பூகுன் பாடும்பறவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பூகுன் பாடும்பறவை
Stamp of India - 2012 - Colnect 392517 - Bugun Liocichla Liocichla bugunorum
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
லியோசிச்லா
இனம்:
L. bugunorum
இருசொற் பெயரீடு
Liocichla bugunorum
Athreya, 2006
Distribution of Bugun liocichla

பூகுன் பாடும் சிட்டு அல்லது பூகுன் பாடும் பறவை (Bugun liocichla, Liocichla bugunorum) இலையோத்திரிச்சிடீ Leiothrichidae) குடும்பத்தில் உள்ள ஒரு பறவை.[2] இது முதன்முதலாக 1995-ல் தான் கண்டறியப்பட்டது. இந்தப் பறவை இந்தியாவில் அருணாச்சலப் பிரதேசத்தில் காணப்படுகிறது. இப்பறவை அருணாச்சலப்பிரதேசத்தில் ஈகிள்நெசுட்டு பறவைகள் புகலிடம் (Eaglenest or Eagle's Nest Wildlife Sanctuary) என்னும் இடத்தில் மட்டுமே காணப்படுகின்ற ஒரு அகணிய உயிரியாகும். இது தனிப் பறவைச் சிற்றினமாக 2006-ல்தான் விளக்கப்பெற்றது.[3] மிக அரிதாகவே காணப்படுவதால், இதனைப் பிடித்து ஆய்வு செய்து குறிப்புகள் எழுதப்பெறவில்லை[4].

விளக்கம்[தொகு]

பூகுன் சிட்டு ஒரு சிறிய வகை சிரிப்பான் வகைப் பறவை. ஏறத்தாழ 20 செ.மீ உடல்நீளம் கொண்ட மென் பச்சை அல்லது நீலச் சாம்பல் நிறம் கொண்ட, தலையுச்சி கறுப்பாக உள்ள ஒரு சிட்டு. இப்பறவையின் அலகு கறுப்பாக இருக்கின்றது. இப்பறவையின் முகத்தில் கண்களை ஒட்டி மஞ்சள் அல்லது செம்மஞ்சள் நிறப்பகுதிகள் உள்ளன. இறக்கையின் நுனிப்பகுதியில் சிவப்பாகவும் மஞ்சள் நிறப்பகுதியும் இருக்கும். இதன் வால் கறுப்பாகவும் அடிப்பகுதி சிவப்பு நுனியைக் கொண்டதாகவும் இருக்கும். கால்கள் இளஞ்சிவப்பு நிறமுடையன.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2018). "Liocichla bugunorum". IUCN Red List of Threatened Species 2018: e.T22734628A125508034. doi:10.2305/IUCN.UK.2017-3.RLTS.T22734628A125508034.en. https://www.iucnredlist.org/species/22734628/125508034. பார்த்த நாள்: 11 November 2021. 
  2. Collar, N. J.; Robson C. (2007). "Family Timaliidae (Babblers)". in del Hoyo, J.. Handbook of the Birds of the World, Vol. 12. Picathartes to Tits and Chickadees. Lynx Edicions, Barcelona. பக். 70–291. 
  3. Athreya, Ramana (31 August 2006). "A new species of Liocichla (Aves:Timaliidae) from Eaglenest Wildlife Sanctuary, Arunachal Pradesh, India". Indian Birds 2 (4): 82–94. http://indianbirds.in/pdfs/IB2.4_Athreya_BugunLiocichla.pdf. பார்த்த நாள்: 31 March 2017. 
  4. Athreya, R. (2006). Eaglenest Biodiversity Project − I (2003–2006): Conservation resources for Eaglenest wildlife sanctuary. A report submitted to the Forest Department of the Government of Arunachal Pradesh, India, and the Rufford-Maurice-Laing Foundation (UK). Kaati Trust, Pune.. http://www.iiserpune.ac.in/~rathreya/Downloads/athreya2006_ebp.pdf. 

வெளியிணைப்புகள்[தொகு]

இப்பறவையின் தெளிவான ஒளிப்படம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூகுன்_பாடும்பறவை&oldid=3432657" இலிருந்து மீள்விக்கப்பட்டது