ஃபிரிடா காலோ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| ஃபிரிடா காலோ | |
ஃபிரிடா காலோ, முள் கழுத்தணியுடனும், ஹம்மிங் பறவையுடனும் கூடிய தன்னுருவப்படம்", நிக்கொலாஸ் முரே சேமிப்பு, ஹரி ரான்சம் மையம், ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகம்[1] |
|
| இயற்பெயர் | மக்தலேனா கார்மென் ஃபிரிடா காலோ யி கல்தேரன் |
| பிறப்பு | ஜூலை 6 1907 கோயோக்கன், மெக்சிக்கோ |
| இறப்பு | ஜூலை 13 1954 (அகவை 47) கோயோக்கன், மெக்சிக்கோ |
| நாடு | மெக்சிக்கர் |
| துறை | ஓவியம் |
| பயிற்சி | தானே பயின்றது |
| இயக்கம் | அடிமன வெளிப்பாட்டியம் |
| படைப்புகள் | அருங்காட்சியகங்களில்:
|
| புரவலர் | மற்றும் நண்பர்கள்:
|
ஃபிரிடா காலோ (Frida Kahlo - ஜூலை 6, 1907 – ஜூலை 13, 1954) பன்னாட்டுப் புகழ் பெற்ற ஒரு மெக்சிக்கோ நாட்டுப் பெண் ஓவியர் ஆவார். இவர் மெக்சிக்கோவின் உள்நாட்டுப் பண்பாட்டுச் செல்வாக்கையும்; உண்மையியம், குறியீட்டியம், அடிமன வெளிப்பாட்டியம் போன்ற ஐரோப்பியக் கலை இயக்கங்களின் செல்வாக்கையும் கொண்ட ஒரு பாணியில்; உயிர்ப்புள்ள நிறங்களைப் பயன்படுத்தி ஓவியங்களை வரைந்தார். பெரும்பாலான இவரது ஆக்கங்கள், அவருடைய துன்பங்களையும், பெண்ணியத் தன்மையையும் குறியீடாக வெளிப்படுத்தும் தன்னுருவ ஓவியங்கள் (self-portraits) ஆகும்.
1929 ஆம் ஆண்டில் காலோ, சுவர்ச்சிற்பியான டியேகோ ரிவேரா என்பவரை மணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் ஒரே அரசியல் பார்வையைக் கொண்டிருந்ததோடு, ரிவேரா, காலோவின் ஓவிய முயற்சிகளுக்கு உற்சாகமும் கொடுத்து வந்தார். காலோ பல காலமாகவே ஒரு முக்கியமான ஓவியர் என ஏற்றுக்கொள்ளப்பட்டு இருந்தாலும், இவரது ஓவியங்கள் குறித்த பொது விழிப்புணர்வு 1970க்குப் பின்னரே பரவலாக ஏற்பட்டது.
மெக்சிக்கோ நகரத்தின் கோயோவாக்கன் பகுதியில் உள்ள, இவர் வாழ்ந்த "நீல" வீடு இன்று ஒரு அருங்காட்சியகம் ஆகும். இதனை டியேகோ ரிவேரா தான் இறக்கும்போது அன்பளிப்பாகக் கொடுத்தார்.
Cite error: <ref> tags exist, but no <references/> tag was found