மலேசிய மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசிய மொழி
பகாசா மலேசியா
Bahasa Malaysia
بهاس مليسيا
நாடு(கள்)புருணை
மலேசியா
சிங்கப்பூர்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
20 மில்லியன்  (date missing)
ஆஸ்திரோனேசியா
  • மலாயோ பாலினேசியா
    • நியூகிளியர் மலாயோ பாலினேசியா
      • மலாயோ சும்பாவான்
        • மலாயிக்
          • மலாயன்
            • மலாய்
              • ரியாவ் மலாய்
                • மலேசிய மொழி
                  பகாசா மலேசியா
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
மலேசியா
சிங்கப்பூர்
Regulated byடேவான் பகாசா புஸ்தாக்கா (மொழி இலக்கியக் கழகம்)
மொழிக் குறியீடுகள்
ISO 639-3

பகாசா மலேசியா (Bahasa Malaysia) அல்லது மலேசிய மொழி (மலாய்) என்பது மலேசியாவின் அதிகாரப்பூர்வமான தேசிய மொழி ஆகும். மலேசிய மொழி, இந்தோனேசிய மொழியின் சொற்களில் 80 விழுக்காட்டு இணைச் சொற்களாகக் கொண்டது. இந்த மொழியை மலேசியா, சிங்கப்பூர், புருணை, தென் தாய்லாந்து, போன்ற நாடுகளில் உள்ள மக்களில் ஏறக்குறைய இரண்டு கோடி பேர் பயன்படுத்துகின்றனர்.

வரலாறு[தொகு]

1957ஆம் ஆண்டு, மலேசிய அரசியலமைப்பின் 152ஆம் பிரிவின்படி, மலாய் மொழி அதிகாரப்பூர்வமான மொழியாகப் பிரகடனம் செய்யப்பட்டது. 1986 லிருந்து 2007 வரை ’பகாசா மலேசியா’ எனும் சொல் வழக்கு ’பகாசா மலாயு’ என்று மாற்றம் செய்யப்பட்டது. இப்போது மறுபடியும் ’பகாசா மலேசியா’ என்று பழைய நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது. [1] பகாசா மலேசியா மொழியைச் சாதாரண நடைமுறையில் பகாசா அல்லது BM என்று அழைக்கிறார்கள்.[2]

பயன்பாடு[தொகு]

மேற்கு மலேசியாவில் 1968ஆம் ஆண்டும் கிழக்கு மலேசியாவில் 1974ஆம் ஆண்டு மலேசிய மொழி, ஒரே அதிகாரப்பூர்வ மொழியானது. இருப்பினும், வர்த்தகத்துறை, உயர்நீதிமன்றங்களில் ஆங்கில மொழி தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. சீன, தமிழ் மொழிகளை மற்ற சமூகத்தவரும் பயன்படுத்தி வருகின்றனர்.

மேற்கோள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசிய_மொழி&oldid=3370801" இலிருந்து மீள்விக்கப்பட்டது