திருச்சுழி வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருச்சுழி வட்டம் (Tiruchuli taluk), தமிழ்நாட்டின், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக திருச்சுழி நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் திருச்சுழி, அ. முக்குளம், நரிக்குடி, வீரசோழன் என 4 உள்வட்டங்களும், 150 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2] திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் மற்றும் நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் ஆகியவை இவ்வட்டத்தில் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 103,290 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 52,072 ஆண்களும், 51,218 பெண்களும் உள்ளனர். 25,806 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 80% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 74.53% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 984 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 11,411 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 929 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 23,049 மற்றும் 11 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 95.04% , இசுலாமியர்கள் 4.22%, கிறித்தவர்கள் 0.54% மற்றும் பிறர் 0.20% ஆகவுள்ளனர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. விருதுநகர் மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்
  2. திருச்சுழி வட்டத்தின் வருவாய் கிராமங்கள்
  3. "Thiruchuli Taluka Population, Caste, Religion Data".
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருச்சுழி_வட்டம்&oldid=2787941" இலிருந்து மீள்விக்கப்பட்டது