ஜார்ஜ் பீட்டர் மர்டாக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜார்ஜ் பீட்டர் மர்டாக்
பிறப்பு11 மே 1897
Meriden
இறப்பு29 மார்ச்சு 1985 (அகவை 87)
Devon
படித்த இடங்கள்
பணிமானிடவியலர், ethnologist, ethnographer
விருதுகள்Wilbur Cross Medal

ஜார்ஜ் பீட்டர் மர்டாக் (George Peter Murdock, மே 11, 1897 - மார்ச் 29, 1985) என்பவர், ஒரு குறிப்பிடத்தக்க மானிடவியலாளர் ஆவார். இவர், கனெடிகட்டிலுள்ள, மெரிடென் என்னும் இடத்தில் பிறந்தார். இவரது குடும்பத்தினர் அவ்விடத்திலேயே ஐந்து தலைமுறைகளாக வேளாண்மையில் ஈடுபட்டிருந்தனர். இவரது இளமைக்காலத்தில் பெருமளவு நேரத்தைப் பண்ணையில் வேலை செய்தே கழித்தார். இதன் மூலம், மரபுவழியானதும், இயந்திரமயம் ஆகாததுமான பல வேளாண்மை முறைகளைப் பற்றி அறிந்து கொண்டார். இவர் யேல் பல்கலைக் கழகத்தில் படித்து, அமெரிக்க வரலாற்றில் பட்டம் பெற்றார். பின்னர் ஹாவார்ட் சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். எனினும் இரண்டாவது ஆண்டில் கல்லூரியை விட்டு விலகி, நீண்டதொரு உலகப் பயணத்தை மேற்கொண்டார். இந்தப் பயணமும், மரபுவழிப் பண்பாடுகளில் இவருக்கிருந்த ஆர்வமும், இவரது ஆசிரியராயிருந்த ஏ. ஜி கெல்லர் என்பரிடமிருந்து கிடைத்த அகத் தூண்டுதலும் இவரை மானிடவியல் மீது ஆர்வம் கொள்ள வைத்தன. இதனால், யேல் பல்கலைக் கழகத்திலேயே மானிடவியலும் கற்றார். 1925 ஆம் ஆண்டில் முனைவர் பட்டம் பெற்று, அப் பல்கலைக் கழகத்திலேயே மானிடவியல் துறைக்குத் தலைவரானார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜார்ஜ்_பீட்டர்_மர்டாக்&oldid=2896174" இலிருந்து மீள்விக்கப்பட்டது