரி (நடிகர்)
 • சிவநாராயண மூர்த்தி (நடிகர்)
 • வசந்தபாலன் (இயக்குனர்: வெயில்,அங்காடித்தெரு)
 • கலைப்புலி தாணு (தயாரிப்பாளர்)
 • சிம்புதேவன் (இயக்குனர்: இம்சை அரசன் 23ம் புலிகேசி,)
 • எஸ்.பி.ஜெனநாதன் (இயக்குனர்: இயற்கை,ஈ,பேராண்மை )
 • ஜீவா (இயக்குனர்: 12B,உன்னாலே உன்னாலே,தாம் தூம்)

வெளி இணைப்பு[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=அகமுடையார்&oldid=1720936" இருந்து மீள்விக்கப்பட்டது