கழிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கழிப்பு (Excretion) எனப்படுவது வளர்சிதை மாற்றத்தின் கழிவுப் பொருட்களும் பிற பயன்றற பொருட்களும் ஓர் உயிரினத்திலிருந்து வெளியேற்றப்படுவதைக் குறிக்கும்.[1] இது அனைத்து வகையான உயிரரினங்களுக்கும் மிகத் தேவையான செய்கையாகும். இது செரிமானத்தின் இறுதியில் வெளியேற்றப்படும் மலக்கழிவினின்றும் வேறுபட்டது. அவ்வாறே சுரத்தல் என்ற செயற்பாட்டில் உயிரணுவிலிருந்து வெளியாகும் பொருட்களுக்கு பிற சிறப்புப்பணிகள் இருப்பதால் கழிப்பு இதனினின்றும் வேறானது.

நுண்ணுயிர்களில் கழிவுப் பொருட்கள் உயிரணுவின் மேற்பாகத்திலிருந்தே நேரடியா வெளியேற்றப்படுகின்றன. பன்உயிரணு உயிரிகள் சிக்கலான கழிவுமுறைகளைக் கையாளுகின்றன.உயர்ந்த தாவரம்|தாவரங்கள் இலைத்துளைகள் வழியே வளிமமாக வெளியேற்றுகின்றன. விலங்குகள் "சிறப்பு கழிப்பு உறுப்பு"க்களைக் கொண்டுள்ளன.

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Beckett, B. S. (1986). Biology: A Modern Introduction. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். பக். 110. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0199142602. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கழிப்பு&oldid=2744516" இலிருந்து மீள்விக்கப்பட்டது