அழகு சுப்பிரமணியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அழகு சுப்பிரமணியம்
பிறப்பு(1915-03-15)15 மார்ச்சு 1915
உடுப்பிட்டி யாழ்ப்பாணம்
இறப்பு15 பெப்ரவரி 1973(1973-02-15) (அகவை 57)
யாழ்ப்பாணம்
தேசியம்இலங்கைத் தமிழர்
பணிஇலங்கை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்
அறியப்படுவதுஎழுத்தாளர்

அழகு சுப்பிரமணியம் (15 மார்ச் 1915 – 15 பெப்ரவரி 1973) ஆங்கில இலக்கியத்துறையில் உலகப் புகழ்பெற்ற இலங்கையர். சட்டத்துறையில் பரிஸ்டர் பட்டம் பெற்ற இவர் இலங்கை உயர் நீதிமன்ற வழக்கறிஞராகப் பணியாற்றினார்.[1][2][3][4][5][6][7][8][9][10][11][12][13][14][15]

நீண்ட காலமாக இங்கிலாந்தில் வாழ்ந்த இவர் "Indian Writing" என்ற காலாண்டுச் சஞ்சிகையின் இணையாசிரியராகவும் "இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின்" இணைச் செயலாளராகவும் பணியாற்றினார். இவருடைய தந்தையார் புகழ்பெற்ற நீதிபதி.

புகழ் பெற்ற ஆங்கில நாவலாசிரியரும், விமரிசகருமான பால்ரர் அலன், "எமது கருத்துப்படி அழகு சுப்பிரமணியம் ஓர் அற்புதமான எழுத்தாளராவார். இவரைப் போன்ற மிகச் சிறந்த எழுத்தாளர்களின் மூலமே மேற்குலகில் வாழும் நாங்கள் கீழைத்தேசங்களைத் தரிசிக்கின்றோம். இவருடைய படைப்புகள் பெரும்பாலும் இலங்கைப் பின்னணியிலேயே உருவாக்கப்பட்டுள்ளன. இதேபோன்று ஆங்கிலப் பகைப்புலத்தில் ஆங்கிலேயர்களுக்கே சவால் விடக்கூடிய முறையிலும் இவர் சில கதைகளை எழுதியுள்ளார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இவருடைய இலக்கியப் படைப்புகள் ஜேர்மன், பிரெஞ்சு, உருசிய மொழிகளிலும் பல இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. "The Big Girl" என்ற முதலாவது சிறுகதைத் தொகுப்பு 1964 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு Closing Times & Other Stories இவருடைய மறைவுக்குப் பின்னர் இவரது மனைவி திருமதி செல்லகண்டு அழகு சுப்பிரமணியம் அவர்களால் வெளியிடப்பட்டது.

அழகு சுப்பிரமணியத்தின் ஒரே நாவலான Mister Moon இன்னும் கையெழுத்துப் பிரதியாகவே உள்ளது. ஆனால் இதன் தமிழாக்கம் மல்லிகையில் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டது. Lovely Day என்ற சிறுகதை 'மிகச் சிறந்த இந்தியச் சிறுகதைகள்' என்ற ஆங்கிலச் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

The Mathematician என்ற சிறுகதை "உலக இலக்கியத்தின் உன்னதச் சிறுகதைகள்" என்ற தலைப்பில் ஹைடல்பேர்க் நகரில் வெளியிடப்பட்ட சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

இவருடைய 12 சிறுகதைகள் ராஜ ஸ்ரீகாந்தன் அவர்களால் மொழிபெயர்ககப்பட்டு "நீதிபதியின் மகன்" என்ற தலைப்பில் நூலாக 1999 இலும் 2003 இலும் இரண்டு பதிப்புகளாக வெளிவந்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Professional Mourners - Alagu Subramaniam". Scholars' Park. பார்க்கப்பட்ட நாள் 2022-02-15.
  2. "Alagu Subramaniam". திறந்தவெளி பல்கலைக்கழகம். பார்க்கப்பட்ட நாள் September 19, 2020.
  3. "Professional Mourners by Alagu Subramaniam". Scholar’s Park. பார்க்கப்பட்ட நாள் September 19, 2020.
  4. "Reminiscences of the Traditional Jaffna Community in Transition under Colonialism". தி ஐலண்டு (இலங்கை). June 23, 2019. பார்க்கப்பட்ட நாள் September 19, 2020.
  5. "Spam Professional Moourners, By Alagu Subramaniam". Bartleby.com. பார்க்கப்பட்ட நாள் September 19, 2020.
  6. "Servile Mourning for the Powerful: A Critical Reading of "Professional Mourners" by Alagu Subramaniam". Academia.edu. பார்க்கப்பட்ட நாள் September 19, 2020.
  7. "Alagu Subramaniam Analysis". Internet Public Library. பார்க்கப்பட்ட நாள் September 19, 2020.
  8. "Spam 'Professional Mourners' By Alagu Subramaniam". Internet Public Library. பார்க்கப்பட்ட நாள் September 22, 2020.
  9. Subramaniam, Alagu (May 9, 2012). "The Mathematician". Wasafiri 27 (2): 25–27. doi:10.1080/02690055.2012.662313. https://www.tandfonline.com/doi/pdf/10.1080/02690055.2012.662313. பார்த்த நாள்: September 22, 2020. 
  10. "The Big Girl". Daily FT. February 16, 2019. பார்க்கப்பட்ட நாள் September 22, 2020.
  11. "The Big Girl". Perera Hussein Publishing House. பார்க்கப்பட்ட நாள் September 22, 2020.
  12. "The Big Girl". Rakuten Kobo. January 14, 2019. பார்க்கப்பட்ட நாள் September 22, 2020.
  13. "The Big Girl". Sarasavi Bookshop. பார்க்கப்பட்ட நாள் September 22, 2020.
  14. "A Funeral and Its Professional Lamentation". Thuppahi’s Blog. March 6, 2017. பார்க்கப்பட்ட நாள் September 19, 2020.
  15. "The Big Girl And Other Stories". Mary Martin Bookshop. பார்க்கப்பட்ட நாள் September 22, 2020.
தளத்தில்
அழகு சுப்பிரமணியம் எழுதிய
நூல்கள் உள்ளன.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அழகு_சுப்பிரமணியம்&oldid=3682904" இலிருந்து மீள்விக்கப்பட்டது