ஆட்சேர்ப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆட்சேர்ப்பு என்பது ஒரு பணியைச் செய்வதற்கோ அல்லது ஒரு நிறுவனத்தில் வெற்றிடமாக உள்ள இடத்தை நிரப்புவதற்கோ ஆன நிகழ்முறைகளைக் குறிக்கும். இது, தேடுதல், தெரிந்தெடுத்தல், பணிக்கு அமர்த்தல் என்பவற்றை உள்ளடக்கியது. இதன் வெவ்வேறு கூறுகளைத் தனிப்பட்ட அலுவலர்கள் கையாள முடியுமாயினும், பல நடுத்தர [நிறுவனம்|நிறுவனங்களும்], பெரிய நிறுவனங்களும் ,தொழில்முறை ஆட்சேர்ப்பு நிறுவனம்,தொழில்முறை ஆட்சேர்ப்பு நிறுவனங்கள்,மூலம் பணிக்கு ஆட்களை எடுக்கின்றன.

ஆட்சேர்ப்புத் தொழில்[தொகு]

ஆட்சேர்ப்புத் தொழில் துறையில் நான்கு வகையான முகமைகள் உள்ளன. இவர்களின் ஆட்சேர்ப்பாளர்கள் விண்ணப்பதாரர்களை ஆட்கள் தேவைப்படும் நிறுவனங்களின் ஆட்சேர்ப்புச் செயற்பாட்டுக்கு அனுப்பிவைப்பார்கள். முகமைகளுக்கு நிறுவனங்களே பணம் கொடுக்கின்றன. விண்ணப்பதாரர்களிடம் இருந்து எவ்வித கட்டணமும் பொதுவாக அறவிடப்படுவதில்லை.

மரபுவழி ஆட்சேர்ப்பு முகமைகள்[தொகு]

பொதுவாக மரபுவழி ஆட்சேர்ப்பு முகமைகள் குறிப்பிட்ட இடங்களில் அலுவலகங்களைக் கொண்டிருக்கும். ஒரு விண்ணப்பதாரர் இத்தகைய அலுவலகம் ஒன்றுக்குச் சென்று நேர்முகப் பரீட்சை ஒன்றுக்குத் தோற்ற வேண்டும் அதன் பின் மதிப்பீடு செய்யப்படும். வேண்டிய தகைமைகள் இருப்பின் விண்ணப்பதாரரின் விபரங்கள் முகமையின் பதிவுகளுடன் சேர்க்கப்படும். வாடிக்கையாளர் நிறுவனங்களுக்குப் பணியாட்கள் தேவைப்படும்போது இவ் வெற்றிடங்கள் முகமையிடம் உள்ள விண்னப்பதாரர் பட்டியலுடன் ஒப்பிடப்பட்டுப் பொருத்தமான விண்னப்பதாரரின் விபரங்கள் நிறுவனங்களுக்கு அனுப்பப்படும்.

ஆட்சேர்ப்பு முகமைகளின் சேவைக்கான கட்டணம் பின்வரும் இரண்டில் ஒரு வழியில் கிடைக்கின்றது:

  • முகமை பரிந்துரைக்கும் விண்ணப்பதாரர் தெரிவுசெய்யப்பட்டு அவர் பணியை ஏற்றுக்கொண்டால் அவருடைய தொடக்க ஊதியத்தின் ஒரு குறிப்பிட்ட வீதம் முகமையின் சேவைக் கட்டணமாகக் கொடுக்கப்படும். இவ் விண்ணப்பதாரர் சரியாகப் பணிசெய்யத் தவறினால் அல்லது குறிப்பிட்ட கால எல்லைக்குள் பதவி நீக்கம் செய்யப்பட்டால் இச் சேவைக் கட்டணம் கொடுபடாது.
  • நிறுவனத்தால் கொடுபடும் முன்பணம்.
  • சில நாடுகளில் விண்ணப்பதாரரிடம் இருந்து கட்டணம் அறவிடும் முறையும் உள்ளது. எனைனும் பல நாடுகளில் இரு சட்டத்துக்கு விரோதமானது.

இணையவழி ஆட்சேர்ப்பு இணையத் தளங்கள்[தொகு]

இத் தளங்கள் பொதுவாக இரண்டு அம்சங்களைக் கொண்டிருக்கும்: ஒன்று பணிவெற்றிட அறிவித்தல் பகுதி. மற்றது விண்ணப்பதாரர் விபரத் தரவுத்தளம். வெற்றிட அறிவித்தல் பகுதி, உறுப்பு நிறுவனங்கள் தமது வெற்றிடங்களை விளம்பரப்படுத்தப் பயன்படுகிறது. மாற்று வழியாக விண்ணப்பதாரர் தமது விபரங்களைத் தரவுத்தளத்தில் பதிவேற்றம் செய்யமுடியும். இவ்விபரங்களை உறுப்பு நிறுவனங்கள் தேடுவதன் மூலம் தமக்குத் தேவையான பணியாளர்களைத் தெரிவு செய்ய முடியும்.

ஆள்தேடுவோர்[தொகு]

இவர்கள் மூன்றாம் தரப்பு ஆட்சேர்ப்போர் ஆவர். ஆட்சேர்ப்புக்கான வழமையான வழிமுறைகள் பயன் தராதபோது இவர்களுடைய சேவையை நிறுவனங்கள் நாடுகின்றன. இவர்கள் பொதுவாக உள்ளக ஆட்சேர்ப்போரைக் காட்டிலும் தீவிரமாக இயங்குவர். இவர்கள் மேம்பட்ட விற்பனை உத்திகளைக் கையள்வர். இவர்கள் வாடிக்கையாளர்போல் நடித்து நிறுவனங்களுக்குச் சென்று பணியாளர் தகவல்களைத் திரட்டுவர். இவர்கள் பணியாளர்களையும் அவர்கள் பதவிகளையும் கொண்ட பட்டியல்களை விலை கொடுத்து வாங்குவதும் உண்டு. பெரும்பாலும் இவ்வாறான பட்டியல்களைத் தாமே தயாரித்துக் கொள்வதே வழக்கம். இவர்கள் விண்ணப்பதாரருக்கு நேர்முகப் பரீட்சைக்கான பயிற்சிகளையும் அளிப்பதுடன் அவர்கள் ஊதியப் பேரம் பேசலுக்கும் உதவி செய்வதுண்டு. இவர்கள் பொதுவாகக் குறிப்பிட்டதொழில் துறைகளின் வணிகக் குழுக்களிலும், அமைப்புக்களிலும் நல்ல நிலையில் உள்ள உறுப்பினர்களாக இருப்பதுண்டு. பெரும்பாலும் உயர் மேலாண்மைப் பதவிகளை நிரப்புவதற்காகவே இவர்கள் சேவை பெறப்படுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆட்சேர்ப்பு&oldid=2062947" இலிருந்து மீள்விக்கப்பட்டது