ஃவத்தேப்பூர் மாவட்டம்
| ஃவத்தேப்பூர் மாவட்டம் फ़तेहपुर ज़िला فتح پور ضلع |
|
|---|---|
|
ஃவத்தேப்பூர்மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம் |
|
| மாநிலம் | உத்தரப் பிரதேசம், இந்தியா |
| நிர்வாக பிரிவுகள் | அலகாபாத் |
| தலைமையகம் | ஃவத்தேப்பூர் |
| பரப்பு | 4,152 கிமீ2 (1 ச மைல்) |
| மக்கட்தொகை | 2,675,384 (2011) |
| படிப்பறிவு | 58.6% |
| மக்களவைத்தொகுதிகள் | ஃவத்தேப்பூர் |
| முதன்மை நெடுஞ்சாலைகள் | தேநெ 2 |
| அதிகாரப்பூர்வ இணையத்தளம் | |
ஃவத்தேப்பூர் மாவட்டம் (இந்தி: फ़तेहपुर ज़िला, உருது: فتح پور ضلع) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் 71 மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத்தின் பரப்பு 4,152 km². இம்மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 2,675,384 (2011 கணக்கெடுப்பு). ஃவத்தேப்பூர் இம்மாவட்டத்தின் நிர்வாக தலைமையகம் ஆகும். இவ்வூர் புனித நதிகளான கங்கை மற்றும் யமுனை நதிகளின் கரையில் அமைந்துள்ளது. மேலும் இவ்வூரைப் பற்றி புராணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. ஃவத்தேப்பூர் மாவட்டம் அலகாபாத் பிரிவின் கீழ் அமைந்துள்ளது.
பொருளடக்கம் |
பொருளாதாரம்[தொகு]
2006ல் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஃவத்தேப்பூர் மாவட்டத்தை இந்தியாவின் 640 மாவட்டங்களில் மிகவும் பின்தங்கியுள்ள 250 மாவட்டங்களில் ஒன்றாக அறிவித்தது.[1] இம்மாவட்டம் பின்தங்கியுள்ள பகுதிகளுக்கான நிதி வழங்கும் திட்டம் (BRGF) மூலம் உத்தரப்பிரதேசத்தில் பயன்பெறும் 34 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1]
மக்கள் வகைப்பாடு[தொகு]
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி ஃவத்தேப்பூர் மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 2,632,684.[2] இது தோராயமாக குவைத் நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[3] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 154வது இடத்தில் உள்ளது.[2] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 634 /சதுர கிலோமீட்டர் (1 /sq mi).[2] மேலும் ஃவத்தேப்பூர் மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 14.05%.[2]ஃவத்தேப்பூர் மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 900 பெண்கள் உள்ளனர்.[2] மேலும் ஃவத்தேப்பூர் மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 68.78%.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme". National Institute of Rural Development. பார்த்த நாள் September 27, 2011.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "District Census 2011". Census2011.co.in (2011). பார்த்த நாள் 2011-09-30.
- ↑ US Directorate of Intelligence. "Country Comparison:Population". பார்த்த நாள் 2011-10-01.
வெளியிணைப்புகள்[தொகு]
விக்சனரி விக்சனரி
நூல்கள் விக்கிநூல்
மேற்கோள் விக்கிமேற்கோள்
மூலங்கள் விக்கிமூலம்
விக்கிபொது
செய்திகள் விக்கிசெய்தி
![]() |
உன்னாவ் மாவட்டம் | ரேபரேலி மாவட்டம்' | ![]() |
|
| கான்பூர் நகர் மாவட்டம் | கௌசாம்பி மாவட்டம் | |||
| அமிர்ப்பூர் மாவட்டம் | பாந்தா மாவட்டம் | சித்திரக்கூட மாவட்டம் |
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
