பியூரர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஃபியூரர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஃபியூரர் (Führer) என்பது ஜெர்மானிய மொழியில் வழிநடத்துபவர், வழிகாட்டுபவர் என்ற பொருளில் ஜெர்மனியர்கள் தம் தலைவரை உயர்த்தி அழைக்கும் ஒரு வழக்காகும். ஜெர்மனியின் 1945 முன் வாழ்ந்த முன்னாள் அதிபர் மற்றும் சர்வாதிகாரி என அனைத்துலகத்தினரால் அழைக்கப்படும் அடால்ப் இட்லர், ஃபியூரர் என அப்போதைய ஜெர்மானியர்களால் மரியாதையாக அழைக்கப்பட்டார்.

பியூரர் மாளிகை

இவர் தங்கியிருந்த பாதுகாப்பான மாளிகைக்கு (ஃபியூரர் பங்கர்) ஃபியூரர் பதுங்கு அறை என அழைக்கப்பட்டது. இந்த அதிகாரப் பெயர் அப்போதைய ஜெர்மன் நாடாளுமன்ற வேந்தராக இருந்த இட்லரால் ஏற்படுத்தபட்டு அதற்கான சட்டவரைவையும் முன்மொழிந்து அது முதல் அவர் ஃபியூரர் என அழைக்கப்படலானார். இதனால் ஜெர்மானிய நாடாளுமன்றத்துக்கும், ஜெர்மன் நாட்டுக்கும் அவரே உச்சபட்ச அதிகாரம் கொண்டவர் என பிரகடனப்படுத்தி பின்பற்றினர். இட்லர் இறக்கும் வரை இந்த மரபே கடைபிடிக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பியூரர்&oldid=3480319" இலிருந்து மீள்விக்கப்பட்டது