ரியூகியோங் உணவகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரியூகியோங் உணவகம்
ரியூகியோங் உணவகம் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது - ஆகஸ்து 2011
Map
பொதுவான தகவல்கள்
இடம்பியொங்யாங், வட கொரியா
கட்டுமான ஆரம்பம்1987[2]
முகடு நாட்டப்பட்டது1992[1]
மதிப்பிடப்பட்ட நிறைவு2012 (projected)[3]
உயரம்
கூரை330.02 மீட்டர்கள் (1,082.7 அடி)[1]
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை105[1]
தளப்பரப்பு360,000 m2 (3,900,000 sq ft)[1]
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)பைக்டூசான் கட்டடக் கலைஞர்கள் மற்றும் பொறியியலாளர்கள்[2]
மேம்பாட்டாளர் வட கொரியா
எகிப்து Orascom Group
முதன்மை ஒப்பந்தகாரர்பைக்டூசான் கட்டடக் கலைஞர்கள் மற்றும் பொறியியலாளர்கள் (1987–1992)[2]
ஒரஸ்கொம் கட்டடக் கலை தொழிற்றுறை (2008–தற்போது)[4]
மேற்கோள்கள்
[5]

ரியூகியோங் உணவகம் அல்லது யூகியூங் உணவகம்[6] (கொரிய மொழி: 류경호텔) என்பது 105 மாடி பிரமிடு வடிவ வட கொரியாவின் தலைநகர் பியொங்யாங்கில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஓர் வானளாவி. இதன் பெயர் பியொங்யாங்கின் வரலாற்றுப் பெயர்களில் ஒன்று ஆகும்.[7] இது 105 மாடி[1] எனவும் அழைக்கப்படுகிறது. கட்டுமானப்பணிகள் 1987 ஆரம்பிக்கப்பட்டு 1989 இல் முடிவுற திட்டமிடப்பட்டிருந்தது. ஆயினும், சில தாமதங்களின் பின், சோவிற் ஒன்றியத்தின் வீழ்ச்சியுடன் கட்டுமானப் பொருட்களின் குறைவு, பரவலான பொருளாதார இடையூறுகள் என்பன 1992 இல் முடக்கத்தை ஏற்படுத்தின.

கட்டடத்தின் உச்சிவரை கட்டிமுடிக்கப்பட்ட போதும் சாரளம் மற்றும் உள்ளக பொருத்த வேலைகள் செய்யப்படாது 16 வருடங்கள் இருந்தது. ஏப்ரல் 2008 இல் மீண்டும் எகிப்தின் ஒரஸ்கொம் குழுவின் மேற்பார்வையில் ஆரம்பமாகியது.[2] 2011 இல் வெளிப்புற வேலைகள் செய்து முடிக்கப்பட்டன. உள்ளக தரைக்கான 360,000 சதுர மீட்டர்கள் (3,900,000 sq ft) வேலைகள் வேலைகள் 2012 அல்லது அதன் பின்னும் நடைபெறலாம். உணவகம், விடுதி, குடியிருப்பு, வணிக வசதிகள் ஆகியவற்றை அக்கட்டடம் கொண்டிருக்குமென ஒரஸ்கொம் தெரிவிக்கின்றது. இக்கட்டடம் உத்தியோக பூர்வமாக கிம்-II சூங்கின் 100வது பிறந்த தினமான ஏப்ரல் 2012 அன்று திறந்து வைக்கப்பட்ட எதிர்பார்க்கப்பட்டபோதும், அது நிறைவேறவில்லை.[8]

இக்கட்டடம் 330 மீட்டர்கள் (1,080 அடி) உயரத்திற்கு காணப்பட்டு பியொங்யாங்கின் முக்கிய வானளாவியும் வடகொரியாவின் பெரிய கட்டுமானமாகவும் உள்ளது. இது 1989 இல் நிறைவுற்றிருந்தால் உலகின் உயரமான உணவம் என்ற சிறப்பினைப் பெற்றிருக்கும். கட்டிமுடிக்கப்படாத இது ரோஸ் கோபுரம் 2009 இல் கட்டிமுடிக்கப்படும் வரை உயரமான உணவகம் என்ற பெயருக்கு உரியதாகவிருந்தது. ரியூகியோங் உணவகம் உலகிலுள்ள உயரமான கட்டங்களில் 40வது கட்டடமாகவும் (சீன உலக வர்த்தக மையம் III எனும் கட்டடமும் 40வது கட்டடமாகவுள்ளது) மாடிகள் அதிகம் உள்ளதில் 5வது கட்டடமாகவும் காணப்படுகின்றது.

காட்சியகம்[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Ryugyong Hotel". Emporis.com. பார்க்கப்பட்ட நாள் 2010-02-09.
  2. 2.0 2.1 2.2 2.3 http://ifes.kyungnam.ac.kr/eng Orascom and DPRK to Complete Ryugyong Hotel Construction
  3. Demick, Barbara (27 September 2008). "North Korea in the midst of mysterious building boom". Los Angeles Times. http://articles.latimes.com/2008/sep/27/world/fg-boom27. 
  4. Kirk, Donald (27 October 2008). "Grand Illusion". Forbes. http://www.forbes.com/global/2008/1027/059.html. பார்த்த நாள்: 2009-07-05 
  5. ரியூகியோங் உணவகம் at Emporis
  6. "105 Building, Pyongyang, Korea, North". Asian Historical Architecture. பார்க்கப்பட்ட நாள் 2010-02-11.
  7. Funabashi, Yoichi (2007). The Peninsula Question: A Chronicle of the Second Northern Korean Nuclear Crisis. Washington, D.C.: Brookings Institution Press. பக். 50. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8157-3010-1. https://archive.org/details/peninsulaquestio0000funa. 
  8. "A Fabulous New Luxury Hotel—In North Korea?". Archived from the original on 2012-05-06. பார்க்கப்பட்ட நாள் 2012-07-18.

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரியூகியோங்_உணவகம்&oldid=3849824" இலிருந்து மீள்விக்கப்பட்டது