ஃபொலினிக் அமிலம்
| ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர் | |
|---|---|
| (S)-2-[4-[(2-amino-5-formyl-4-oxo-5,6,7,8- tetrahydro-1H-pteridin-6-yl)methylamino] benzoyl]aminopentanedioic acid |
|
| மருத்துவத் தரவு | |
| கர்ப்பகால மதிப்பீட்டு வகை | A(AU) C(US) |
| சட்டத் தகுதிநிலை | ? |
| வழிகள் | சிரை வழியாகவும் வாய் வழியாகவும் |
| மருந்தியக்கத் தரவு | |
| உயிரகக் கிடைப்புத் தன்மை | மூலக்கணியம்[1]
|
| புரத இணைப்பு | ~15% |
| வளர்சிதைமாற்றம் | - |
| அரைவாழ்வுக்காலம் | 6.2 மணி |
| அடையாளக் குறிப்புகள் | |
| CAS எண் | 1492-18-8 |
| ATC குறியீடு | V03AF03 |
| பப்கெம் | CID 6006 |
| DrugBank | APRD00698 |
| ChemSpider | 5784 |
| UNII | RPR1R4C0P4 |
| வேதியியல் தரவு | |
| சூத்திரம் | C20 |
| மூலக்கூற்றுத்திணிவு | 473.44 g/mol |
| SMILES | eMolecules & PubChem |
ஃபொலினிக் அமிலம் (Folinic acid) அல்லது லூக்கோவொரின் (leucovorin) எனும் மருந்தானது மீத்தோடிரெக்சேட் (methotrexate) போன்ற புற்று நோய்க்கு எதிரான மருந்துகளைத் தரும் போது நமது உடலில் உள்ள இயல்பான செல்களுக்கு ஏற்படும் பாதிப்பை மட்டுப்படுத்தக் கூடிய முக்கியமான ஒன்றாகும்.
பொருளடக்கம் |
இயங்கும் விதம் [தொகு]
ஃபொலினிக் அமிலமானது வைட்டமினான டெட்ரா ஹைட்ரோ ஃபோலிக் அமிலத்தின் 5-ஃபார்மைல் வழிப்பெறுதி ஆகும். எனவே, இது ஃபோலிக் அமிலத்திற்கு இணையான வைட்டமின் பண்பைப் பெற்றுள்ளது. வெறும் ஃபோலிக் அமிலம் மட்டும் நோயாளிகளுக்குத் தருவோமாயின் அதன் வளர்சிதைமாற்றம் புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளால் தடுக்கப்பட்டு விளைவுகள் ஏற்படாது. ஃபொலினிக் அமிலமோ டை ஹைட்ரோ ஃபோலேட் ரிடக்டேசு நொதியின் (DHFR) உதவியின்றியே செயல்வடிவம் பெறுகிறது. (புற்று நோய் எதிர்ப்பு மருந்தான மீத்தோடிரெக்சேட் ஃபொலினிக் அமிலமோ டை ஹைட்ரோ ஃபோலேட் ரிடக்டேசு நொதியைத் தடுக்கிறது)
நோய்நீக்கிப் பயன்கள் [தொகு]
மேலே கூறியபடி இது மீத்தோடிரெக்சேட், 5-ஃபுளுரோ யுராசில் போன்ற மருந்துகள் தந்த பின் நம் உடலில் விரைவாகப் பகுப்படையும் செல்களான எலும்பு மச்சை மற்றும் உணவுச் செரிமானப் பாதை செல்களைக் காப்பாற்ற உதவுகிறது.
மருந்து கொடுக்கும் போது கவனிக்க வேண்டியது [தொகு]
இம் மருந்தை மூளை உறைகளுக்குள் செலுத்தி விடக் கூடாது. அவ்வாறு செய்தால் மரணம் உள்ளிட்ட கொடிய பக்க விளைவுகள் ஏற்படும்.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ விக்சனரியில் மூலக்கணியம், விக்சனரியில் மூலக்கணியம்