கோகராஜார் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோகராஜார் மாவட்டம்
কোকৰাঝাৰ জিলা
மாவட்டம்
அசாம் வரைபடத்தில் கோகராஜார் மாவட்டத்தின் அமைவிடம்
அசாம் வரைபடத்தில் கோகராஜார் மாவட்டத்தின் அமைவிடம்
நாடுஇந்தியா
மாநிலம்அசாம்


கோகராஜார் மாவட்டம் (Kokrajhar district, அசாமிய மொழி: কোকৰাঝাৰ জিলা) வட கிழக்கு இந்தியாவின் அசாம் மாநிலத்தின் ஓர் மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் தலைநகரம் கோக்ரஜார் நகரமாகும். இது போடோலாந்து பிரதேசத்தில் உள்ளது. இதன் வடக்கில் பூட்டான் நாடு உள்ளது.

வரலாறு[தொகு]

கோகராஜார் மாவட்டப் பகுதிகள் முன்னதாக கோல்பரா மாவட்டத்தில் இருந்தது. 1957ஆம் ஆண்டில் கோகராஜார் வட்டம் உருவானது. சூலை 1, 1983 அன்று இது மாவட்டமாக உயர்ந்தது.[1]

29 செப்டம்பர் 1989 அன்று கோகராஜார் மாவட்டத்தின் சில பகுதிகளையும், கோல்பரா மாவட்டத்தின் சில பகுதிகளையும் இணைத்து புதிய போங்கைகாவொன் மாவட்டம் உருவானது.[1]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

3,296 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட கோகரஜார் மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள்தொகை 8,87,142 ஆகும். அதில் ஆண்கள் 4,52,905 மற்றும் பெண்கள் 4,34,237 ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 959 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 65.22% ஆகவுள்ளது. 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 1,36,924 ஆக உள்ளனர்.[2][3]. ==மேற்கோள்கள்==

  1. 1.0 1.1 Law, Gwillim (2011-09-25). "Districts of India". Statoids. பார்க்கப்பட்ட நாள் 2011-10-11.
  2. Kokrajhar District : Census 2011
  3. KOKRAJHAR DISTRICT CENSUS HANDBOOK

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோகராஜார்_மாவட்டம்&oldid=3371745" இலிருந்து மீள்விக்கப்பட்டது