சூரியம்பாளையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூரியம்பாளையம் மண்டலம்
—  பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் ஈரோடு
வட்டம் ஈரோடு
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

21,893 (2011)

1,152/km2 (2,984/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 19 சதுர கிலோமீட்டர்கள் (7.3 sq mi)

சூரியம்பாளையம் (ஆங்கிலம்:Suriyampalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு வட்டத்தில் செயல்பட்டு வந்த ஒரு பேரூராட்சி ஆகும்.

இது கடந்த 2007ஆம் ஆண்டு வரை தனி பேரூராட்சியாக செயல்பட்டு வந்தது. பின்னர் ஈரோடு மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு தற்போது மாநகரின் ஒரு மண்டலமாக செயல்பட்டு வருகிறது. வீரப்பன்சத்திரம் பகுதியில் செயல்பட்டு வந்த 1வது மண்டல தலைமையிடம் தற்போது சூரியம்பாளையம் பகுதிக்கு மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சூரியம்பாளையம் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் ஈரோடு மாநகராட்சி 1வது மண்டலம் சுமார் 34ச.கி.மீ பரப்பளவில் மொத்தம் 1,36,000 மக்கள் வசிக்கின்றனர்.

அமைவிடம்[தொகு]

மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பவானி செல்லும் பிரதான சாலையில் 7கி.மீ தொலைவில் காவிரி நதிக்கரையில் சூரியம்பாளையம் பகுதி அமைந்துள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

19 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும் கொண்ட இப்பேரூராட்சி, ஈரோடு (சட்டமன்றத் தொகுதி) மற்றும் ஈரோடு மக்களவைத் தொகுதி ஆகியவற்றிற்கு உட்பட்டது. [3]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு, இப்பேரூராட்சி 8,153 வீடுகள் மற்றும் 28,585 மக்கள்தொகை கொண்டுள்ளதைக் குறிக்கிறது. [4]

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. சூரியம்பாளையம் பேரூராட்சியின் இணையதளம்
  4. Suriyampalayam Population


"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரியம்பாளையம்&oldid=3166145" இலிருந்து மீள்விக்கப்பட்டது