தஞ்சை நாயக்கர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(తంజావూరు నాయకర్)
தஞ்சாவூர் நாயக்கர்கள்
1532–1673
தஞ்சாவூர் நாயக்கப் பேரரசின் வரைபடம்
தஞ்சாவூர் நாயக்கப் பேரரசின் வரைபடம்
தலைநகரம்தஞ்சாவூர்
பேசப்படும் மொழிகள்தமிழ், தெலுங்கு
சமயம்
இந்து சமயம் மொழிகள் : தமிழ், தெலுங்கு
அரசாங்கம்முடியாட்சி
நாயக்கர் 
வரலாறு 
• தொடக்கம்
1532
• முடிவு
1673
முந்தையது
பின்னையது
[[சோழப் பேரரசு]]
[[விஜயநகரப் பேரரசு]]
[[தஞ்சாவூர் மராத்திய அரசு]]
பிரித்தானிய இந்தியா

தஞ்சை நாயக்கர்கள் தஞ்சாவூரைத் தலைநகரமாகக் கொண்டு சோழமண்டலத்தை ஆண்டு வந்தனர்.தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர்கள். இவ்வம்சத்தின் முதல் மன்னன் சேவப்ப நாயக்கர் என்பவராவர். சேவப்ப நாயக்கர், விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயருக்கு நெருங்கிய அதிகாரியும், வட ஆற்காட்டில் அமர நாயக்கராகவும் இருந்த திம்மப்ப நாயக்கரின் மகன். தஞ்சாவூர் நாயக்கர்கள் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியை பேசினர். [1]

தஞ்சை நாயக்க அரசர்கள்[தொகு]

  1. 1532 - 1560 சேவப்ப நாயக்கர்
  2. 1560 - 1600 அச்சுதப்ப நாயக்கர்
  3. 1600 - 1632 இரகுநாத நாயக்கர்
  4. 1633 - 1673 விஜயராகவ நாயக்கர்

கோவிந்த தீட்சிதர்[தொகு]

சோழ மண்டல வரலாற்றில் இராஜராஜன், இராஜேந்திரன், இராஜாதிராஜன் எனும் முப்பெரும் சோழ மன்னர்களுக்குக் கிருஷ்ணன் இர்மன் என்னும் மும்முடிச் சோழப் பிரம்மராயன் எப்படித் தளபதியோ, விக்கிரமசோழன், குலோத்துங்கன், இராஜராஜன் ஆகிய மூவேந்தர்களுக்கு ஒட்டக்கூத்தர் எப்படி அவைக்களப் புலவரோ, அதுபோன்று அச்சுதப்ப நாயக்கர், இரகுநாத நாயக்கர், விஜயராகவ நாயக்கர் எனும் மூன்று தஞ்சை மன்னர்களுக்கும் மதியமைச்சராக, அறிவுசார்ந்த ஆசிரியராக, பெரும்புலவராகத் திகழ்ந்தவர் கோவிந்த தீட்சிதர் ஆவார். [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. தஞ்சை நாயக்கர்கள்
  2. கண்ணம்மா பாலசுப்ரமணியன், கோவிந்த தீட்சிதர், மகாமகம் 1992 சிறப்பு மலர்

இவற்றையும் காண்க[தொகு]

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தஞ்சை_நாயக்கர்கள்&oldid=3595727" இலிருந்து மீள்விக்கப்பட்டது