எஸ். பி. சைலஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஸ். பி. சைலஜா
௭ஸ்.பி. சைலஜா
பின்னணித் தகவல்கள்
பிறப்புசூலை 22, 1953 (1953-07-22) (அகவை 70)
பிறப்பிடம்ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இசை வடிவங்கள்திரைப்பட பின்னணிப் பாடகி, இந்திய செவ்வியல் இசை
தொழில்(கள்)பாடகி, திரைப்பட பின்னணிக் குரல்
இசைத்துறையில்1978-நடப்பு

எஸ். பி. சைலஜா (S.P. Sailaja) (பிறப்பு: சூலை 22, 1953) ஒரு தென்னிந்தியத் திரைப்படப் பாடகி, பின்னணி குரல் கொடுப்பவரும் நடனக் கலைஞரும் ஆவார். இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஆகிய மொழிகளில் 7000க்கும் அதிகமான பாடல்கள் பாடியுள்ளார்.

பிறப்பு[தொகு]

சைலஜா எஸ் பி சம்பமூர்த்தி, சகுந்தலம்மா இணையருக்கு மகளாகக் கொணடம்பேட்டை, நெல்லூர் மாவட்டம், ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை எஸ் பி சம்பமூர்த்தி ஹரிஹத கலைஞர் ஆவார். இவருக்கு உடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரர்கள் மற்றும் நான்கு சகோதரிகள் இருக்கின்றனர். இவர்களில் எஸ். பி. பாலசுப்பிரமணியம் இவருக்கு அண்ணன் ஆவார்.[1]

குடும்பம்[தொகு]

சைலஜா சுபலேகா சுதாகரை திருமணம் செய்துகொண்டுள்ளார். சுதாகர் தெலுங்கு திரைப்பட நடிகரும் தமிழ் சின்னத்திரை நடிகரும் ஆவார். இந்த இணையருக்கு ஸ்ரீகர் (1991) என்ற மகன் உள்ளார்.

தொழில்[தொகு]

thump
thump

பின்னணிக் குரல்[தொகு]

சைலஜா அவ்வப்போது இரவல்குரல் கலைஞராகப் பணியாற்றி வருகிறார், மேலும் தபு, சோனாலி பெண்ட்ரே மற்றும் ஸ்ரீதேவி உள்ளிட்ட பல்வேறு கலைஞர்களுக்காக இரவல்குரல் கொடுத்துள்ளார். சீதாமலட்சுமி திரைப்படத்திற்காக நடிகை ராமேஸ்வரிக்கு இரவல்குரல் கொடுக்கத் தொடங்கினார் .

நடிப்பு[தொகு]

சைலஜா இயக்குனர் கே. விஸ்வநாத் இயக்கிய தெலுங்கு முயற்சியான சாகரா சங்கமத்தில் நடித்தார். அதில் இவர் ஒரு பாரம்பரிய நடனக் கலைஞராக நடித்தார். இது சலங்கை ஒலி என்று தமிழில் மாற்றப்பட்டது.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்[தொகு]

சைலஜா பாடகர் மனோவுடன் இணைந்து இடிவியில் சரிகமலு தனது தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொடங்கினார். அதன் பின்னர், சைலஜா சோதனை நீதிபதியாக பல உண்மை திறமை வேட்டை நிகழ்ச்சிகளில் விருந்தினர் மற்றும் நடுவராக இருவரும் தோன்றியிருக்கிறார்கள். குறிப்பாக தென்னிந்தியாவில் விஜய் டிவி 'யின் ஏர்டெல் சூப்பர் சிங்கர் , ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர்,[2] ஜெயா டிவி'யில் ஜெயா சூப்பர் சிங்கர், ஜீ தெலுங்கில் சரிகமப லிட்டில் சாம்பியன் மற்றும் சரிகமப போன்றவை ஆகும்.

பின்னணி பேசிய திரைப்படங்கள்[தொகு]

வருடம் திரைப்படம் நடிகை மொழி
1983 வசந்த கோகிலா ஸ்ரீதேவி தமிழ்
1991 குணா ரேகா தமிழ்
2000 தெனாலி தேவயானி தமிழ்

பாடிய சில தமிழ் பாடல்கள்[தொகு]

திரைப்படம் பாடல் உடன் பாடியவர் இசை பாடலாசரியர் குறிப்பு
பொண்ணு ஊருக்கு புதுசு[3] சோலைக் குயிலே காலைக் இளையராஜா முதல் பாடல்
கல்யாணராமன் மனதுக்குள் ஆடும் இளமை இளையராஜா
ரிஷி மூலம்  வாடா ௭ன் ராஜா கண்ணா
இளமை காலங்கள் படிப்புல ஜீரோ நடிப்புல ஹீரோ இளையராஜா
உதிரிப்பூக்கள் கல்யாணம் பாரு அப்பாவோட இளையராஜா முத்துலிங்கம்
தனிக்காட்டு ராஜா ராசாவே உன்ன நா ௭ண்ணிதா இளையராஜா வாலி
ஜானி ஆசைய காத்துல தூதுவிட்டு குழுவினர் இளையராஜா
பூந்தளிர் மனதில் ௭ன்ன நினைவுகளோ எஸ். பி. பாலசுப்பிரமணியம் இளையராஜா
ராஜா சின்ன ரோஜா சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்ட ௭ஸ் பி பாலசுப்பிரமணியம் சந்திரபோஸ் வைரமுத்து
மாநகர காவல் வண்டிக்கார சொந்த ஊரு மதுர ௭ஸ் பி பாலசுப்பிரமணியம் சந்திரபோஸ் வாலி

மேற்கோள்கள்[தொகு]

  1. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  2. G. Prasad (17 October 2011). "Children pitch it right at audition - The Hindu". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/children-pitch-it-right-at-audition/article2544394.ece. 
  3. "'சோலைக்குயிலே', 'ஒருகிளி உருகுது', 'ஆசையக் காத்துல தூது விட்டு'; எண்பதுகளில் இனிய குரலின் நாயகி... எஸ்.பி.சைலஜா; - சைலஜா பிறந்தநாள் ஸ்பெஷல்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-11-11.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._பி._சைலஜா&oldid=3836493" இலிருந்து மீள்விக்கப்பட்டது