பிரான்சு
| République française
பிரெஞ்சு குடியரசு
|
||||
|---|---|---|---|---|
|
|
||||
| குறிக்கோள் Liberté, Égalité, Fraternité பிரெஞ்சு:Liberty, Equality, Fraternity |
||||
| நாட்டுப்பண் La Marseillaise |
||||
| தலைநகரம் பெரிய நகரம் |
பரிஸ் |
|||
| ஆட்சி மொழி(கள்) | பிரெஞ்சு | |||
| அரசு | ஒற்றையாட்சிக் குடியரசு | |||
| - | அதிபர் | நிக்கோலஸ் சர்கோசி | ||
| - | பிரதமர் | ஃபிரான்சுவா ஃபில்லான் | ||
| நிறுவப்படுதல் | 843(வெர்டுன் ஒப்பந்தம்) | |||
| பரப்பளவு | ||||
| - | மொத்தம் | 6,74,843 கிமீ² (40வது) 2,60,558 சது. மை |
||
| - | நீர் (%) | தகவல் சேர்க்க | ||
| மக்கள்தொகை | ||||
| - | சனவரி 2006 மதிப்பீடு | 63,587,700 (20வது) | ||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
2005 கணிப்பீடு | |||
| - | மொத்தம் | $1.830 டிரில்லியன் (7வது) | ||
| - | நபர்வரி | $29,316 (20வது) | ||
| ம.வ.சு (2003) | 0.938 (உயர்) (16வது) | |||
| நாணயம் | ஐரோ (€) (EUR) |
|||
| நேர வலயம் | மத்திய ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே.+1) | |||
| - | கோடை (ப.சே.நே.) | மத்திய ஐரோப்பிய கோடை நேரம் (ஒ.ச.நே.+2) | ||
| இணைய குறி | .fr | |||
| தொலைபேசி | +33 | |||
| மின்னழுத்தம் | 230 V | |||
| அலையெண் | 50 Hz | |||
பிரான்சு அல்லது பிரெஞ்சுக் குடியரசு மேற்கு ஐரோப்பாவில் தனது பெருநிலப் பரப்பையும் மற்றைய கண்டங்களில் ஆட்சிப் பகுதிகளையும், தீவுகளையும் கொண்ட நாடாகும். பிரான்ஸ் பெருநிலப் பரப்பானது தெற்கே மத்தியதரைக் கடல் தொடக்கம் வடக்கே ஆங்கிலக் கால்வாய் வட கடல் வரையும் விரிந்து காணப்படுகிறது. பெல்ஜியம், யேர்மனி, சுவிஸர்லாந்து, லக்சம்பேர்க், இத்தாலி, மொனாகோ, அன்டோரா, ஸ்பெயின் ஆகியன இதன் அண்டை நாடுகள்.
பிரெஞ்சுக் குடியரசானது ஒற்றையாட்சி அரை-அதிபர் முறையைப் பின்பற்றும் குடியரசு. பிரான்ஸ் ஐக்கிய நாடுகள் சபை, ஜி8 நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய அமைப்புகளில் உறுப்பினராக உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையின் உறுப்பினரான பிரான்ஸ் வீட்டோ அதிகாரம் கொண்ட நாடாகும். மேலும் பிரான்ஸ் உலகில் அங்கீகரிக்கப்பட்ட 8 அணு சக்தி நாடுளில் ஒன்று.
பிரான்சு தான் உலகிலேயே அதிகளவு சுற்றுலாப் பயணிகள் செல்லும் நாடு. இங்கு ஆண்டுதோறும் சுமார் 75 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். பிரான்ஸ் என்ற பெயர் மேற்கு உரோம இராச்சியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் இப்பிரதேசங்களில் குடியேறிய யேர்மனிய கோத்திர மக்களான பிராங்க் என்பவர்களில் இருந்து தோன்றியதாகும்.
பொருளடக்கம் |
[தொகு] புவியியல்
பிரான்ஸ் நாட்டின் பெரும்பகுதி (பிரான்ஸ் பெருநிலப்பரப்பு) மேற்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள போதும், பிரான்ஸ் வடக்கு அமெரிக்கா, கரிபியா, தென் அமெரிக்கா, தெற்கு இந்து சமுத்திரம், பசுபிக் சமுத்திரம், அந்தார்டிக்கா ஆகிய பகுதிகளில் பல சிறிய ஆட்சிப்பகுதிகளையும் கொண்டுள்ளது. இந்த ஆட்சிப் பகுதிகள் பல்வேறு அரசு முறைகளை கொண்டு இயங்குகின்றன.
பிரான்ஸ் பெருநிலப்பரப்பு பலவேறுப்பட்ட புவியியல் அமைப்புகளை கொண்டதாகும், வடக்கே கரையோர சமவெளிகளையும் மேற்கேயும் தென்மேற்கேயும் மலைத்தொடர்களையும் கொண்டுள்ளது.
மேற்கு ஐரோப்பாவின் மிக உயரமான மலையான பிளாங்க் மலை (4810 மீட்டர்) பிரெஞ்சு அல்ப்சில் அமைந்துள்ளது. பிரான்ஸ் நெருக்கமான ஆற்றுத்தொகுதியொன்றையும் கொண்டுள்ளது. பிரான்சின் வெளி ஆட்சிப்பகுதிகள் காரணமாக உலக தரைப்பரப்பில் 0.45 சதவீதத்தை).[1] மட்டுமே அடைக்கும் பிரான்ஸ் உலகின் பிரத்தியேக பொருளாதார வலயத்தில் 8 சதவீதத்தைக் கொண்டுள்ளது.
[தொகு] வரலாறு
பிரான்சின் எல்லைகள் பண்டைய கவுல் இராச்சியத்தின் எல்லைகளோடு அண்ணளவாக ஒத்துப்போகிறது. கவுல் இராச்சியமானது ஜூலியஸ் சீசரினால் கி.மு. முதலாம் நூற்றாண்டில் கைப்பற்றப்பட்டது. கவுலியர்கள் காலப்போக்கில் தமது மொழியான கவூலிய மொழியை விட்டு உரோமன் பேச்சையும் (இலத்தீன், இதுவே பின்னர் பிரெஞ்சு மொழியாக மாறியது) கலாச்சாரத்தையும் தழுவிக்கொண்டனர். கிபி இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டுகளில் கிறிஸ்தவம் இப்பிரதேசங்களில் வேரூன்றத் தொடங்கியது. கிபி நான்காம் நூற்றாண்டளவில் அது இங்கே நிலையான இடத்தைப் பிடித்துவிட்டது. புனித ஜெரோம் தமது கட்டுரையொன்றில் தூய கிறிஸ்தவம் கவுலில் மட்டுமே காணப்படுகிறது என எழுதினார். ஐரோப்பிய மத்திய காலங்களில் பிரான்சின் ஆட்சியாளர்கள் இதனைப் பயன்படுத்தி தமது நாட்டை "அதி கிறிஸ்தவ இராச்சியம் பிரான்ஸ்" என அழைத்தனர்.
[தொகு] குறிப்புகள்
- ↑ According to a different calculation cited by the Pew Research Center, the EEZ of France would be 10,084,201 square kilometres (3,893,532 sq mi), still behind the ஐக்கிய அமெரிக்கா (12,174,629 km² / 4,700,651 sq mi), and still ahead of Australia (8,980,568 km² / 3,467,416 sq mi) and Russia (7,566,673 km² / 2,921,508 sq mi).
[தொகு] வெளியிணைப்பு
விக்சனரி விக்சனரி
நூல்கள் விக்கிநூல்
மேற்கோள் விக்கிமேற்கோள்
மூலங்கள் விக்கிமூலம்
விக்கிபொது
செய்திகள் விக்கிசெய்தி
| ஜி8 |
|---|
| கனடா | பிரான்ஸ் | ஜெர்மனி | இத்தாலி | ஜப்பான் | ரஷ்யா | ஐ.இ | ஐ.அ.மா |
|
|||||
