மாருதி சுசூக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாருதி சுசூக்கி இந்தியா லிமிட்டெட்
வகைபொது (BSE MARUTI, NSE MARUTI)
நிறுவுகை1981[1]
தலைமையகம் குர்காவுன், அரியானா, இந்தியா
முதன்மை நபர்கள்சப்பான் ஷின்சோ நாக்கனிஷி, தலைமை செயற்குழு அதிகாரி
இந்தியா ஜகதீஷ் கத்தர், தலைமை நிருவாகி
தொழில்துறைதானுந்து
உற்பத்திகள்தானுந்துகள்
வருமானம்$2.5 பில்லியன் (2005)
பணியாளர்6,903[2]
தாய் நிறுவனம்சப்பான் சுசூக்கி
இணையத்தளம்www.marutisuzuki.com

மாருதி சுசூக்கி இந்தியா லிமிட்டெட் (Maruti Suzuki India Limited) (தேபசMARUTI , முபச532500 ) இந்தியாவில் ஒரு பொது தானுந்து வணிக நிறுவனமாகும். 1981இல் மாருதி உத்யோக் என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் ஜப்பானின் சுசூக்கி நிறுவனத்தின் நிர்வாகத்தில் உள்ளது. இந்தியாவில் 1 மில்லியன் தானுந்துகளை விற்பனை செய்த நிறுவனங்களில் முதலாவது ஆகும். தற்போது இந்தியாவில் அதிக தானுந்துகள் விற்பனை செய்யும் நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் தலைமைப் பணியிடம் தில்லி அருகில் குர்காவுன் நகரில் அமைந்துள்ளது.

2020, ஏப்ரல் முதல் சிறிய ரக டீசல் என்ஜின் பெற்ற கார்களின் உற்பத்தியை மாருதி சுசூக்கி கைவிட முடிவெடுத்துள்ளது.பிஎஸ் 6 அல்லது பாரத் ஸ்டேஜ் 6 நடைமுறையை முன்னிட்டு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்நிறுவனத்தின் மொத்த விற்பனையில் 23 சதவீதம் பங்களிப்பை டீசல் என்ஜின் கொண்ட கார்கள் பெற்றுள்ளது. இனி வரும் காலங்களில் மின் தானுந்து, பெட்ரோல் என்ஜின் கார்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க உள்ளது. [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Maruti Udyog Ltd. Milesones,[1]
  2. Maruti Udyog Ltd. Company Profile [2]
  3. ஏப்ரல் 2020 முதல் மாருதி சுசூகி டீசல் கார்கள் உற்பத்தி நிறுத்தம்

உசாத்துணை[தொகு]

இந்தியாவில் மாருதி சுசுகி நிறுவனம் 6 லட்சம் பலேனோ கார்களை விற்பனை செய்து புதிய மைல்கல் சாதனையை படைத்துள்ளது!

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாருதி_சுசூக்கி&oldid=3773845" இலிருந்து மீள்விக்கப்பட்டது