ஜயதேவன் முறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிரிக்கெட் விளையாட்டில் ஒரு நாள் போட்டி, இருபதுக்கு இருபது போட்டிகளில் மழையாலோ அல்லது வேறு ஏதேனும் காரணத்தாலோ போட்டி தடைபட்டிருந்தால், இரண்டாவதாக விளையாடும் அணியின் இலக்கு ஓட்டங்களைக் கணக்கிடுவதற்குப் பயன்படும் ஒரு முறையே ஜயதேவன் முறை அல்லது வி. ஜே. டி. முறை எனப்படும். (இம்முறையின் தத்துவம் கரண்ட் சயன்ஸ் என்ற பனுவலில் வெளிவந்துள்ளது) [1] கேரளாவைச் சேர்ந்த வி. ஜெயதேவன் என்ற பொறியியலாளரால் இம்முறை உருவாக்கப்பட்டது. நடைமுறையில் இருந்து வரும் டக்வர்த்-லூவி (டி. எல்.) முறைக்கு மாற்றாக இந்திய கிரிக்கெட் கூட்டமைப்பு (ஐ. சி. எல்.) போட்டிகளில் ஜயதேவன் முறை பயன்படுத்தப்பட்டது. வி.ஜே.டி.முறை, டி.எல்.முறை இவ்விரண்டுமே சிறந்த கணித முறைகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Jayadevan, V. "A New Method for the Computation of Target Scores in Interrupted, Limited-Over. Cricket Matches." Current Science 83, no. 5 (2002): 577–586. PDF [1]
  2. Is Jayadevan's proposed method better than the Duckworth/Lewis method?
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜயதேவன்_முறை&oldid=1465190" இலிருந்து மீள்விக்கப்பட்டது